இடுகைகள்

புல்வாமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவுடன் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை தவிர்க்கமுடியாது! - வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

படம்
    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்     வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முந்தைய அரசு கடைபிடித்த வெளிநாட்டு கொள்கைகளுக்கும் இப்போதையை அரசு கடைபிடிக்கும் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இன்று உலகம் நிலையில்லாது மாறிவிட்டது. அதனால் அதற்கேற்ப நாம் வெளியுறவுக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டியதிருக்கிறது. அமெரிக்கா தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளிலும் மாறுதல்கள் தொடங்கிவிட்டன. மிகவும் ஊக்கம் கொண்ட நாடாக ரஷ்யா, ஜப்பான் ஆகியவை உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளி்ன் அதிகாரம் மாறி வருகிறது. இதற்கேற்ப இந்திய வழியில் நாம் நடைபோட்டால்தான் நெ.1 அந்தஸ்தை நாம் அடைய முடியும். உள்நாட்டு தீவிரவாதம், வறுமை, பொருளாதார வளர்ச்சி என பல்வேறு அம்சங்களோடு போராட வேண்டியுள்ளது. கடல் பாதுகாப்பு, எல்லைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை இலங்கை, மொசாம்பிக், நேபாளம், ஏமன் ஆகிய நாடுகள் முக்கியமானவை. நாம் பல்வேறு நாடுகளுக்கு கோ்விட் -19 நோய்த்தொற்றுக்கு மருந்துகளை அனுப்பி உதவியுள்ளோம். இந்தியா தேசிய அளவிலும், உலக அளவிலும் தெற்காசியாவில் முக்கியமான நாடு எ

ஜெய்ஸ் இ முகமது அமைப்பு மிகப்பெரிய வெற்றியை ருசித்திருக்கிறது

படம்
Scroll.in நேர்காணல் பத்திரிகையாளர் அனடோல் லீவன் தமிழில்: ச.அன்பரசு இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது இறுதியான தீர்வைத் தருமா? ராணுவ நடவடிக்கை சிறிய அளவில் தீர்வுகளைத் தரலாம். பாகிஸ்தானுக்கு பெரிய அளவு முதலீடு கிடையாது. அந்நாட்டிற்கு சீனா, சவுதி அரேபியா ஆகியோர் உதவுகின்றனர். ராணுவத்தாக்குதல் தொடங்கினால் இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடப்பது நிச்சயம். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயல்வதே இதற்கு தீர்வு. இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?  இந்தியா அமெரிக்காவை அணுகி, பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகளை அளிக்கலாம். ஆப்கன் பிரச்னையில் ட்ரம்ப் அரசுக்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்தியா சொன்னவுடன் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்து விடாது. மோடி பேச்சுவார்த்தைக்கான நேரம் கடந்துவிட்டது என்று கூறியிருக்கிறாரே? மோடி பேசுவது அனைத்தும் வெற்றுப் பேச்சு. இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுத்தால் அது பேரழிவாகவே இருக்கும். போரின் பின்னணியில் உருவாகும் தீவிரவாதம், அகதிகள் பிரச்னைகளை சமாளிப்பது சாதாரண காரியம் அல்ல. தாமதமாகவேனு

பாகிஸ்தான் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது

படம்
scroll.in புல்வாமாவில் 43 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலைத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதற்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி முன்னாள் வீரர் லியோடெனன்ட் ஜெனரல் டிஎஎஸ் ஹூடா கூறுகிறார். ஐஎஸ் தீவிரவாதக்குழு காஷ்மீரில் வளர்ந்து வருகிறதா? நான் அப்படி யோசிக்கவில்லை. அவர்களிடம் அவ்வளவு வலுவான கட்டமைப்பு கிடையாது. தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தாலிபா, ஹிஸ்புல் முஜாகிதின் ஆகிய அமைப்புகளே காரணம். ஐஎஸ் அல்லது அல் கொய்தா தீவிரவாத அமைப்புகள் இத்தாக்குதலில் இருக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு காஷ்மீரில் வளர்ந்து வரும் பிரச்னைகளைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதனைக் கொஞ்சம் விளக்குங்களேன். நீங்கள் இன்னும் காஷ்மீர் பிரச்னையில் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேரும் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த ஆண்டும் அதிகளவிலான பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதை இந்தியா இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில