இடுகைகள்

அனிமேஷன்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்கூபி டூ துப்பறிகிறார்! - ஸ்கூபி டூ - நீ எங்கே?

படம்
சிறுவயதில் அனிமேஷன் தொடர்களை பார்க்க எந்த வாய்ப்புமில்லை. டிடி 1 இல் பெரும்பாலும் சாரங்கி, சிதார் என பழம்பெரும் கவிஞர்கள் போட்டு உருட்டிக்கொண்டிருப்பார்கள். காலத்திற்கேற்ற நிகழ்ச்சி என்றால் இரவில் ஒரு மணிநேரம் அல்லது ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு காத்திருப்பேன். சக்திமான், ஜூனியர் ஜி, கர்மா என இந்திய சூப்பர் நாயகர்கள் வருவார்கள். அதுசரி வார நாட்களில் என்ன செய்வது? அதற்குத்தான் டிடி மெட்ரோ உதவியது. ஹீமேன், பேட்மேன், மிக்கிமௌஸ் உள்ளிட்ட தொடர்களை இருபது நிமிடம் பார்க்க முடிந்தது. அதை பார்த்து முடிக்கும்போது என்னைப் பற்றி புகார் சொல்ல ஹெச்.எம் வடிவேல் டிவிஎஸ்ஸில் பறந்து வந்து வாசலில் இறங்கியிருப்பார். ஸ்பெஷல் கிளாஸ் கட் அடித்துத்தான் காமிஸ் பார்க்க வருவது வழக்கம். எட்டு மணிநேரத்தை தாண்டி 30 நிமிஷம் தனியாக உட்கார்ந்து என்ன கிழிக்கப்போகிறாய் என அப்போதே  மூளையின் உருவான புரட்சிக்காரன் அத்தனை நியூரான்களையும் உலுக்கி எடுத்தான். கக்கூஸ் பக்கம் பதுங்கி ஒண்டி விடுவிடுவென நடந்து ஓடுவேன். அம்பிகா, அடேய் தம்பி லைன்ல நின்று போகலாண்டா என கூப்பிடுவார். லைன்ல வந்தா டிவி எப்ப பா