பத்திரிகையாளர்களை குறிவைக்கும் நாடுகள்
பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடு!
உலகமெங்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பத்திரிகைப்பணி, பத்திரிகையாளர்களின் உயிருக்கு எமனாக மாறி வருகிறது. அரசுக்கும் மக்களுக்குமான இணைப்பு பாலமாக விளங்கும் செய்தியாளர்கள் தற்போது கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், கொல்லப்படுவதுமான நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
எல்லை கடந்த செய்தியாளர்கள் அமைப்பு செய்த ஆய்வில் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் முதலிடம் பெறுகிறது. கடந்தாண்டில் 15 பத்திரிகையாளர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பத்திரிகையாளர்களை பலிகொடுத்த இந்தியாவுடன்(5வது இடம்) அமெரிக்காவும் முதல்முறையாக(Capital Gazette படுகொலை) இப்பட்டியலில் இடம்பெறுகிறது.
சிரியா(11), மெக்சிகோ(9), ஏமன்(8) ஆகிய அபாய நாடுகளுக்கு அடுத்து இந்தியா இடம்பெற்றுள்ளது. உலகளவில் அமெரிக்கா இராக்கில் போர்புரியத் தொடங்கிய 2003 ஆம் ஆண்டு தொடங்கிய பத்திரிகையாளர் படுகொலைகள் இப்போது அங்கு நின்றுவிட்டன. இந்தியாவில் பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டத்திற்கு புறம்பான மணல்கொள்ளையை வெளிக்கொண்டு வந்த இரு செய்தியாளர்கள் அநீதியாக கொல்லப்பட்டுள்ளனர்.
உலகெங்கும் கொல்லப்பட்ட 80 பத்திரிகையாளர்களில் 63 பேர் தொழில்முறையான திறன் பெற்றவர்கள். கடந்தாண்டில்(2017) 55 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்த டைம் பத்திரிகை அவர்களுக்கு ’காவலர்கள்’ என அங்கீகாரம் கொடுத்து மகிழ்ந்துள்ளது. இதில் சவுதி அரசால் கொல்லப்பட்ட ஜமால் கஷோகியும் உள்ளடக்கம்.