இன்ஸ்டன்ட் காபி ரெடியாவது இப்படித்தான்!


Portrait, Woman, Lady, Coffee, Bar, Phone, Street, Girl
pixabay




காபி

எங்களது பத்திரிகை அலுவலகம் உள்ள காம்ப்ளக்சை மணக்க வைப்பது சத்யா காபிக்கடைதான். இத்தனைக்கும் காபி தயாரித்து வழங்கும் கடை அல்ல. காபி பொடியை அரைத்து விற்கும் கடைதான். நூற்றுக்கணக்கு மேலான கடைகள் இருந்தாலும் அந்த கட்டடத்திற்கு அடையாளமாக அந்தக் காபிக்கடை மாறிவிட்டது. 
 Black Coffee, Macaroons, Close-Up, Coffee, Color

கொஞ்சம் தள்ளி நடந்து வந்தால், மயிலாப்பூரில் டீக்கடைகளுக்கு செம போட்டியாக இருப்பது, லியோ காபி, கிரைண்ட் காபி, கோத்தாஸ் காபி கடைகள்தான். இதில் லியோ காபி, கிரைண்ட் காபி ஆகியவை காபி பொடியோடு காபியையும் தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர். 



காபிகளில் இரண்டு வகை உண்டு. அராபிகா, ரோபஸ்டா. இதில் அராபிகா விலை அதிகம். மெதுவாக வளரும் காபி இனம். காஃபீன் அளவும் அதிகமாக உள்ளது. 

காபிச்சொடி வளர்ந்து காபி கொட்டைகளை அறுவடை செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் தேவை. பச்சையாக இருக்கும் கொட்டைகளின் மேலோடு சிவப்பாக மாறியபின் அறுவடை தொடங்கும். சிவப்பாக உள்ள மேலோடு வெயிலில் காய வைத்து அகற்றப்படுகிறது. இதிலுள்ள பீன்ஸ் முதலில் பச்சையாகவே இருக்கும். பின் அதனை வறுத்து பக்குவப்படுத்தும்போது அதன் நிறம் கருப்பாக மாறுகிறது. இதனை வறுக்கும் முறைகளைப் பொறுத்து இதன் தரம் மாறுபடும். பெரிய பாத்திரத்தில் வறுபடும்போது அதன் வெப்பநிலையைப் பொறுத்து காபியின் நிறம், மணம், திடம் ஆகியவை உறுதியாகிறது. 

உலகில் நாள்தோறும் இருநூறு கோடி கப்களுக்கு மேலாக காபி பருகப்படுகிறது. தேநீருக்கு சிறப்பு செய்ய சாய்கிங்ஸ் இன்றுதான் வந்தது என்றாலும் காபிக்கு பெருமை சேர்க்க ஸ்டார்பக்ஸ் அமெரிக்காவில் உருவானது. இன்று ஸ்டார்பக்ஸ் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் சேர்ந்த தன் வணிகத்தை நடத்தி வருகிறது. 

காபியை சிலர் தண்ணீரைப் போல குடித்து வருகிறார்கள். அப்படி குடிப்பது உடலில் பதற்றத்தையும், தூக்கமின்மையையும் ஏற்படுத்திவிடும். தினசரி நம் உடலில் காபீன் இருக்கவேண்டிய அளவு 400 மி.கி. மட்டுமே. இந்த அளவு தாண்டும்போது உடலில் இதயத்தின் துடிப்பு கூடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். வயிற்றில் எரிச்சல் தோன்றும். சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும். 

நீருடன் கலக்கப்பட்ட காபி, சூடான பரப்பில் வேகமாக பீச்சியடிக்ககப்பட்டு உலர்த்தப்பட்டு இன்ஸ்டன்ட் காபி தூள் ரெடியாகிறது.

நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்