இடுகைகள்

நேர்காணல்!- ராமச்சந்திர குஹா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் ராமன் வித்தியாசமானவன்!

படம்
ராமச்சந்திர குஹா ...... பகுதி 3 காந்தியின் ராமன், பாஜகவின் ராமன் என்ன வித்தியாசம்? காந்தியின் ராமன் அல்லா என்று கூறக்கூடியவன். உண்மையை அடிப்படையாக கொண்ட எளிமையானவன் என்பதால் அவனுக்கு பிரமாண்ட கோவிலின் தேவை கிடையாது. காந்தி மதத்தை அணுகிய விதத்தில் நிச்சயம் முஸ்லீம்களும் அவரின் கோணத்தை புரிந்துகொண்டிருக்க முடியாது. முக்கியமாக காந்தியின் ராமன் என்பவன் தனித்த மதிப்புள்ள இதயத்திலுள்ள ஒரு பிம்பம். காந்தி மென்மையான இந்துத்துவாவை வலியுறுத்தினார் என விமர்சனங்கள் உலவுகிறதே? பிறர் மட்டுமல்ல முஸ்லீம் லீக்கின் ஜின்னாவும் கூட அப்படி நினைத்தார். ஆனால் இந்து மதத்தை சமூக கட்டமைப்புக்கான கருவியாக பார்த்தவரை  இந்து மகாசபை, சங்கராச்சாரியார், இந்து வெறியர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்தனர்.  மதுரை மீனாட்சி கோவிலில் தலித் கோவில் நுழைவுக்காக கலந்துகொண்டதை தவிர்த்து கோவிலுக்கு செல்லாத ஆளுமை. தீவிர சமூக சமய சீர்த்திருத்தவாதியாக இருந்த காந்தியை எப்படி மென்மையான இந்துத்துவவாதியாக கருத முடியும்? மகாத்மா காந்திக்கு சரளாதேவி சௌதுராணியிடம் உறவு இருந்தது என ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ளார். இதுபற்ற

இந்துக்களை காக்கவே காந்தியை சுட்டனர்! - ராமச்சந்திர குஹா

படம்
ராமச்சந்திர குஹா காந்தியின் வாழ்க்கை குறித்து காந்தி: உலகை மாற்றிய காலம்(1914-1948) என்ற தலைப்பில் நூலை எழுதி பெங்குயின் வெளியீடாக கொண்டுவந்துள்ளார். நூலின் விலை ரூ. 1000. காந்தியின் இளமைக்கால வாழ்க்கை, ஆப்பிரிக்க வழக்குரைஞர் பணி, பொதுவாழ்க்கை என ஆயிரத்து இருநூறு பக்கங்களில் பிரமாண்டமாக விரிகிறது குஹாவின் நூல். காந்தி இடதுசாரியா, வலதுசாரியா அல்லது நடுநிலைவாதியா? அரசியல் செயல்பாட்டுவாதியாக அவரை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? காந்தியை குறிப்பிட்ட வகைப்பாட்டுக்குள் அடக்குவது சிரமம். அரசியல் செயல்பாட்டுவாதியாக தீண்டாமை ஒழிப்பு, சாதி நல்லிணக்கம், அகிம்சை ஆகியவற்றை தன் அடிப்படையாக்கி கொண்டவர் காந்தி. அவரின் ஆயுள் முழுக்க அமைப்புகளை தொடங்குவதும் அவை சரியான பலன்களை தராதபோது நிறுத்திவிடுவதுமாக இருந்தார். தனிப்பட்ட ஒருவருக்கு என்றில்லாமல் அனைவருக்குமான சிந்தனை காரணமாகவே அனைத்து விஷயங்களையும் காந்தி செய்தார். ஆங்கிலேயர்களின பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்த்தாரே தவிர அம்மக்களை வெறுக்க கூறவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். உயர்சாதியில் பிறந்தது காந்தியின் அரசியல் சமூக பு