பி.டெக் வெப்சீரிஸ் எப்படி? - தருண் பாஸ்கரின் திரைக்கதை அசத்தல்


Image result for b.tech web series telugu
huffingtonpost

பி.டெக்

ஜீ5 தயாரிப்பு
இயக்கம்: உபேந்திர வர்மா
கதை, திரைக்கதை: தருண் பாஸ்கர்
 Abhay Bethaganti, Kaushik Ghantasala, Madhulatha Reddy, Vishnu Mohan Chaitanya Garikipati, Meraj Ahmed and Arjun Chukkala

பெல்லி சூப்புலு படத்திற்கு முன்பு எழுதிய கதை இது என தருண் பாஸ்கர் இன்ஸ்டாகிராமில் சொல்லி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும் பேட்டி தட்டிவிட்டார். அதனால் இதில் முக்கிய கேரக்டர்கள் தடுமாறினாலும் அந்த பிரச்னை இதனால்தான் என புரிந்து கொள்ள முடியும்.

பெல்லி சூப்புலு படம் எடுத்து தேசிய விருது வென்ற இயக்குநரின் வெப் சீரிஸ் என்று விரக்தி அடையக்கூடாது என்பது விமர்சனத்திற்கு முன்பே நாங்கள் கூறும் அட்வைஸ்.


மூன்று இளைஞர்கள் தங்கள் கனவைத் துரத்துகிறார்கள். அதில் அவர்கள் ஜெயித்தார்களா? இல்லையா என்பதே கதை.

ஹரி, விக்ரம், அக்தர் என மூன்று இளைஞர்கள். இதில் மூவருக்கும் உள்ள ஒற்றுமை அனைவரும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் என்பதே. இரண்டாவது ஒற்றுமை மூவருக்கும் படிப்பைத் தொடர அதுதொடர்பான வேலைக்குச் செல்ல அணுவளவும் ஆர்வம் கிடையாது.

ஹரி, காலேஜூக்கு அட்டன்டன்ஸ் கொடுத்துவிட்டு குழந்தைகளுக்கான பொம்மை விற்கச்சென்றுவிடுவார். அவருக்கான கனவு, அப்பா காலத்தில் கைவிட்டு போன வீட்டை மீட்பது. இதற்காகவே வீட்டு முன் நின்று டீ குடித்துவிட்டு கனவுகளை துரத்தச்செல்வார். அபய் பெத்தஹந்திக்கு அருமையான ரோல். சென்டிமெண்ட் , சீரியஸ் என பிரமாதமாக நடித்திருக்கிறார்.

அதிலும் உறவுக்காரப் பெண்ணின் தற்கொலை முயற்சியைத் தடுத்து படிக்க அனுமதி வாங்கித் தரும்போது பேசும் வசனங்கள் அபாரம்.
படத்தில் இவருக்கு மட்டுமே காதல் உண்டு. அதனால் சடாரென நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்துவிடுகிறார்.


அக்தர்(Meraj Ahmed ), பைக் காதலன். வண்டியும், பற்சக்கரங்களும்தான் வாழ்க்கை என வாழ்பவரை பொறியியல் படிப்பு சோதிக்க, மயிரு என தூக்கியெறிந்து நண்பன் ரஃபியுடன் பைக்கின் ஆக்சிலேட்டரை முறுக்குகிறார். அதிக எமோஷன்களை காண்பிக்க வாய்ப்பிருந்தும் அடக்கி வாசிக்கிறார். ஏனோ?

பந்தயக்காட்சிகள், அண்ணனுடன் கனவுகளைக் குறித்து பேசுவது, ரஃபியுடனான காட்சிகள், தந்தையுடன் இறுதியாக பேசும் வசனங்கள் பார்க்க சிறப்பாக இருக்கிறது.

விக்ரம், தேர்வறையில் உட்கார்ந்து அரியர் தேர்வு எழுதுகிறார். வெளியே வரும்போது எழுதிய விடைத்தாள்களையும் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார். ஏன்? தேர்வில் பாஸாகும் ஆசை கிடையாதா? எழுதியது குறும்படத்திற்கான ஸ்கிரிப்ட் ஆச்சே. சினிமா காதலன்தான் விக்ரம். தன் கதையை எழுதுவது தேர்வறையில் கிடைக்கும் மூன்று மணிநேரத்தில்தான். இது அப்படியே தருண் பாஸ்கரின் வாழ்க்கையை சொல்கிறதோ என தோன்றுகிறது. இவரது முயற்சிகளை முறியடிக்கும் சினிமாத்துறை ஆளுமையாக நடித்தவரும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

படத்தை நம்பிக்கையுடன் முடித்திருக்கிறார்கள். தருண் பாஸ்கர் ஏன் இளைஞர்களின் டார்லிங்காக இருக்கிறார் என்றால் படத்தை பார்த்தாலே புரியும். நேர்த்தியான வெப் சீரிஸ். என்ன காமெடி கொஞ்சம் குறைவு. எமோஷனல் என்பதால் இப்படித்தான் இருக்கவேண்டும் என செய்திருப்பார்கள் போல.

படத்தின் காட்சி வேகம் குறையும்போதெல்லாம் ரகு தீக்ஷித்தின் இசை நம்பிக்கையோடு எழுந்து நம் இதயம் தொடுகிறது. தருண் பாஸ்கரை நம்பி ஜீ5 ஆப்பில் இந்த படத்தைப் பாருங்கள். போதும்.

- கோமாளிமேடை டீம்

நன்றி: பாலாஜி