ஸ்கூபி டூ துப்பறிகிறார்! - ஸ்கூபி டூ - நீ எங்கே?






Image result for scooby doo




சிறுவயதில் அனிமேஷன் தொடர்களை பார்க்க எந்த வாய்ப்புமில்லை. டிடி 1 இல் பெரும்பாலும் சாரங்கி, சிதார் என பழம்பெரும் கவிஞர்கள் போட்டு உருட்டிக்கொண்டிருப்பார்கள். காலத்திற்கேற்ற நிகழ்ச்சி என்றால் இரவில் ஒரு மணிநேரம் அல்லது ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு காத்திருப்பேன். சக்திமான், ஜூனியர் ஜி, கர்மா என இந்திய சூப்பர் நாயகர்கள் வருவார்கள். அதுசரி வார நாட்களில் என்ன செய்வது?

அதற்குத்தான் டிடி மெட்ரோ உதவியது. ஹீமேன், பேட்மேன், மிக்கிமௌஸ் உள்ளிட்ட தொடர்களை இருபது நிமிடம் பார்க்க முடிந்தது. அதை பார்த்து முடிக்கும்போது என்னைப் பற்றி புகார் சொல்ல ஹெச்.எம் வடிவேல் டிவிஎஸ்ஸில் பறந்து வந்து வாசலில் இறங்கியிருப்பார்.






Related image


ஸ்பெஷல் கிளாஸ் கட் அடித்துத்தான் காமிஸ் பார்க்க வருவது வழக்கம். எட்டு மணிநேரத்தை தாண்டி 30 நிமிஷம் தனியாக உட்கார்ந்து என்ன கிழிக்கப்போகிறாய் என அப்போதே  மூளையின் உருவான புரட்சிக்காரன் அத்தனை நியூரான்களையும் உலுக்கி எடுத்தான். கக்கூஸ் பக்கம் பதுங்கி ஒண்டி விடுவிடுவென நடந்து ஓடுவேன். அம்பிகா, அடேய் தம்பி லைன்ல நின்று போகலாண்டா என கூப்பிடுவார். லைன்ல வந்தா டிவி எப்ப பார்க்கிறது? என நான் சொல்வது பாதி காற்றிலே கரைந்திருக்கும். நிச்சயம் அவர் டீச்சரிடம் சொல்லத்தான் போகிறார். பிவிசி ரூலரில் சேர்த்து அடிவாங்கிக்கொள்ளலாம். ஆனால் இப்போது காமிக்ஸ்தான் முக்கியம் என்பதில் நான் சமரசமே செய்து கொண்டதில்லை.

அதில் விடுபட்டுப்போனதுதான் ஸ்கூபி டூ அனிமேஷன் தொடர். பென்10 பிஸ்கட் வாங்கி சேகரித்தவனுக்கு ஸ்கூபி டூ என்னவென்றே தெரியவில்லை. வீடு இருந்தநிலையில் கேபிளுக்கு காசு கேட்டால், அனாதை ஆசிரமத்திற்கு கால்நடையாகவே அட்ரஸ் கேட்டு போயிரு என்று சொல்லியிருப்பார்கள்.

Related image




அண்மையில் நண்பர் ஜேம்ஸ் என்பவரிடம் அடம்பிடித்து வாங்கிய ஸ்கூபி டூ சீரிஸ் மொத்தம் 25 அத்தியாயங்கள். அத்தனையும் ஜாலி பட்டாசு.

கேரக்டர் இதுதான்.

கதை இதுதான். நாளிதழில் ஃபிரெடி செய்தியை படிப்பான். அதிலுள்ள க்ரைமை இவர்களாகவே வாலன்டியராக தேடி மிஸ்டரி மெஷின் வண்டியில் பயணித்து தீர்ப்பார்கள். ஃப்ரெடிக்கு வேலை பிளான் செய்துகொண்டே இருப்பதுதான். அவனுடைய காதலி டெப்னேவுக்கு ஃப்ரெடியுடன் டான்ஸ் ஆடுவதும் அவனது பிளானை சொதப்பி வைப்பதும் ரொம்ப பிடிக்கும். அடுத்து கண்ணாடி வெல்மா. மேடம் சீரியசாக ஹிஸடரி புத்தகங்களை படித்து அத்தனை மிஸ்ட்ரிகளின் முன்கதைகளையும் மொத்த டீமுக்கே சொல்லி வழிகாட்டுவதுதான் வேலை.

ஷேஜி, ஸ்கூபி டூ இருவரின் முக்கிய வேலை உணவு வேட்டை மட்டுமே. வேதத்திற்கு முன்பு சாதம் என்பார்களே. அப்படி வேலை பார்க்கும் காம்போ கூட்டணி. சாப்பாடு தவிர அனைத்திற்கும் பிந்தும் கூட்டணியை ஸ்நாக்ஸ் கொடுத்தாவது வம்பில் மாட்டிவிட்டு கம்பு சுத்தவிடுவது மற்ற மூன்று கேரக்டர்களின் வேலை.


கதை

பேய், அமானுஷ்யம் என கதை கட்டிவிட்டு சொத்தை ஆட்டையப்போடும் ஆட்களை கண்டுபிடித்து நகர ஷெரிப்பிடம் பிடித்துக் கொடுத்து நல்ல பசங்கப்பா நாங்க என மெடல் வாங்கிக்கொள்வது ஃப்ரெடியின் தானா சேர்ந்த கூட்டத்தின் சீக்ரெட் மந்திரம்.

யாரிடம் குற்றம் குறித்து விசாரிக்கிறார்களோ அவர்களேதான் அமானுஷ்யத்திற்கு பின்னணியில் இருப்பார்கள் என்பது மூன்று அத்தியாயங்களை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது. இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பார்க்க உதவுவது ஷேகி -ஸ்கூபி- வெல்மாவின் காமெடி வசனங்கள்தான்.

நவீன கதைகளில் அனைத்து கேரக்டர்களின் தோற்றமும் மாறிவிட்டது. முழுநீளப்படத்தையும் தயாரித்துவிட்டார்கள்.  டிஸ்னிக்கு போட்டிதான் வென்றதா இல்லையா என்று தெரியவில்லை. படம் முடிந்தாலும் ஸ்கூபியையும் ஷேஜியையும் மறக்கமுடியாது. அது உறுதி.



-லோக்கல் ப்ரூஸ்லீ

நன்றி: அனிமே ஜேம்ஸ்




பிரபலமான இடுகைகள்