இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!





Image result for instagram sex




இன்ஸ்டாகிராம் செக்ஸ் தொழில் ஜரூர்.....


மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு குற்றம் நடைபெற்றுக்கொண்டே இருப்பது வாடிக்கை. முதலில் ஃபேஸ்புக்கில் வாழ்க்கை நடத்தியவர்கள், இப்போது இன்ஸ்டாவுக்கு நகர்ந்து விட்டனர். தற்போது செக்ஸ் வியாபாரமும் டிஜிட்டல் வடிவில் இன்ஸ்டாவுக்கு நகர்ந்திருக்கிறது.


graph




மேலே பார்த்த படம் சின்ன சாம்பிள்தான். இதே போல மஸ்த்தி வித் சோனா உள்ளிட்ட பெயர்களில் செக்ஸ் வியாபாரம் ஜோராக நடைபெறுகிறது. 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வீடியோ, ஆடியோ  படங்கள் என அனைத்தும் கிடைக்கிறது. இதில் வாட்ஸ் அப் வழியாக வீடியோ பார்க்கும் வசதியையும் செக்ஸ் குழு அளிக்கிறது. டிஜிட்டல் இந்தியா மோடியை நினைத்துக்கொள்ளுங்கள். தைரியம் தானாக வரும். 

சரி சந்தோஷத்தை அனுபவிக்க பணத்தை எப்படிக்கட்டுவது, யெஸ். பணமதிப்பு நீக்கத்தில் உயரத்துக்கு வந்த பேடிஎம்தான் இருக்கிறதே? முன்பின் தெரியாதவர்களை எப்படி நம்புவது என்றால் செக்ஸ் குழுவும் அதேதான் கூறுகிறது. நம்பாவிட்டால் சேவை கிடையாது. கிடைக்காது. இதிலுள்ள எண்களை அவ்வளவு எளிதாக அணுக முடியாது. முடிந்தளவு இணையத்தை ஊடகமாக பயன்படுத்துகிறவர்கள், வாடிக்கையாளர்களை நேரில் சந்திப்பதை விரும்புவதில்லை. 

டைம்ஸ் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் எண்களை தொடர்புகொண்டபோது, சிலர் கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. ரியா சர்மா, பிரியங்கா பேடிஎம் 007 உள்ளிட்ட எண்களை தொடர்புகொண்டபோது, பலர் அது தன்னுடைய அண்ணன் எண் என்று கூறினர். அவர்களைத் தேடிப் பார்த்தபோது சம்பந்தப்பட்டவர்களை யாரென்றே தெரியாது என்று கூறினர். முகம் தெரியாத விளையாட்டு இது. 


எப்படி காசு சம்பாதிக்கிறார்கள்?



graph2

இணையத்தில் கிடைக்கும் பழிக்குப்பழி வீடியோக்கள், புகைப்படங்கள்தான் முதல் குறி. அதனை சேகரித்து சின்னச்சின்ன எடிட்டிங் செய்து கஸ்டமர்களுக்கு அனுப்பினால் போதும். இப்படி மத்தியப்பிரதேசம், குஜராத் என பல்வேறு மாநிலங்களுக்கு பிஸினஸ் றெக்கை கட்டிப் பறக்கிறது. போன் கடைகளில் பெண்களின் செல்போன்களை ரெக்கவர் சாப்ட்வேர் போட்டு வீடியோக்களை எடுத்து பயன்படுத்துகிறது இந்த செக்ஸ் கும்பல். எனவே சர்வீசுக்கு கொடுக்கும்போது அந்தரங்கமாக வீடியோக்கள் உள்ள மெமரி கார்டுகளை எடுத்துக்கொண்டு கொடுங்கள். இல்லையெனில் மானம் சந்தி சிரித்துவிடும்.  



இந்தியாவில் தரவிறக்கப்படும் வீடியோக்களில் 40 சதவீதம் செக்ஸ் வீடியோக்கள்தான். 


உலகம் முழுக்க நூறுகோடி பேர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். இதில் இந்தியாவில் 80 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.(ஒரு மில்லியன் - பத்து லட்சம்) 


பார்ன்ஹப்பை தடை செய்தனர். அடுத்த சில நாட்களிலேயே பார்ன்ஹப்.நெட் என்ற பெயரில் அதே தளத்திலுள்ள வீடியோக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. 


கடந்த ஆண்டு 827 ஆபாச இணையதளங்கள் அரசால் தடை செய்யப்பட்டன. ஆனால் அவை நடைமுறையில் அமலாவதில் நிறைய தடைகள் உள்ளன. 

நன்றி: எகனாமிக் டைம்ஸ் 







பிரபலமான இடுகைகள்