இடுகைகள்

சாக்லெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வினிகர் தயாரிக்க உதவும் கசப்புச்சுவை கொண்ட ஆப்பிள் !

படம்
  ஜெர்மன் சாக்லெட் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது! உண்மை. ஜெர்மன் சாக்லெட் என்பதிலுள்ள ஜெர்மன் என்பது நாடல்ல. 1852ஆம் ஆண்டு சாக்லெட் கேக்கை கண்டுபிடித்த சாம் ஜெர்மன் என்பவரைக் குறிக்கிறது. இவர், பேக்கர் என்ற நிறுவனத்திற்காக சாக்லெட் கேக் ரெசிபியை உருவாக்கினார். இதனை ஜெர்மன் ஸ்வீட் சாக்லெட் என்ற பெயரில் விற்பனை செய்தனர்.  ஜப்பானில் வெண்டிங் இயந்திரங்கள் அதிகம்! உண்மை. தோராயமாக அங்கு வாழும் மக்களில் 40 பேருக்கு, ஒரு வென்டிங் இயந்திரத்தை தெருக்களில் அமைத்திருக்கின்றனர். இதில் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், நூடுல்ஸ், ஒருமுறை பயன்படுத்தும் கேமரா ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மக்கள் காசு கொடுத்து அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.   பூஞ்சைகள் தாக்கும் உயிரினங்களின் மூளையைக் கட்டுப்படுத்தும்1 உண்மை. ஓபியோகார்டிசெப்ஸ் (Ophiocordyceps) என்ற பூஞ்சை , எறும்புகளைத் தாக்குகிறது. 9 நாட்களில் அதன் மூளையைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெறுகிறது. இப்பூஞ்சை, எறும்பைக் கட்டுப்படுத்தி, தான் வாழ்வதற்கான பணிகளை செய்ய வைக்கிறது. 1931ஆம் ஆண்டு ஓபியோகார்டிசெப்ஸ் பூஞ்சை பற்றிய தகவலை முதன்முதலில் கண்டறிந்தவர், இங்கிலாந்து ஆய்வாள

தன்னைதானே மம்மியாக செய்துகொள்ள முடியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
                  பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ ஆக்டோபஸ் ஆபத்தானவையா? ஆக்டோபஸ்கள் சிறியதாக இருந்தால் அதில் விஷம் கூடுதல் நச்சுத்தன்மையுடன் இருக்கும். பெரும்பாலும் தான் உணவாக கொள்ளும் இரை மீது விஷத்தை பாய்ச்சுகிறது. இதனால் இரை செயலிழந்து போவதோடு அதனை எளிதாக சாப்பிடும்படி மென்மையாகவும் மாறுகிறது. பத்து சென்டிமீட்டர் நீளமுள்ள நீள வளைய ஆக்டோபஸால் மனிதனைக் கொல்லவும் முடியும். ஆக்டோபஸிற்கு அதன் கரங்களை விட வில்லன்கள் வாழ்க்கையில் உண்டு. எனவே நிறம் மாற்றி த் தப்பும் குரோமாடோபோர்ஸ் அம்சங்களை கூட வைத்திருக்கிறது. ஆக்டோபஸ் இனத்திற்கு பெரும்பாலும் தோலுக்கு கீழே அதன் டெக்‌ஷரை மாற்றி தப்பிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. பிற உயிரினங்களைப் போல தன்னை மாற்றிக்கொண்டு தப்பிக்கும் டெக்னிக்குகளையும் இந்த உயிரினம் கையாளுகிறது. இதுவும் வேலைக்குஆகாதபோது, மெலனின் நிறத்தை நீரில் பரப்பிவிட்டு எஸ்கேப்பாகிவிடும். இதனால் இரையை வாசனை பிடித்து வரும் சுறாக்கள் கூட குழம்பிப் போய்விடும். கோகோ பீன்ஸ்கள் எங்கெங்கு விளைகின்றன? கானா, நைஜீரியா, கேமரூன், இந்தோனேஷியா, பிரேசில், ஐவரிகோஸ்ட் ஆகிய பகுதிகளில் கோகோ பீன்ஸ்கள் அத

சாக்லெட்டின் சுவை எங்கிருந்து வருகிறது?

படம்
mirror சாக்லெட்டுகளின் கதை முதன்முதலில் சாக்லெட்டுகள் இப்போது இருப்பது போல பாராக, சிறியவையாக கெட்டியான பொருளாக கிடைக்கவில்லை. மத்திய அமெரிக்காவில் கசப்பு பானமாக கண்டறியப்பட்டது. ஐரோப்பாவின் சந்தைக்கு வந்தபோது அதில் சர்க்கரை சேர்த்து பருகி வந்தனர். பின்னர் சாக்லெட்டை பதப்படுத்தி அதனை இன்றைக்குப் பார்க்கும் காட்பரீஸ், அமுல் டார்க் சாக்லெட் கொண்டு வந்துள்ளனர். சாக்லெட் தயாரிப்பு என்பது ஏறக்குறைய திராட்சையைப் பறித்துப் போட்டு பக்குவப்படுத்துகிறார்களே அதைப் போன்றதுதான். காபி பீன்ஸ்களை மெல்ல பதப்படுத்தி சாக்லெட்டைத் தயாரிக்கிறார்கள். சாக்லெட் என்றால் முழுமையாக சாக்லெட் மட்டுமே இருப்பதில்லை. சாக்லெட்டுடன் சர்க்கரை, பால் பொருட்கள், வாசனையூட்டும் பொருட்கள் ஆகியவற்றை கலக்குகின்றனர். வெள்ளை சாக்லெட்டில் பால் பொருட்களோடு கோகோ பட்டர் மட்டுமே இருக்கும். சாக்லெட்டில் குறைந்தளவு காஃபீன் காணப்படுகிறது. கூடவே ஊக்கமூட்டியான தியோபுரோமைன் எனும் வேதிப்பொருளும் உள்ளது. உலகளவில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர்கள் 9 கி.கி சாக்லெட்டை ஆண்டுக்கு தின்று வருகிறார்கள். இன்று சாக்லெட் த

காதலர் தினத்திற்கு சாக்லெட்டுகள் எதற்கு தருகிறார்கள் தெரியுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி காதலர் தினத்திற்கு சாக்லெட் கொடுப்பது எதற்கு? முக்கியமான தினத்தில் ரோஜா பூக்களை கொடுப்பது ஒருவகை. ஆனால் இன்றுதான் நெஸ்லே, ஐடிசி முதற்கொண்டு கடைவிரித்து சல்லீசு ரேட்டில் சாக்லெட்டுகளை விற்கிறார்கள். அப்புறமென்ன சாப்பாட்டு பிரியைகளான பெண்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? வரலாறைப் பார்ப்போம். கி.மு. 500இல் மாயன்கள் காலத்திலேயே காபி கொட்டைகளை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தனர். மாயன்களின் திருமணத்தில் இந்த சூடான சாக்லெட் பானங்களை திருமணமான தம்பதிகள் குடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். ஆஸ்டெக் இன மன்னரான இரண்டாம் மான்டெசுமா, கைத்தொழில் மன்னனாக படுக்கையில் பெண்களை வீழ்த்தி சிருங்கார சாகசங்களை செய்திருக்கிறார். இதற்காக காபி கொட்டைகளை அரைத்து குடித்து களித்திருக்கிறார். இதில் உள்ள ட்ரிப்டோபான், பெனிலெத்திலாமைன் ஆகிய பொருட்கள் காதல் உணர்வு, காம உணர்வு இரண்டையும் இமயமலை உயரத்திற்கு எழுப்பும் என்று அவர் நம்பினார். ஆனால் பின்னாளில் ஆராய்ச்சியாளர்கள் அப்படியெல்லாம் கிடையாது. அந்தளவுக்கு இந்த வேதிப்பொருட்கள் இப்பொருளில் இல்லை என அறிக்கை விட்டனர். 18

சில்வர் பாயில் ஸ்வீட்டுகள் உடலைப் பாதிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சாக்லெட்டுகளை சாப்பிட்டிருப்போம். அதிலும் பல்வேறு சில்வர் பாயில்களை அகற்றாமல் சாப்பிடுவது இயல்பானது. இது உடலை பாதிக்குமா? இந்த சில்வர் பாயிலை இறந்த மாடுகளின் குடலில் செய்வதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் குமுதத்தில் செய்தி எழுதியிருந்தார்கள். இயற்கையான பொருள் ஓகே. ஆனால் இந்த சில்வர் அல்லது அலுமினிய பாயில் பொருட்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியும் தன்மை கொண்டது. இது உடலுக்கு பாதிப்பு தரும் அளவில் இல்லை. அதனால் பயப்படவேண்டியதில்லை. திருப்தியாக பால் ஸ்வீட்டுகளை கடித்துச் சாப்பிடுங்கள். நன்றி - பிபிசி 

சாக்லெட்டுக்கு விருது வென்ற கோவை இளைஞர்

படம்
லிவ்மின்ட் கோவையைச் சேர்ந்த அருண் விஸ்வநாதன் இத்தாலியில் நடைபெற்ற சாக்லெட் போட்டியில் வெற்றிபெற்று சித்ரம் கிராஃப்ட்ஸ் சாக்லெட் கம்பெனியை பிரபலப்படுத்தி உள்ளார். உலகளவிலான கம்பெனிகள் கலந்துகொள்ளும் போட்டியில் பங்கேற்ற அருண், மாம்பழ ஃப்ளேவர் சாக்லெட்டுக்காக வெண்கலப்பத்தகம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியரின் நிறுவனம் ஒன்று சாக்லெட்ட்டிற்கான விருது பெறும் முதன்முதல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பரில் சாக்லெட் போட்டியில் இறுதிக்குள் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைத்தவர், அபாரமான வெற்றி பெற்று உலக அரங்கில் இந்திய சாக்லெட்டுகளுக்கான சந்தையையும் திறந்துள்ளார். அருண், கார்னெல் பல்கலையில் உணவு அறிவியல் பாடம் கற்றவர். எட்டுப்பேர் கொண்ட குழு, சித்திரம் சாக்லெட் நிறுவனத்தை நடத்துகிறது. சாக்லெட்டின் அடிப்படையான கோகோவை தமிழகம் மற்றும் கேரளத்திலுள்ள சில விவசாயிகளிடம் அருண் வாங்கிவருகிறார். கோவையில் உள்ள கஃபேயின் பின்புறம் சித்திரம் சாக்லெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இவர் சான்றிதழ் பெற்ற சாக்லெட் டேஸ்டரும் கூடத்தான். ”சாக்லெட் கம்பெனியின் பெயர், நிறம்