இடுகைகள்

உறுப்புமாற்று சிகிச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறுப்பு தானம் குறைகிறது! - தமிழ்நாடு விழிப்புணர்வுடன் இருக்கிறதா?

படம்
தமிழகத்தில் குறையும் உறுப்பு தானம்! தமிழ்நாடு அரசு, உறுப்புதான செயற்பாட்டுக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தன்  உறுப்பு தானத்தில் 12 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை டிரான்ஸ்டன் அமைப்பு வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் ஆண்டுக்கு 30 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றன. 1,282 பேர் மூலமாக 7, 468 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதனை சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஆனால் அமைச்சரின் பேச்சில் மருத்துவர்கள், உறுப்பு தான ஆர்வலர்கள் திருப்தி அடையவில்லை. காரணம், தொடர்ந்து உறுப்பு தான சதவீதம் குறைந்து வருவதுதான். 2017 முதல் 2018 காலகட்டத்தில் 160 தானம் தருபவர்களின் எண்ணிக்கை 140 ஆக சுருங்கிவிட்டது. இதுகுறித்து மோகன் பவுண்டேஷன் சார்பாக பேசிய மருத்துவர் சுனில் ஷெரஃப், ஜூன் 16 வரையில் 66 உறுப்பு தான அறுவை சிகிச்சைகள்தான் நடைபெற்றுள்ளன என்று கூறுகிறார். இதற்கு முக்கியக்காரணம், சாலை விபத்துகளால் மூளைச்சாவு அடையும் மரணங்களை அரசு மருத்துவமனைகள் சரியான முறையில் பதிவு செய்வதில்லை. இந்த காரணத்தினால்தான் முறையாக உற