கௌரவமற்ற படுகொலைகள்


கௌரவமற்ற படுகொலைகள் - கர்நாடகத்தில் அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள்


கர்நாடகம் இந்திய மாநிலங்களில் முதலாக வெறுப்பு பேச்சுக்களை தடுக்கும் விதமாக சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இதை வலதுசாரி பார்ப்பன பாசிச கட்சிக்ககு எதிரான நகர்வு என்று கூறலாம். எளிதாக மனித கீழ்மைகளை தட்டி எழுப்பி வாக்குகளாக மாற்றும் மதவாத கட்சிக்கு இப்படியான சட்டங்கள் பெரிய தடையல்ல. ஏனெனில் அவர்கள் எந்த சட்டங்களையும் மதிப்பதில்லை. அவர்களுடைய ஒரே சட்டம் முஸ்லீம், கிறித்தவர்கள், பட்டியல் இனத்தவர்கள் ஆகியோரை அடித்து உதைத்து உரிமைகளைப் பறித்து சொத்துகளை அபகரிப்பதுதான். அப்படித்தான் ஆரிய சம்பத்து இதுவரை செயல்பட்டிருக்கிறது. 


2022-2023 ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தில் 13 ஆணவக்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பனிரெண்டு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். இறந்தவர்கள் அனைவருமே மேல்சாதியைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பெண்கள். கொலை செய்தவர்கள் அந்நியர்களல்ல. அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். 


அடிப்படையில் மக்கள் பெண்களை சொத்தாக கருதுகிறார்கள். அவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்தால், தங்களுக்கு களங்கம் வந்துவிடுமே என்ற பயப்படுகிறார்கள். பிறகுதான், மகளைக் கொல்ல முடிவெடுக்கிறார்கள். 


தார்வாடு மாவட்டத்தில் உ ள்ள இனாம் வீரப்பூரில் மான்யா என்ற பத்தொன்பது வயது இளம்பெண், தந்தை மற்றும் கூலிப்படை ஆட்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். படுகொலையாகும்போது, அந்த பெண்மணி கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த தாக்குதலை தடுக்க முயன்ற, மான்யாவின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். குளிர்கால கூட்டத்தொடரில் கர்நாடக சட்டசபையில், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை சமூக புறக்கணிப்பு செய்யமுடியாதபடி தடுக்கும் சட்டம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார்களாம். இதனால் என்ன பயன் விளையுமோ தெரியவில்லை. 


மான்யா விவகாரத்தில் சாதி முக்கியமானது. அவர் லிங்காயத்து சாதியைச் சேர்ந்தவர். காதலித்து மணந்தவர், மடிகா சாதியைச் சேர்ந்தவர். டிசம்பர் 21,2025அன்று மான்யா மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், ஒருநாள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோகிறார். 2025ஆம் ஆண்டு மே மாதம் காதல் திருமணம் நடைபெறுகிறது. அதற்கு மான்யாவின் தரப்பில் கடும் எதிர்ப்பு உள்ளது. காவல்துறை, தாசில்தார் ஆகியோர் தலையிட்டு தம்பதியைக் காப்பாற்றுகிறார்கள். ஹாவேரி என்ற ஊரில் தங்கி குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். பின்னர், சொந்த ஊருக்கு திரும்பலாம் என்று நினைக்கும்போதுதான் விபரீதம் உருவாகிறது. 


மான்யாவின் அப்பா பெயர், பிரகாஷ் கௌடா. இவரோடு சேர்த்து ஐந்து பேர் மான்யா கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். காவல்துறை கொலைக்கு உதவிய 15 பேர்களை தேடி வருகிறது. இரு காவல்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் என மூன்று பேர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் ஆணவக்கொலைக்கு ஆதரவாக இருக்கிறார்களா என்று சந்தேகப்படும் நிலையும் உள்ளது. கர்நாடக மாநிலத்தில், பிப்ரவரியில் இருபத்தொரு வயதான குருகா சாதி பெண் கொலை செய்யப்பட்டார். காரணம், அவர் நாயுடு சாதியைச் சேர்ந்தவர் காதலித்ததுதான். காவல்துறை இதை விபத்து என்று கூறி வழக்கு பதிவு செய்துள்ளது. இதை ஆணவக்கொலை என்று வழக்கு பதிவு செய்யாதபோது இறந்தவருக்கு எப்படி நீதி கிடைக்கும்?


வட இந்தியாவில் பார்ப்பன மேலாதிக்கம் உள்ளது. இதனால் அங்கெல்லாமே சாதி வேறுபாடுகள் தீவிரமாக இருக்கின்றன. ஹரியானா, ஜார்க்கண்ட், உ.பி ஆகிய மாநிலங்களில் சாதி, மத வெறியர்கள் அதிகம். கல்வி கற்றாலும் அதை பகுத்தாய்ந்து பார்க்காத அறிவிலிகள்தான் இங்கு ஆட்சியாளர்களாக உள்ளனர். ஆனால், கர்நாடக மாநிலம் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த ஒன்று. அதேசமயம், இதற்கு முன்பு இந்தளவு தீவிரமாக விவகாரங்களை நடைபெற்றிருக்கவில்லை. ஆனால், இப்போது நடைபெறுவது ஆச்சரியத்தைத் தருகிறது. 





மூலம்

டெத்ஸ் மோஸ்ட் டிஸ்ஹானரபிள் - எஸ். பாகேஶ்ரீ

தி இந்து ஆங்கிலம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!