மீன் பிடிப்பதைத் தடை செய்தால் என்னாகும்?

Millions would struggle to eat and earn enough © Jason Raish

மிஸ்டர் ரோனி

மீன்களைப் பிடிப்பதை தடை செய்துவிட்டால் என்னாகும்?

ஓராண்டிற்கு மீன்களை நாம் இருபது கிலோகிராமிற்கு மேல் உணவாக கொள்கிறோம். ஏறத்தாழ பிற கோழி, ஆடுகளை விட அதிகமாக மீன் உணவுகளை மக்கள் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். இரண்டு மடங்கு வேகமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இயற்கை நம் உணவுத்தேவைய நிறைவேற்றுகிறது. அதற்காக அதனைப் பயன்படுத்துவதும் தவறில்லை. ஆனால் அதிகளவு மீன்களை பிடித்துக்கொண்டே இருந்தால் கடல் பரப்பு கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். கடல் மாசுபாடும் ஏற்படும்.

நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீன்களை பிடித்து அதன் வழியாகவே தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள். மீன்பிடிக்க தடை விதித்தால் இவர்களின் வாழ்விற்கு அரசு வழிகண்டுபிடிக்கவேண்டும்.

மேற்குலகில் சிவப்பு இறைச்சியையும் சோயா பொருட்களையும் புரத  சத்திற்காக நம்பியுள்ளனர். தெற்காசியாவில் புரதம் பெறுவதற்கான மீன்களையே பெரும்பாலானோர் நம்பியுள்ளனர். இதற்காக கடலில் மீன்களைப் பிடிக்க சில மாதங்கள் தடை விதிக்கலாம். இதன்மூலம் மீன் வளம் முற்றாக அழியாமல் காப்பாற்ற முடியும்.

மீன் பிடிக்க செல்பவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் கடலின் சூழல் கெடுகிறது. மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டால், கடல் சுத்தமாவது உறுதி.


நன்றி - பிபிசி














பிரபலமான இடுகைகள்