குளூட்டேன் - ஒவ்வாமைக்கு மூல காரணமா?



Image result for gluten
gluten


குளூட்டேன்

இன்று குளூட்டன் இல்லாத உணவுப்பொருட்களை மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். குளூட்டேன் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதன்விளைவாக குளூட்டேன் இல்லாத பிரெட், பாஸ்தா உள்ளிட்டவற்றையும் பிற பொருட்களை மக்கள் தேடி வருகின்றனர்.

மரபணுரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் ஒவ்வாமை இன்று பெருமளவு தலைதூக்கி வருகிறது. குளூட்டேன் என்பது கோதுமையில் காணப்படும் சங்கிலி அமைப்பிலான ஓர் புரதம். வெறும் கோதுமையை வாயிலிட்டு மென்றால் சூயிங்கம் போல திரண்டு வரும். இந்த தன்மைக்கு குளூட்டேன்தான் காரணம்.  பிரெட் தயாரிப்பில், குளூட்டேன் முக்கியமான பகுதிப்பொருள். அதன் நெகிழ்வான தன்மைக்கு குளூட்டேன் உதவுகிறது.

கோதுமை மாவில் நீரைச் சேர்த்து குளூட்டேனை நீக்க முடியும். நேரடியாக கோதுமையிலிருந்து குளூட்டேனை நீக்குவது சாத்தியம் அல்ல.

குளூட்டேன் இல்லாத உணவு

காய்கறிகள், பழங்கள், இறைச்சி ஆகியவற்றில் குளூட்டேன் இல்லை. இன்று குளூட்டேன் நீக்கப்பட்ட நிறைய உணவுப்பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் விலை பிற பொருட்களை விட விலை சற்று கூடுதலாக இருக்கும்.

ஒவ்வாமை ஏற்படுவதன் முக்கியக் காரணம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு குளூட்டேனை அந்நியப் பொருளாக நினைத்து எதிர்ப்பதுதான். இதன் விளைவாக, தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஆகியவை ஏற்படும்.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்