உணவுத்துறையில் பயன்படும் பூஞ்சைகள்!







Mushroom, Wood Fungus, Log, Tree Fungus, Tribe








பூஞ்சைகளை அறிவோம்!



Mushroom, Mushrooms, Forest, Nature, Fungus, Autumn


பூஞ்சைகள் நுண்ணுயிரிகளில் முக்கியமானவை. இவை காளான்களை புரதம் மிக்க உணவாக மாற்றுகின்றன. நேரடியாக இல்லாவிட்டாலும் பிரெட், சீஸ், சோயா சாஸ் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன.


பூஞ்சைகள் பல்வேறு உணவுப்பொருட்களை பதப்படுத்துதலில் பயன்படுகின்றன.  பூஞ்சைகளில் நூற்றுக்கும் அதிகமான நச்சு இனங்கள் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. இறைச்சிக்கு மாற்றான உணவுப்பொருகளில் பூஞ்சைகள் பயன்படுகின்றன.

விஷமுள்ளவை, விஷமற்றவை என்பதில் பெரிய வேறுபாடுகள் கிடையாது. கவனமாக காளான் குடைகளை பார்த்தால் மட்டுமே அறிய முடியும். இதில் உருவாகும் நச்சை மைக்கோடாக்சின் என்கின்றனர். மைக்கோடாக்சின் என்பது பொதுப்பெயர்தான். காளான்களில் மட்டுமே உருவாகும் நச்சை அமாடாக்சின் என்கிறார்கள்.

வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளில் ஆஸ்பெர்கில்லஸ் பேவஸ் எனும் பூஞ்சை வளருகிறது. இதனை கவனிக்காமல் விலங்குகளோ மனிதர்களோ சாப்பிட்டு விட்டால் கல்லீரல் கெட்டு இறப்பு நேரும். மனிதர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்




பிரபலமான இடுகைகள்