இடுகைகள்

பல்லுயிர்த்தன்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அளவுகோலை மாற்றி காடுகளை அதிகரித்து காட்டும் இந்திய அரசு!

படம்
  இந்தியாவில் அதிகரிக்கும் பசுமைப் பரப்பு! - உண்மை என்ன? அண்மையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவிலுள்ள காடுகளின் பசுமை பரப்பு பற்றிய அறிக்கையை(2021) வெளியிட்டது. கடந்த  ஜனவரி மாதம் 13இல் வெளியான அறிக்கை  காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியது. 2019ஆம் ஆண்டை விட காடுகளின் பரப்பு அதிகரித்து 1,540 சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.  இந்திய அரசுக்காக வனத்துறை ஆய்வு நிறுவனம் (FSI), காடுகளின் பரப்பு பற்றிய ஆய்வறிக்கையை தயாரிக்கிறது. இந்த அமைப்பின் தகவல்படி, இந்திய நிலப்பரப்பில் 21.67 சதவீதம் காடுகள் உள்ளன. மொத்தமுள்ள காடுகளின் பரப்பு 7,13,789 சதுர கி.மீ. அறிக்கைப்படி, முந்தைய ஆண்டுகளை விட மாநிலங்களில் காடுகளின் பரப்பு அதிகரித்து வருகிறது என வன ஆய்வு அமைப்பு தகவல் கூறுகிறது. 1981ஆம் ஆண்டு வனத்துறை ஆய்வுநிறுவனம் உருவாக்கப்பட்டது.  1988ஆம் ஆண்டு முதல் காடுகளின் பரப்பு பற்றிய அறிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.  சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ”17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான

பல்லுயிர்த்தன்மையைக் காப்பாற்றுவது முக்கியம்! - கஸாலா ஷகாபுதீன்

படம்
  கஸாலா ஷகாபுதீன் இயற்கை சூழலியலாளர் கஸாலா ஷகாபுதீன் நிலத்தின் பயன்பாடு மாறும்போது அங்கு பல்லுயிர்த்தன்மை மாறுபாடு அடைகிறது. காடுகளை நாம் எப்படி மேலாண்மை செய்யவேண்டும் என்பதைப் பற்றி பேசிவருகிறார் கஸாலா. இவர் சூழலியலில் முனைவர் பட்டம் வென்ற இயற்கை செயல்பாட்டாளர்.  வெனிசுலாவில் உள்ள லாகோகுரியில் பழந்தின்னும் பட்டாம்பூச்சிகளைப் பற்றி ஆய்வுகளை செய்தவர் கஸாலா. இந்தியாவில் அசோகா பல்கலைக்கழகத்தின் சூழலியல் துறையில், வருகைதரு பேராசிரியராக உள்ளார். இமாலயத்தின் குமாயோன் எனுமிடத்தில் பறவைகளைப் பற்றிய ஆய்வை தனது குழுவினருடன் செய்துவருகிறார்.  ஆய்வு செய்யும் பகுதியில், ஓக் மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. இப்போது வணிகரீதியாக அங்கு பைன் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். இதனால் ஓக் மரங்களை நம்பியுள்ள மரங்கொத்தி, பூச்சி இனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இம்மரத்தை வாழிடமாக கொண்டிருந்த பறவைகளின் வாழ்க்கைமுறையும் மாறிவருகிறது. “இமாலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காடுகளில் உள்ள இயற்கை வாழ்க்கைமுறையை பலரும் அறிந்ததில்லை. இப்போது இச்சூழலுக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன” என்றார்

உணவு உற்பத்தி சரியக் காரணம் என்ன?

படம்
Sadhguru உணவு உற்பத்தி குறைகிறதா? பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகள் அழிவால், உணவு உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளதாக ஐ.நா அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.  உலகிலுள்ள பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும் காடுகள் அழிந்துவருவதால், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவின் அளவு குறைந்து வருவதாக ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது.  தற்போது, பயிர்கள் பயிரிடும் பரப்பு 20 சதவீதம் அழிவைச் சந்தித்துள்ளது. இருபதே ஆண்டுகளில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை அழுத்தமாக கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும். காடுகள், பவளப்பாறைகள், சதுப்புநிலக்காடுகள், புல்வெளி நிலங்கள் ஆகியவை அழிவையும் ஐ.நா அறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. உணவுச்சங்கிலியில் எவையும் விதிவிலக்கானவை அல்ல. பறவைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உண்கின்றன. சதுப்புநிலக் காடுகள் நீரினை சுத்திகரிக்கின்றன.  உலகிலுள்ள 91 நாடுகள் இணைந்து செய்த ஆராய்ச்சி அறிக்கைகள் மூலம் இயற்கைச்சூழலின் பாதிப்புகள் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. அழிந்த பரப்பில் 63 சதவீத தாவரங்கள், 11 சதவீத பறவைகள், 5% சதவீத மீன்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உள்ளடங்கும்.  இதில்