இடுகைகள்

தொழில்நுட்பங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மாற்றும் 2020 தொழில்நுட்பங்கள் இவைதான்!

படம்
pixabay உலகம் நொடிக்கு நொடி மாறி வருகிறது. தலைமுறையாக செய்து வந்த தொழில்கள் இன்று இழுத்து மூடப்படுகின்றன. பெரும்பாலான தொழில்கள் இணையம் சார்ந்து இயங்கத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு தொழிற்கூடங்களில் ஆட்டோமேஷன் நுட்பம் இயக்கப்படத் தொடங்கிவிட்டார்கள். செயற்கை நுண்ணறிவும் வேகம் கொள்ளத் தொடங்கி உள்ளது., இதனால் வேலை இழப்பு அபாயமும் ஏற்படத் தொடங்கியுள்ளது. புத்தாண்டில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மிக்ஸ்டு ரியாலிட்டி பிளேடு ரன்னர் படத்தில் ஏஜண்ட் கே, தன் செயற்கை நுண்ணறிவுத்தோழன் ஜோய் உடன் பேசுவது போல காட்சி அமைத்திருப்பார்கள். நிஜமும் அதுதான். தற்போது டிவிகளில் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றை பாப்கார்ன் கொரித்தபடி பார்க்கிறோம். அடுத்த வரவிருக்கும் ஆண்டுகளில், விஆர் ஹெட்செட்டில் அதே விளையாட்டை நாமும் விளையாடியபடி இருப்போம். சூழல் அந்தளவு நெருங்கிவிட்டது. மும்பையைச் சேர்ந்த டெசராக்ட் என்ற மிக்ஸ்டு ரியாலிட்டு தொழில்நுட்ப கம்பெனியை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது இதையே காட்டுகிறது. இத்துறையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இமேஜினேட் என்ற நிறுவனமும் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளத