இடுகைகள்

மருத லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சார் பேரு செப்பன்டையா.....

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் சார் பேரு செப்பன்டையா.... பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இன்று ஹோட்டல்கள், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள், புரோவிசன் கடைகள், ஃபேன்சி கிப்ட் கடைகள் அதிகமாகியுள்ளன. இதை யாருமே மறுக்க முடியாது. பெரும்பாலான திறன் சார்ந்த கடைகளை விட சேவை சார்ந்த துறை அதிக பங்களிப்பு கொண்டதாக மாறியுள்ளது.  ஆனால் இவற்றில் நடந்துகொள்ளும் முறை மாறியிருக்கிறதா என்றால் இதற்கு என்ன பதில் சொல்லுவது என முழிக்க வேண்டிவரும். வாடிக்கையாளர் சார்ந்த அக்கறை முன்பிருந்ததை விட இன்று குறைந்துவிட்டது. மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் இரண்டாவது முறை சென்று வாங்கியபோதும் அழுகிய காய்கறிகளை போடுவதற்கு கடைக்காரர் தயங்குவதில்லை. முதல்முறை அவர் அழுகல் காய்கறிகளை போட்டபோதும் அவர் கவனமாக இல்லாமல் வேலை அவசரத்தில் அதை செய்திருப்பார் என நினைத்தேன்.  ஆனால் இரண்டாவது முறையும் கர்த்தரை கும்பிட்டுவிட்டு தக்காளியை எடுத்துப்போட்டபோது நான் அவரை நம்பினேன். கர்த்தர் அவரைக் காப்பாற்றினாலும்,  என்னைக் கைவிட்டுவிட்டார். அறைக்கு வந்தபிறகு ஆறு தக்காளிகளில் இரண்டை உடனடியாக குப்பைத்தொட்டிக்கு