வெப்பமயமாதல் அதிகரிக்கும் கார்பன் வெளியீடு


Image result for drought
Scroll.in



பஞ்சம் கார்பன் வெளியீட்டை அதிகரிக்கிறதா?

வெப்பமயமாதல் காரணமாக ஏரிகளிலும், அணைகளிலும் வற்றிவரும் நீராதாரம் கரிம எரிபொருட்களை பயன்படுத்த ஊக்குவித்து கார்பன் வெளியீட்டை அதிகரிப்பதாக ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2001-2015 காலகட்டங்களில் கலிஃபோர்னியா, இடாகோ, ஓரேகான், வாஷிங்டன் ஆகிய அமெரிக்க மாநிலங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

”நிலத்தடி நீர் குறையும் போது இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி சார்ந்த மின்சார தயாரிப்புக்கு பல்வேறு நாடுகளும் முயற்சிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்கிறார் ஆராய்ச்சியாளரான நோவா டிஃபன்பாக்.

அமெரிக்க மாநிலங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு(கொலராடோ, உடா, வாஷிங்டன், வியோமிங்), நைட்ரஜன் ஆக்ஸைடு(கலிஃபோர்னியா, கொலராடோ, ஒரேகான், உடா, வாஷிங்டன், வியோமிங்) வாயுக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு நுரையீரல் நோய்கள், அமிலமழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது.

நீராதாரங்களின் பற்றாக்குறை காரணமாக  ஏற்பட்ட கார்பன் வெளியீடு 10 கோடி டன்களாக அதிகரித்துள்ளது. 2045 ஆம் ஆண்டுக்குள் கலிஃபோர்னியா (5.1 கோடி  டன்கள்)மற்றும் வாஷிங்டன்(2.2 கோடி டன்கள்) ஆகிய மாநிலங்கள் தம் கார்பன் அளவை குறைத்துக் கொள்ளவேண்டும்  என ஒப்பந்தமிடப்படவிருக்கின்றன.

வெப்பமயமாதலால் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்கள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகள் கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன. கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்நிகழ்வு கடும் சவாலாகவே இருக்கும்.