எப்படி சாப்பிடுவது? - டயட் முறைகள்
pixabay |
எப்படி
சாப்பிடுவது?
காலை
எட்டுமணி, மதியம் ஒரு மணி, இரவு எட்டுமணி என மூன்று வேளை உணவு சாப்பிடுவது பலருக்கும்
வழக்கமாகி இருக்கும். ஆனால் இப்படி சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை. இந்த சுழற்சியில்
அனைவரது உடலும் இயங்குவதில்லை என்பது உங்களுக்கு நோய் வந்தபிறகுதான் தெரியவரும்.
இரவுப்பணிகளுக்கு
செல்பவர்களுக்கு உடல் பருமன் நீரிழிவு பிரச்னைகள் ஏற்படும். என்ன காரணம் தெரியுமா?
நாம்
ஆதிகாலத்தில் இருந்தே சூரியனை மையமாக கொண்டு வாழ்ந்து பழகிவிட்டோம். இரவு என்பது சிங்கம்,
புலி போன்றவற்றின் வேட்டைக்காலம். மனிதர்கள் பகலில் வேட்டையாடி உண்டுவிட்டு குகையில்
பதுங்கிவிடுவதே வழக்கம். இந்த பழக்கத்தில் இருப்பவர்களுக்கு ஐ.டி பணி, நாளிதழ் பணி
என கிடைக்கும்போது அது முதலில் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் நாளடைவில் உடலில் வளர்சிதை
மாற்றம் மாற்றமடையத் தொடங்கும். இதனால் கன்னம் லேஸ் பாக்கெட் போல உப்பலாக தோன்றும்.
வயிற்றில் பீர் பெல்லி உருவாகும். ஆளே நவரச திலகம் பிரபு போல நடக்கத் தொடங்குவீர்கள்.
இதெல்லாம் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றின் தொடக்க நிலை
ஆகும்.
கனரக
காலை உணவு
காலை
உணவை வாரி விழுங்கி மலைப்பாம்பு போல நெளிவது சிலருக்குப் பிடிக்கும். அயல்கிரகத்திலிருந்து
வந்தவர்கள் போல தூங்கி விழுந்துகொண்டிருப்பார்கள். இதிலும் உருப்படியான காரியம் இருக்கிறது.
காலையில் கிலோகணக்கில் சாப்பிட்டு விடுவதால் பதினொரு மணி வாக்கில் கஃபே ஃப்ரெஷ்ஷில்
ஃபிரெஞ்ச் ஃபிரை ஆர்டர் செய்ய அவசியமிருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று
கூற முடியாது. நண்பர் பாரதி அனைத்து ஐட்டங்களையும் பார்த்து வைத்துக்கொண்டு ஆரோக்கியம்
முக்கியம் என்பார். திடீரென பார்த்தால் அனைத்து ஐட்டங்களையும் வாங்கிப்போட்டு போடா
அங்கிட்டு என வாரி விழுங்கிக்கொண்டிருப்பார். இப்படி தின்ற நொறுக்குத்தீனிகள் செரித்தபிறகுதான்
அவருக்கு டயட் ஞாபகத்துக்கு வரும். நீ என்னை கஃபேக்கு கூட்டிட்டுப் போய் கெடுத்து வைச்சிட்டே
என்பார்.
இலகுரக காலை உணவு
இந்தவகையில்
இளைஞர்கள் வருகிறார்கள். பெரும்பாலும் ஊட்டச்சத்து பானம் குடித்துவிட்டு, சிகரெட்டை
மட்டும் எடுத்துக்கொண்டு ஆபீஸ் செல்கிறார்கள். மதியம் ஹெவியாக சாப்பிட்டை காலை உணவை
ஈடுகட்டிவிடுகிறார். இந்தவகையில் அமேசிங் அருண்குமார் என்ற என்னுடைய நண்பன் சாப்பிட்டு
வந்தான். அவனைப் பொருத்தவரையில் டயட், காலை, மாலை, நோய் என்றெல்லாம் பிரித்து பார்ப்பதில்லை.
மஞ்சள் காமாலை வந்தபோதே லஸ் கார்னரில் இருந்து பீஃப் பிரியாணி வித் முட்டையோடு வாங்கி
வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அதேவாரத்தில் அவன் ஊருக்குப் போய் மூக்கு
வழியாக மூலிகை மருந்து ஊற்றி உடல் தேறியது வேறு கதை. இதில் இரவு முழுக்க சாப்பிடாமல்
இருந்து காலையில் இரண்டு இட்லி சாப்பிட்டு விரதத்தை நேர் செய்து டயட்டை பாதுகாக்கும்
குணமும் சிலருக்கு உண்டு.
ஃபிரிட்ஜ்
ரெய்டு
வாத்தி
ரெய்டு நம்மூரில் எந்தளவு பிரபலமாகியுள்ளதோ அதேயளவு நள்ளிரவில் ஃபிரிட்ஜில் புகுந்து
சோறு, குழம்பு, தயிர் என தின்று வரும் பழக்கம் உலகளவில் அதிகரித்து வருகிறது. இதற்கு
என்ன காரணம் என்றால் வெறித்தனமான டயட் முறைகள்தான் முன்னுக்கு வருகின்றன. ஸ்நாக்ஸ்களை
உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் எடுத்துக்கொள்வது தவறு கிடையாது. அதுவும் பருப்பும் பழங்களுமாக
இருந்தால் நன்று. கலோரிகளை உச்சத்திற்கு உயர்த்தும் ஹால்திராம்ஸ், ஏடூபி, லேஸ், சீட்டோஸ்,
பிங்கோ என தேர்வு செய்தால் அந்த ஆண்டவன்தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.
உலகிலேயே
ஸ்பெயின் மக்களின் உணவுப்பழக்கம் வித்தியாசமானதாக இருக்கிறது. இவர்களின் காலை உணவு
சுருக்கமாகவும், மதிய உணவு பிரதமர் மோடியின் உரை போல நீண்...டதாகவும் இருக்கும். இரவு
உணவை நள்ளிரவில் சாப்பிடுகின்றனர். இதனை ஸ்பானிஷ் ரிதம் என்று குறிப்பிடுகின்றனர்.
உணவை
கவனமாக சாப்பிட்டு உடலில் கொழுப்பைத் தேக்கி வாழ்பவர்கள் சுமோ வீரர்கள். இவர்கள் அரிசியும்
இறைச்சியும் சாப்பிட்டு கவனமாக உடலைப் பராமரித்து உடலை கொழுக்க வைக்கின்றனர். அப்போதுதான்
சுமோ வீரர்களுக்கான பருத்த உடலைப் பெற முடியும். காலை ஐந்து மணிக்கு சுமோ வீர ர்களுக்கான
பயிற்சிகள் தொடங்குகின்றன. எட்டுமணிக்கு உணவுத் தயாரிப்பு தொடங்கு பதினொரு மணி வரை
நீள்கிறது. இதனை சுமோ வீரர்கள் தாங்களாகவே செய்கின்றனர். பதினொரு மணிக்கு விருந்து
சாப்பாடு போல சாப்பிடுகிறார்கள். அடுத்த ஒரு மணிநேரத்தில் நன்கு தூங்குகிறார்கள். இப்படித்தான்
அவர்களின் உடல் எவரெஸ்ட் அளவுக்கு உயரமாகவும் ஆலமரம் போல பருத்தும் பப்பாளிக்காய் போல
வளருகிறது.
மேற்குலகின்
டயட்
ஆங்கிலப்படங்களைப்
போல எப்போதும் பன்னை மட்டுமே அவர்கள் சாப்பிடுவதில்லை. அவர்களின் உணவில் அது ஒரு முக்கியமான
பகுதி அவ்வளவுதான். சிவப்பு இறைச்சி, மீன், காய்கறிகள், பிரெட் அல்லது உருளைக்கிழங்கு,
செயற்கை சர்க்கரை சேர்த்த பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை அவர்கள் உணவில் கட்டாயம்
சேர்த்துக்கொள்கிறார்கள்.
இதில்
மீன், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. பதப்படுத்தப்பட்ட பிரெட்
போன்றவற்றை குறைத்துக்கொள்வது உடல்நலனிற்கு நல்லது.
துருவப்பகுதிகளில்
வாழும் மக்களுக்கு தாவர உணவுகளை உண்ணும் வாய்ப்பு குறைவு. அவர்கள் இதற்கு டின் உணவுகளை
நாட வேண்டும். இதனால் அவர்கள் தங்கள் உடலின் பெரும்பான்மை சத்துகளுக்கு மீன்களையே நம்பியுள்ளனர்.
மீன்களின் இறைச்சியை சாப்பிடுவதோடு அதன் தோல்களை சூயிங்கம் போல சிறிது நேரம் மெல்லுகின்றனர்.
இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின்கள் உள்ளன. இதனை இன்யுட் டயட் என்கிறார்கள் உணவு
வல்லுநர்கள்.