இடுகைகள்

குப்பைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுற்றுலா பயணிகள் நீலகிரி மலைப்பகுதியை புரிந்துகொள்வது அவசியம்!

படம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜே.இன்னோசென்ட் திவ்யா குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்த மக்கள் அதிகம் இடம்பெயர்ந்து வருகிறார்களே? வாழ்வதற்கான வாய்ப்புகளைத் தேடி இங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதன் விளைவாக பல்வேறு பழங்குடி மக்களின் எண்ணிக்கை இங்கு குறைந்து  வருகிறது. இங்கு வாழ்வதற்கான வளங்களும் வாய்ப்புகளும் குறைவாக இருக்கிறபோது எப்படி மக்களை வேறிடம் நோக்கி செல்லாதீர்கள் என்று கூற முடியும்? பிளாஸ்டிக் தடை இங்கு கடைபிடிக்கப்படுகிறதா? 2018ஆம் ஆண்டு நாங்கள் பத்தொன்பது பொருட்களை தடை செய்தோம். பின்னர் கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவுப்படி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளோம். அரசு கூறியது மட்டுமன்றி, ஐந்து கூடுதல் பொருட்களையும் இங்குள்ள மலைப்பகுதி சார்ந்து பயன்படுத்த தடை விதித்துள்ளோம். காரணம், இந்த மாவட்டம் சிறப்பு அந்தஸ்து பெற்ற பகுதியாகும். ஆழ்குழாய் கிணறு அமைக்கும் செயல்பாடுகளை குறைந்துள்ளதே எப்படி? இங்கு பத்து முதல் பன்னிரெண்டு அடியிலேயே குடிநீர் கிடைக்கும். அப்போது எதற்கு ஆழ்குழாய் கிணறு? அப்படி அமைக்கும்போது அது கீழே

பட்டாசுக் குப்பைகளை என்ன செய்வது?

பங்குனித்தேர் விழாவின் போது மயிலாப்பூரில் சோறு எப்படி மூலைக்கு மூலை சிதறிக் கிடக்குமோ, அதைவிட அதிகமாக பட்டாசு குப்பைகள் இன்று தமிழகம் முழுக்க கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது. சென்னை நகரம் இந்த தீபாவளிக்கு 82 டன் குப்பைகளை உற்பத்தி செய்திருக்கிறது. இதிலும் அடையாறு, ராயபுரம் பகுதி பட்டாசு குப்பைகளை உற்பத்தி செய்த தில் முன்னிலை வகிக்கும் பகுதிகள். இதனை தூய்மை செய்யும் பணியில் 19 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடையே மழை வேறு பெய்வதால், பணியாளர்களுக்கு பதிலாக குப்பைகளை அதுவே ஓரங்கட்டி விடுகிறது. பட்டாசுக் குப்பைகளில் வேதிப்பொருட்கள் இருக்கின்றன என்பதால், அதனை திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியிலுள்ள திடக்கழிவு நிலையத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். இங்கு ஆபத்தான திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். கடந்த ஆண்டு உருவான பட்டாசு குப்பைகளின் அளவு 90 டன்கள். தூய்மை பணியாளர்கள் வேலைக்கு முன்னதாகவே வந்து பணிகளை செய்துள்ளனர். சாதாரண நாளில் சென்னையில் 5250 டன்கள் குப்பை உருவாகிறது. மாநகராட்சி வீட்டுக்கழிவுகள் மற்றும் ப

தெரிஞ்சுக்கோ! - குப்பைத்தொட்டி

குப்பைத்தொட்டி என்பது நகரங்களுக்கானவை. கிராமங்களில் ஏதோ ஒரு இடத்தில் கொட்டி அதனை விற்றுவிடுவார்கள். ஆனால் நகரங்களில் அது சாத்தியமில்லை. காரணம், டன் கணக்கில் குவியும் அதன் வேகம்தான்.மேலும் சென்னையில் நுகரப்படும் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் பழவந்தாங்கல் சதுப்புநிலங்களின் மீது கொட்டப்படுகிறது. தற்போது அதனைப் பிரிப்பது தற்போது அரசுகளின் தோள்களின் மீது சுமத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 1, 2019 அன்று ஷாங்காய்  நகரில் அரசு, பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான அளவீட்டை  வெளியிட்டுள்ளது. மறுசுழற்சி, சமையலறை கழிவு, ஆபத்தான கழிவு பிற கழிவுகள் என அனைத்திற்கும் தனி குப்பைத்தொட்டியைப் பயன்படுத்த சீன அரசு கோரியுள்ளது. இது எந்தளவு குப்பைகளை மறுசுழற்சி செய்ய உதவும் என்று தெரியவில்லை. ஷாங்காய் நகரில் ஆண்டுதோறும் உருவாகும் குப்பையின் அளவு 9 மில்லியன் மெட்ரிக் டன்கள். நியூயார்க் நகரில் சுகாதாரத்துறை தினசரி சேகரிக்கும் குப்பையின் அளவு 12 ஆயிரம் டன்கள். 2017-18 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் செயல்பாட்டிலுள்ள குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கை 1,131. வயர்களிலான குப்பைத்தொட்டியின் விலை நூறு

கடலை சுத்தமாக்கி டைவர்கள்!

படம்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் கடலில் அறுநூறுக்கும் மேற்பட்ட டைவர்கள் குதித்து அதனை சுத்தமாக்கி கின்னஸ் சாதனை செய்துள்ளனர். இதற்கு முன்பு 614 பேர் கடலில் இதுபோல சுத்தம் செய்து சாதனை செய்துள்ளனர். தற்போது 633 பேர் செய்ததால் கின்னஸ் சாதனையாக இடம்பெற்றுள்ளது. சுத்தம் செய்யும் இப்பணி ஆண்டுதோறும் டிக்சி டைவர்ஸ் எனும் அமைப்பினரால் நடத்தப்படுகிறது. இவர்களுடன் டீர்ஃபீல்டு பீச் உமன் கிளப் ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்கள் ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து டைவர்களை அழைத்து இந்த விழாவை நடத்துகின்றனர். இவர்களின் உழைப்பால் 1,626 பௌண்டுகள் குப்பை நீக்கப்பட்டுள்ளது. இவற்றை மீன்பிடி பகுதியலிருந்து இந்த டைவர்கள் அகற்றியுள்ளது முக்கியமானது. இது மிகச்சிறப்பான நேரம் .. அனைவரும் ஒன்றாக கூடி குப்பைகளை அகற்றி கடலுக்கு நன்மை செய்தோம் என்கிறார் டைவரும் ஒருங்கிணைப்பாளருமான டைலர் பர்கைன். நன்றி: இகோ வாட்ச்

குப்பைகளை மறுசுழற்சி செய்யத் தடுமாறும் தமிழகம்!

படம்
Pammal municipality  கழிவு மேலாண்மையில் தடுமாறும் தமிழகம்! தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தினசரி உருவாகும் 14 ஆயிரத்து 500 டன் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் தடுமாறி வருகிறது. மத்திய அரசு, திடக்கழிவுகளை கையாள்வதற்கான கொள்கைகளை புதுப்பித்துள்ளது. மறுபுறம்,  உச்ச நீதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்து அபராத தண்டனைகளை விதித்துள்ளது. இதெல்லாம் எதற்கு? வீடுதோறும் அரசு பெறும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடர்பாகத்தான்.  தமிழக அரசு, இதுதொடர்பான புதியகொள்கைகள் உருவாக்கி ஆறுமாதங்கள் ஆகின்றன. ஆனால், திட்டம் இன்னும் செயற்பாட்டிற்கு வரவில்லை. கொள்கை குழப்பம் தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 124 நகராட்சிகளும், 528 நகர பஞ்சாயத்துகளும் இயங்கி வருகின்றன. இதில் சென்னை மாநகராட்சியில் மட்டும் தினசரி 5 ஆயிரம் டன் கழிவுகள் உருவாகின்றன. பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உருவாகும் கழிவுகளின் அளவு 7 ஆயிரத்து 600 டன். நகர பஞ்சாயத்துகளின் கழிவு அளவு 2 ஆயிரம் டன். தமிழக அரசு தற்போது உருவாக்கி வரும் கழிவு மேலாண்மை கொள்கையில், மக்களின் வீடுகளில் பெறும் கழிவுகளை என்ன செய்வது என்பது குற