இடுகைகள்

முத்தாரம் Mini லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலில் சிப்கள் பொருத்துவதே நம் வளர்ச்சி

படம்
உடலில் பொருத்தும் சிப்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? 2016 ஆம்ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற CeBit நிகழ்வில் சிப்களை கைகளில் பொருத்துவது பற்றி விவரித்தனர். இந்த சிப்கள் எதிர்காலத்தில் நம் வீட்டுக்கதவை திறக்கும் சாவியாக, பொருட்களை வாங்கும் பணமாக என பல்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். மருத்துவ காரணங்களுக்காக உடலில் சிப்களை பொருத்துவதற்கும் வேலைக்காக பொருத்துவதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? சில வேலைகளை திறம்பட செய்வதற்காக சிப்களை பொருத்துவதில் தவறில்லை. அது உங்கள் வேலைத்திறனை அதிகரிக்கிறது. மூளையில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவி திறனை அதிகரிக்கிறது என்றாலும் தற்கொலை எண்ணம், ஆக்ரோஷ உணர்வு போன்ற பக்கவிளைவுகளும் இல்லாமலில்லை. சிப் பொருத்தலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை. காஸ்மெடிக் ஆபரேஷன்கள் போன்றவைதான் இதுவும் என்பதால் பயப்பட அவசியமில்லை. என்னென்ன நோய்களுக்கு சிப்கள் வரத்தொடங்கியுள்ளன? இதயநோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கான சிப்களை வெளிவரத்தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் எமர்ஜென்சியின்போது நோயாளியின் உடலிலுள்ள

சமூகநலத்திட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன

படம்
இந்திய அரசு சிஎஸ்ஆர் திட்டங்களுக்கான நிதியை இரண்டு சதவிகிதம் அதிகரித்து அதனை கட்டாய செயல்முறையாக்கியுள்ளது. பிராண்டு மதிப்பு மற்றும்  கண்துடைப்பாக சிஎஸ்ஆர் செயல்பாடுகளை பெருநிறுவனங்கள் செய்துவருகின்றன. சமூகத்தில் அது என்ன விளைவை ஏற்படுத்தும். விளக்குகிறார் சம்ஹிதா குட் சிஎஸ்ஆர் அமைப்பு நிறுவனர் பிரியா நாயக்.  பெருநிறுவனங்கள் சிஎஸ்ஆர் திட்டத்தை எம்முறையில் செயல்படுத்தியுள்ளன? 2013 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி சில கம்பெனிகள் சிஎஸ்ஆர் செயல்பாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் 95.4 பில்லியன் டாலர்களிலிருந்து 138.28 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதனை கட்டாயச்சட்டமாக்கும்போது மேலும் பல்வேறு நிறுவனங்கள் இச்செயல்பாட்டை மேற்கொள்வார்கள். அரசுடன் இணைந்து செயல்படுவது இதில் என்ன விளைவை ஏற்படுத்தும்? இந்தியாவில் மக்கள் நல திட்டங்களை பெருமளவில் முன்னெடுப்பது இந்திய அரசு. ஆனால் அதனை ஊக்கமாக செய்வதில்லை. பெருநிறுவனங்கள் அரசுடன் இணையும்போது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எளிதாக தீர்க்கமுடியும். கேர்மதர் திட்டத்திற்கு மோ

மதங்களுக்கு விழிப்புணர்வு நோக்கம் கிடையாது!

படம்
முத்தாரம் Mini வாழ்கைக்கு அர்த்தம் தருவதே பல்வேறு மதங்களில் நாம் வாசிக்கும் கதைகள்தான் என்கிறீர்கள். ஆனால் இவை வரலாற்று உண்மைகளையே மறுக்குமளவு அதிகரித்துள்ளதே? நாம் வாழ்வதற்காக கதைகளை கூறுகிறோம் என்பார் ஜோன் டிடியன். உலகில் நமது இடத்தைப் பற்றி இக்கதைகளே உணர்த்துகின்றன. மதம், அரசியல் வேறுவேறு என பிரித்து வரலாற்று உண்மைகளை சொல்லும் கதைகளை நாம் புரிந்துகொண்டது 18 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான். தேவாலயங்கள் வரலாற்று புறக்கணித்து கூறிய கதைகள் அதிகாரத்திற்கு மக்கள் பணிந்திருக்கவேண்டும் என்ற லட்சியத்தை மையமாக கொண்டவை. மக்களுக்கு அறிவு புகட்டும் நோக்கம் அவற்றுக்கு கிடையாது. மதம் குறித்த பல்வேறு அடுக்குகளான கதைகளை எப்படி பார்க்கிறீர்கள். இந்தியாவின் பல்வேறு மதங்களை ஐரோப்பியர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பது இதன் காரணமாகத்தான். அசோகர், அக்பர், அம்பேத்கர் என இந்திய மனிதர்களின் வாழ்வில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறுமதங்கள் இருந்தாலும் மக்கள் பிரிந்துசெல்லாமல் ஒன்றாக வாழும் ஜனநாயக நாடாக இந்தியா எனக்கு பெரும் ஆச்சரியம் தருகிறது. -நீ

பாலியல் தளங்கள் குடும்பங்களை சிதைப்பதில்லை!

படம்
முத்தாரம் Mini நீங்கள் எழுதியுள்ள சைபர் செக்ஸி நூலில் அதிகார கட்டமைப்பை பாலுறவு தகர்த்ததாக கூறியுள்ளீர்கள். கலாசார மதிப்பு கொண்ட இந்தியாவில் அது எப்படி சாத்தியம்? இந்தியாவில் கலாசார பெருமையை குடும்பங்கள் அடைகாத்து வைத்திருந்தன. அவை பெண்களை இல்லத்தரசி என்ற பெயரில் ஆசைகளை மறைத்து வைத்திருந்தன. அந்தரங்கமான ஆசைகள் விதிகளை மாறுவதாக மாறியதது இப்படித்தான். குடும்பங்களை பாலியல்தளங்கள் குலைப்பதாக வரும் அவதூறு அதிகாரம் உடைபடும் தவிப்பினால் ஏற்படுவதுதான். உங்களது பாலியல் சிந்தனைகள் தெற்காசியாவின் உயிரியல் சார்ந்த அணுகுமுறையை விட மேம்பட்டதாக உள்ளதே? இந்தியாவில் கலாசாரம் சார்ந்ததாக கல்வியை பார்க்கின்றனர். பாலியல் கல்வியை நாடு முழுவதும் அமுல்படுத்த அரசு சுதந்திர சிந்தனையாளர்களின் மூலம் முயற்சிக்கவேண்டும். அரசின் ஒப்புதல்/தடை செய்யப்பட்ட ஆபாசம் என்பதன் பொருள் என்ன? உங்களையும், உங்களது ஆசைகளையும் தவறு என்று கூறும் சட்டத்தால் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது? தனிப்பட்ட மனிதரின் உரிமை, அரசியல் ஏன் பிரச்னையாகிறது? இந்த விவகாரத்தில் இரண்டும் பிரிக்க முடியாத சிக்கல்கள

லோக்ஆயுக்தா இல்லையேல் இந்தியாவில் அமைதி கிடையாது!

படம்
நீங்கள் லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்தபோது சந்தித்த வழக்குகளைக் கூறுங்கள். என்னுடைய பதவிக்காலமான 2006-2011 வரை 23 ஆயிரம் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளோம். சுரங்க அதிபர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை அதிகம் சந்தித்தேன். 2016 ஆம் ஆண்டு தொடஊழல் எதிர்ப்பு அமைப்பு, லோக் ஆயுக்தாவை பலவீனப்படுத்தியதா? 2013 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரசின் சித்தராமையா, தன்னிச்சையாக ஊழல் எதிர்ப்பு அமைப்பு((ABC) உருவாக்கி, அதிகாரங்களை வழங்கினார். அரசு அனுமதியின்றி அதிகாரிகளை விசாரிக்க முடியாதென்ற கட்டுப்பாடுகளும் இதற்கு உண்டு. ஊழலில் தண்டிக்கப்படும் அளவு என்ன? 20% மட்டுமே. இந்தியா முழுக்கவுமே ஊழல் தடுப்பு செயல்பாடு மந்தம்தான். நிலைமை மாறும் என நம்புகிறீர்களா? மாறும் என நம்புகிறேன். ஆனால் எப்போது என கேட்காதீர்கள். மாறாதபோது இந்தியாவில் அமைதி சாத்தியமில்லை. -என்.சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் நீதிபதி .

நீதிமன்றத்தை விட நாடாளுமன்றமே உயர்ந்த அமைப்பு

படம்
முத்தாரம் Mini அயோத்தியாவில் ராமர்கோவில் கட்ட தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளீர்கள். இதனை விளக்குங்களேன். கோவிலை கட்ட 400 ஆண்டுகளாக முயற்சி நடைபெற்றுவருகிறது. இது புதியகோரிக்கை அல்ல. முகலாயர்கள், ஆங்கிலேயர்களின் வருவாய்த்துறை ஆவணங்களில் ராமர் பிறந்த இடம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 1872-2003 காலகட்ட ஆவணங்களில் கோவில் இருந்ததும், அழிக்கப்பட்ட விவரங்கள் உள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக பாஜக சொல்லிவருகிறதே? ராமர்   கோவிலை கட்டும் லட்சியத்தில் பாஜக பின்வாங்கவில்லை. அதன் நிலைப்பாடு மாறினாலும் அதன் பொறுப்பு நீர்த்துப்போகவில்லை. ராமர்கோவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது தனிநபர் மசோதா எதற்கு? இது கோர்ட்டை அவமதிப்பதாகாதா? நாடாளுமன்றம் நீதிமன்ற வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய அதிகார மையம். 1950 ஆம் ஆண்டு ஜமீன்தாரி முறையை ஒழித்தபோது கூட சரியான முடிவை நாடாளுமன்றம் எடுத்தது. தனிநபர் மசோதா கொண்டு வந்தது கோர்ட் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதோ, அவமதிப்பதோ ஆகாது. கோர்ட் தீர்ப்பை கட்சிகள் மீறப்போவதில்லை. இவ்விஷயத்தில் அவ

தலித் இலக்கியம் அரசியல் லாபத்திற்கானது அல்ல!

படம்
முத்தாரம் Mini உங்களது பயணம் எப்படி தொடங்கியது? 1995 ஆம் ஆண்டு என் முஸ்லீம் குடும்பத்தைப் பற்றிய கதை வெளியானது. டெல்லியிலுள்ள நேரு பல்கலையில் முனைவர் படிப்பின்போது தலித் இலக்கியம் வாசிக்க தொடங்கினேன். ஓம்பிரகாஷ் வால்மீகி, மராத்தி எழுத்தாளர்கள் என் பார்வையை விரிவாக்கினார்கள். ஜாதி பற்றிய தங்களது புரிதலை கூறுங்கள். ராஜஸ்தானில் நடந்த திருமணத்தில் பங்கேற்றேன். தாகத்திற்கு நீர்கேட்டபோது, ராஜபுத்திர பெண்மணி ஜாதி கேட்டு நீர்மறுத்ததுதான் சாதி பற்றிய முதல் கொடும் அனுபவம். நியூ கஸ்டம் என்ற கதை, என் தந்தைக்கு டீக்கடையில் நேர்ந்த அனுபவம்தான் இன்ஸ்பிரேஷன். தலித் இலக்கியம் அவசியமா? இலக்கிய கட்டமைப்புக்குள் நுழைய முடியாத தலித் எழுத்தாளர்கள் தாங்களாகவே கட்டமைத்த இலக்கியங்களின் பெயர்தான் அது. சமர், வால்மீகி என தனித்தனி அமைப்புகளாக பிராமணியத்துக்கு எதிராக போராடுவதும் சாதியை ஒழிக்க உதவுமா என்பது சந்தேகம்தான்.என் கதைகளிலுள்ள கதாபாத்திரங்கள், எப்போதும் தலித் அடையாளங்களை சுமந்து திரிவதில்லை. அப்படி கூறுவர்கள் அதனை தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துபவர்கள்தான். -எ

இந்தியாவின் வன்முறை கலாசாரம் மாறவேண்டும்

படம்
முத்தாரம் Mini உங்களுடைய நூல் இந்தியாவைப் பற்றியது இல்லையா? நான் பார்த்த காட்சிகள், உணர்ந்து அனுபவப்பூர்வ விஷயங்களை வாசகர்களுடன் நேர்மையாக பகிர முயற்சித்திருக்கிறேன். போக்குவரத்து, லஞ்சம் உள்ளிட்ட விஷயங்களை விட மனிதர்களை பாகுபாடாக நடத்துவது என்னை பெரிதும் வருத்திய விஷயம். அதேசமயம் 2015 வெள்ளத்தின்போது வேறுபாடுகளை உடைந்தது நெகிழ்ச்சியான நிகழ்வு. இந்தியாவில் மாறவேண்டிய விஷயங்களாக எதனைக் கூறுவீர்கள்? தென்னிந்தியாவில் கும்பல் வன்முறை, பசு தொடர்பான தாக்குதல்கள் குறைவு. பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிரான கடுமையான சட்டங்களை அரசு உருவாக்குவது அவசியம். கொலை, தாக்குதல் குறித்து வேகமான விசாரணைகள் நீதிகிடைக்க அவசியம். இத்தாலிய மாப்பிள்ளை மாமியார் வீடான சென்னை எப்படியிருக்கிறது? டெல்லி மற்றும் மும்பையை விட சென்னை அமைதியான நகரம். எனக்கு வட இந்தியாவும் தென்னிந்தியாவும் ஒன்று கலக்கும் சௌகார்பேட்டை பிடித்த இடம். போக்குவரத்து நெரிசலும் இங்கு நம் பொறுமையை அதிகம் சோதிப்பதில்லை. -கார்லோ பிஸாட்டி, பத்திரிகையாளர்.

மகளிர் ஆணையம் மீது அவதூறு பரப்புவது தவறு!

படம்
முத்தாரம் Mini ‘#மீ டூ’ வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இது பற்றி தங்கள் கருத்து? உலகளவில் #மீ டூ இயக்கம் தொடங்கி ஓராண்டிற்கு பிறகு இந்தியாவில் பாலியல் தொல்லைகள் பகிரங்கமாகியுள்ளன. பெண்கள் முன்வந்து தமக்கு நடந்த அநீதியை பேசத்தொடங்கியுள்ளது நல்ல அறிகுறி. நடிகை தனுஸ்ரீ தத்தா பேசத்தொடங்கியதும் அவரை பெண்கள் கமிஷனிலிருந்து அணுக முயற்சித்தும் முடியவில்லை. எங்களது தொலைபேசி எண்ணைக் கொடுத்தும் கூட தனுஸ்ரீயின் மேனேஜர் எங்களை இன்றுவரை தொடர்புகொள்ளவில்லை. கேரளாவின் கன்னியாஸ்த்ரீகள் விவகாரத்தில் பாவமன்னிப்பை நிறுத்த கோரியுள்ளீர்களே? பெண்கள் ஆணையத்தின் கோரிக்கைக்கு பிறகு கிறிஸ்தவ அமைப்புகள் அதில் நாங்கள் தலையிடக்கூடாது என போராடின. பெண்களை மிரட்டுவது கூடாது என்ற நோக்கத்தை புரிந்த சிலர் எங்களது கோரிக்கையை ஆதரித்தனர். மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் குற்றச்சாட்டுகளை எழுப்புவதாக கூறுகிறார்களே? பாஜக ஆளும் ம.பி,ஹரியானா, உ.பி, சத்தீஸ்கர், உத்தர்காண்ட் மாநிலங்களிலும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஊட

அரசின் கைப்பாவை நாங்கள் கிடையாது!

படம்
முத்தாரம் Mini ‘#MeToo’ வெளிநாடுகளிலிருந்துஇந்தியாவுக்கும்வந்துவிட்டது.இதுபற்றி தங்கள் கருத்து? உலகளவில் #MeTooஇயக்கம்தொடங்கிஓராண்டிற்குபிறகுஇந்தியாவில்பாலியல்தொல்லைகள்பகிரங்கமாகியுள்ளன.பெண்கள்முன்வந்துதமக்குநடந்தஅநீதியைபேசத்தொடங்கியுள்ளதுநல்லஅறிகுறி.நடிகைதனுஸ்ரீதத்தாபேசத்தொடங்கியதும்அவரைபெண்கள்கமிஷனிலிருந்துஅணுகமுயற்சித்தும்முடியவில்லை.எங்களதுதொலைபேசிஎண்ணைக்கொடுத்தும்கூடதனுஸ்ரீயின்மேனேஜர்எங்களைஇன்றுவரைதொடர்புகொள்ளவில்லை. கேரளாவின்கன்னியாஸ்த்ரீகள்விவகாரத்தில்பாவமன்னிப்பைநிறுத்தகோரியுள்ளீர்களே? பெண்கள்ஆணையத்தின்கோரிக்கைக்குபிறகுகிறிஸ்தவஅமைப்புகள்அதில்நாங்கள்தலையிடக்கூடாதுஎனபோராடின. பெண்களைமிரட்டுவதுகூடாதுஎன்றநோக்கத்தைபுரிந்தசிலர்எங்களதுகோரிக்கையைஆதரித்தனர். மத்தியஅரசின்கைப்பாவையாகசெயல்பட்டுஎதிர்க்கட்சிகள்ஆளும்மாநிலத்தில்குற்றச்சாட்டுகளைஎழுப்புவதாககூறுகிறார்களே? பாஜகஆளும்ம.பி,ஹரியானா, உ.பி, சத்தீஸ்கர், உத்தர்காண்ட்மாநிலங்களிலும்அரசியல்வாதிகள்மீதுநடவடிக்கைகளைஎடுத்துள்ளோம்.  ஊடகங்கள்எதிர்மறைவிஷயங்களையேவெளிச்சமிட்டுகாட்டிஎங்களின்பணியைகுறைசொல்வதுதான்

இதயநோய் அதிகரிப்பு காரணம் என்ன?

படம்
முத்தாரம் Mini அமெரிக்காவில் இதயநோய்களால் இறப்பவர்களின் அளவு 41% ஆக(1990-2016) குறைந்துள்ளது. அதேவேளையில் இந்நோயின் தாக்கம் இந்தியாவில் 34% அதிகரித்துள்ளதே? தெற்காசியர்கள் மற்றும் இந்தியர்களுக்கு ஏற்படும் இதயநோய் சிக்கல்களுக்கு என்ன காரணம் என உண்மையிலேயே தெரியவில்லை. இன்று பெரும்பாலும் வெளிவரும் ஆய்வுகள் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கானவை. இந்தியர்களை மாவுச்சத்தை அடிப்படையாக கொண்ட உணவுப்பழக்கம், புகைப்பிடித்தல், அதிகரிக்கும் லிப்போபுரோட்டின் அளவு ஆகியவற்றை இந்தியர்களின் இதயநோய் பிரச்னைக்கு காரணமாக கூறலாம். 25 - 30 வயதுக்குள் ஒருவரை இதயநோய் தாக்குவதற்கு என்ன காரணம்? அமெரிக்கர்களுக்கு பதினாறு வயதில் இதயநோய்களுக்கான அறிகுறிகள் தொடங்குவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 25-30 வயதுக்குள் இதயநோயால் தாக்கப்படும் தெற்காசியர்களின் எண்ணிக்கை உலகிலேயே அதிகம். உணவும் வாழ்க்கை முறையும் காரணம் என்றாலும் துல்லியமான ஆராய்ச்சிகள் கிடையாது என்பதே உண்மை. இதயமருத்துவத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? பேஸ்மேக்கர், இதயமாற்று சிகிச்சை, செயற்கை இதயம், ஆஞ்சியோகிராப

கற்பனைத்திறன் கட்டுப்பாடுகளை உடைக்க உதவியது!

முத்தாரம் Mini உங்களை பிறர் குறைத்து மதிப்பிடும்போது என்ன நினைப்பீர்கள்? அமெரிக்காவின் சென்ட்ரல் ஃபால்ஸ் பகுதி தொடங்கி என்னைக் குறித்த அரைகுறை மதிப்பீடுகளை கண்டு வருகிறேன். நாடகத்துறையில் ஈடுபாட்டுடன் செயல்படுவது, எனக்குள்ள எல்லை என பிறர் என்மீது திணித்த கருத்துக்களை நான் கடந்து செல்ல உதவியது. ஹாலிவுட்டில் நிறைய இனவேறுபாடுகள் உள்ளன. அது பற்றி.. மற்றவர்கள் உங்களை பெட்டிக்குள் அடைக்கும் வரை மௌனமாக இருக்காமல் பேசவேண்டும் என்று என் கணவர் கூறுவார். இன்று கருப்பினத்தவர்கள் சினிமா தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றின் முக்கியமான இடத்தில் நம் மனதிலுள்ள சக்தியை ஒவ்வொருவரும் உணரும் இடம் இது. நடிப்பு என்ற எல்லையைக் கடந்து குழந்தைகள் நூலான Corduroy Takes a Bow வை எழுதியிருக்கிறீர்கள். எப்படி? கதையில் வரும் துருதுரு கரடியின் இயல்பிலிருந்த நானும் சிறுவயதில் அதேபோல் தண்டிக்கப்பட்டுள்ளேன். இரவு கதை சொல்லும்போது என்னையும் அக்கதையில் சேர்க்கமுடியுமா? என என் மகள் கேட்டதற்காகவே நான் குழந்தைகள் நூலை எழுதினேன்.   -வயோலா டேவிஸ், ஆங்கில திரைப்பட நடிகை

காந்தி இந்தியர்களை கோபப்படுத்தியது உண்மை!

படம்
முத்தாரம் Mini காந்தி அறிமுகமானது எப்படி? காந்தியை முதன்முதலாக குஜராத்தி மொழி இலக்கியம் வழியாகவே அறிந்தேன். காந்தி கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என அவரைச் சுற்றியிருந்தவர்கள் எழுதியவை என்னை ஈர்த்தன. காந்தியின் தொகுப்பு நூல்களை அவரறிந்த குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வழியே படித்து மகிழ்ந்தேன். காந்தியைப் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் அவர்களைப் பற்றி படிப்பது அவசியம். வலதுசாரிகள் காந்தியை சிறுமைப்படுத்த முயல்வது ஏன்? சிறுமையாக அதனை நான் கருதவில்லை. காந்தியின் சமூக, தத்துவார்த்த கலாசார பார்வை வலதுசாரிகளுக்கு மட்டுமல்ல அவரது தொண்டர்களுக்கே பதற்றத்தை சமநிலையின்மையை ஏற்படுத்தியது. காந்தியின்றி இந்தியா சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்ற கருத்துக்கள் இவ்வெண்ணத்தின் வெளிப்பாடுதான். இதன் தீவிரம்தான் 70 வயதான காந்தியை துப்பாக்கியால் சுட்டு கொன்றதும் கூட. காந்தியின் எழுத்துக்களிலுள்ள தனித்த அடையாளம் என்ன? வெளிப்படைத்தன்மை. காந்தி தான் எழுதிய நூல்களில் தன் உள்ளார்ந்த ஆசைகளையும், அவை நிறைவேறாமல் தோற்றுப்போனதையும் நேர்மையாக எழுதியுள்ளார். -திரி

ஊடகங்களுக்கு நாங்கள் ராவணனாக தெரிகிறோம்

படம்
முத்தாரம் Mini சந்திரசேகர் ஆசாத், ராவண் என இரண்டு பெயர்களில் உங்களை அழைக்கிறார்களே? அரசு ஆவணங்களின்படி என் பெயர் சந்திரசேகர் ஆசாத். ஊடகங்கள் என்னை வில்லனாக காட்ட ராவணன் என அழைக்கின்றன. பாஜக உறுப்பினர்கள் ராவணன் கொல்லப்படுவான் என்று பகிரங்க கொலைமிரட்டல்களை விடுக்கின்றனர். வழக்குரைஞரான நான் பீம் ஆர்மி அமைப்பை நடத்தும் எளிய மனிதன் என்பதே உண்மை. பீம் ஆர்மி பிறந்தது எப்படி? கன்ஷிராம் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு எங்கள் இனத்தை காக்க பீம் ஆர்மியை உருவாக்கினோம். உள்ளூர் பள்ளியில் ஆதிதிராவிட மாணவர்கள் சிக்கல்களை சந்திக்க அவர்களுக்காக இதனை உருவாக்கும் தேவை உருவானது. இதனை பாரத் இக்தா மிஷன் முன்னர் அழைக்கப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு எதிரான அநீதியை தடுக்க பல்வேறு மாநிலங்களுக்கு பயணிக்கவிருக்கிறேன். இட ஒதுக்கீடு ஆதிதிராவிடர்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு பயனளித்துள்ளது என்கிறார்களே? இடஒதுக்கீடு பற்றிய அறியாமை பேச்சு அது. சமநிலை இல்லாத சமூகத்தில் நலிவடைந்த சமூகமான எஸ்சிகளுக்கு இட ஒதுக்கீட்டை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. இப்படி பாகுபாடு காட்டும் தேசம் எப்படி வ

இஸ்‌ரோவின் துணைநிறுவனமான ஆன்ட்ரிக்ஸின் லட்சியம்!

படம்
முத்தாரம் Mini விண்வெளி சந்தையில் ஆன்ட்ரிக்ஸின் பங்கு என்ன? உலகளவில் ராக்கெட்டுகளை ஏவும்சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலர்கள். இதில் ஆன்ட்ரிக்ஸின் பங்கு 7%. சிறியரக செயற்கைக்கோள் சந்தையில் எங்களது பங்கு விரைவில் பத்து சதவிகிதமாக உயர்த்து முயற்சித்து வருகிறோம். ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஆகிய திட்டங்கள் இதற்கு கைகொடுக்கும். ஆன்ட்ரிக்ஸின் எதிர்கால திட்டம் என்ன? ராக்கெட்டுகளை குறைவான கட்டணத்தில் ஏவுவதற்கு உலகெங்கும் பெரும் கிராக்கி நிலவுகிறது. இதனை நிறைவு செய்வதே ஆன்ட்ரிக்ஸின் திட்டம். இஸ்‌ரோ தனது பிஎஸ்எல்வி தொழில்நுட்பம் மற்றும் சிறிய ராக்கெட்டுகளை தொழில்துறைக்கு அளித்துள்ளது. வணிகரீதியான ஏவுதல்களிலும் ஆன்ட்ரிக்ஸ் பங்கு குறைவாக உள்ளதே? அடுத்த பத்து ஆண்டுகளில் சிறிய ராக்கெட்டுகளை ஏவும் சந்தையில் 18 பில்லியன் டாலர்களை பெறுவது எங்களது லட்சியம். எங்களது வருவாயையும் சந்தையையும் விரிவாக்க முயற்சித்து வருகிறோம். -டி.இ.நரசிம்மன், ஆன்ட்ரிக்ஸ்(இஸ்‌ரோ)

உண்மையான தகவல்களுக்கு பணம் கொடுங்கள்!

படம்
முத்தாரம் Mini சுதந்திரத்திற்கு பிக் டேட்டா பிரச்னையா? உங்களுடைய உணர்வுகள், விருப்பங்கள் ஆகியவை பிறர் புரிந்துகொள்ளும் அவசியமில்லாத தனியுரிமைதானே! ஆனால் தகவல் நிறுவனங்கள் தனிப்பட்ட நபர்களைப் பற்றி சேகரிக்கும் தகவல்கள் கண்காணிப்பில் உள்ள நிலைமையை ஏற்படுத்தும். உங்களது விருப்பங்கள், தேவைகள் அனைத்தும் உங்கள் கையைவிட்டு போய்விடும். தகவல்களுக்கு ஏன் கட்டணம் கொடுக்க கூறுகிறீர்கள்? இலவச செய்தி என்பது செய்திதுறைக்கு அபாயகரமானது. இதில் எவை மக்கள் கவனத்தை பெறும் என கூறுங்கள்? உணவு, உடைகளுக்கு காசு கொடுக்கும்போது தரமான செய்திகளுக்கு ஏன் கட்டணம் கொடுக்க ஏன் தயங்குகிறீர்கள்? நீங்கள் தெளிவாக எழுதினாலும் உங்கள் எழுத்து பலருக்கும் புரியவில்லை என்கிறார்களே? காரணம், அவர்கள் புரிந்துகொள்ள விரும்பாததுதான். சிறிய நூலின் மூலம் அத்தனை விஷயங்களையும் புரிய வைத்துவிடமுடியாது. நான் எழுதிய நோக்கத்திலேயே நூலிலுள்ள விஷயங்களை ஒருவர் புரிந்துகொ்ள்ள முடியும் என்ற அதீத தன்னம்பிக்கையும் எனக்கு கிடையாது. -யுவல் ஹராரி, இஸ்‌ரேல் வரலாற்று எழுத்தாளர்.

கதைகளிலுள்ள ஐடியாக்களை படமாக்குவேன்!

படம்
முத்தாரம் Mini - கிரிஷ் காசர்வல்லி உங்களின் அனைத்து திரைப்படங்களும் இலக்கியங்களை தழுவியவை ஏன்? கதைகளை படித்து சில ஐடியாக்களை எடுத்துக்கொண்டு திரைப்படமாக்குவது எனது பாணி. ஒருமுறை படித்த கதையை நினைவுகூர்ந்து திரைக்கதை எழுதி எழுத்தாளரிடம் காட்டுவேன். உங்கள் படங்களில் உறுதியான பெண்களை பார்க்க முடிகிறதே எப்படி? நான் உருவாக்கி பதினான்கு படங்களில் எட்டு படங்கள் பெண்களைப் பற்றியது. பெர்க்மன் பெண்களின் பிரச்னைகளை பற்றி படம் எடுத்தார். அவரிடம் பெண்களைப் பற்றியே ஏன் படம் எடுக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டனர். ஆனால் குரோசவா அதுபோல படங்களை உருவாக்கவில்லை ஆனால் அவரிடம் நீங்கள் பெண்களை வைத்து ஏன் படங்களை செய்யவில்லை என்ற கேள்வியை கேட்பதில்லை(சிரிக்கிறார்) கர்நாடகத்தின் தனித்துவம் என்ன? இந்தியாவிலேயே ஏழு மொழிப்படங்களும் ஓடும் ஒரே இடம் இது. மேலும் கன்னடப்படங்களை விட தமிழ், தெலுங்கு படங்களுக்கு சிறந்த சந்தை. 14 தேசிய விருதுகளைப் பெற்றது படங்களை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரித்துள்ளதா? தயாரிப்புச்செலவு கூடியுள்ள நிலையில் தற்போது கலைப்படங்களை தயாரிக்க கர்நாடகாவ

"அடிமைப்படுத்தி ஆட்சிசெய்வதே பாசிசத்தின் லட்சியம்"

படம்
முத்தாரம் Mini உலகெங்கும் அரசுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் மக்களும் பாசிஸம் புகாரை கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்… சுதந்திரம், சமநிலை ஆகியவை ஜனநாயக சமூகத்தில் உண்டு. ஆனால் பாசிசத்தில் ஆணாதிக்கம், மதம், இனம் முன்னிலை பெறும். உண்மையையும் அதற்கான மதிப்பையும் அழித்து பயம் மற்றும் அடிமைத்தனத்தை வளர்க்கும். பெரும்பான்மை சமூகம் ஆட்சியதிகாரம் பெற்றால் ராணுவத்தினர் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இதற்கு உதாரணம். உண்மையின் மதிப்பை அழிப்பது என்பதன் அர்த்தம் என்ன? சிறுபான்மையினரை எதிரியாக கட்டமைத்து பயத்தை மக்கள் மனதில் விதைப்பது பாசிச திட்டம். இதன் அடுத்தகட்டம் அதிலிருந்து மக்களை காக்கும் விதமாக ஆட்சியை கைப்பற்றி பழங்குடிகளை அடையாளமறிந்து பிரிவினையை தூண்டுவதுதான். இவற்றுக்கு எதிராக ஜனநாயகத்தை எப்படி காப்பது? இனவாதம், குழுவாதம் என்பது சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கே கேடான ஒன்று. பிறருடன் கலந்து பழகுவதை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதே பாசிசத்தின் இறுதிக்கட்டம். -    -  ஜேசன் ஸ்டான்லி, யேல் பல்கலை

தலித்துகள் விரைவில் அமைதியாவார்கள்!

படம்
முத்தாரம் Mini வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக கிளர்ந்தெழும் தலித்துகளின் கோபத்தின் அரசியல்ரீதியான தாக்கம் என்ன ? 2014 ஆம் ஆண்டைவிட நாங்கள் ஆற்றல் கொண்டவர்களாக மாறியுள்ளோம் . பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் எங்களுக்கு ஆதரவாக உள்ள நிலையில் பழைய சட்டத்தில் கமா கூட மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை . எதிர்காலத்தில் அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம் நம்புங்கள் . தலித்துகள் முஸ்லீம்கள் மீதான படுகொலைகள் நிற்கவில்லையே ? வதந்தி படுகொலைகளுக்கு எதிர்ப்பான குரலை தொடர்ச்சியாக எங்கள் கட்சி எழுப்பி வருகிறது . இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் பல்வேறு மாநிலங்களுக்கு அறிக்கை அனுப்பி செயல்படும் விதம் திருப்தியளிக்கிறது . தலித்துகள் , முஸ்லீம்கள் பீகாரில் பிரிவினைக்குட்படவில்லை என கூறமுடியுமா ? என்னுடைய தொகுதியில் முஸ்லீம் , தலித்துகள் , பழங்குடிகள் என அனைவரும் ஒன்றுபோல்தான் . போலிச்செய்திகள் எங்களை எதிராக சித்தரிக்கலாம் . மேற்சொன்ன இனக்குழுக்கள் சாதியால் ஒன்றுபோல பாதிக்கப்பட்டவர்கள் . தலித்துகள் இன்று கோபப்பட்டாலும் பின்னாளில் நிதானமாகிவிடுவார்கள் .   - சிராக்

ஜம்மு-காஷ்மீர் முந்தைய விதிகளை பற்றி பேசவேண்டும்! -உமர் அப்துல்லா

முத்தாரம் Mini காஷ்மீரிலுள்ள சட்டப்பிரச்னைதான் என்ன ? ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் குழு , சட்டப்பிரிவு 370 ஐ அகற்றுவது ஒரே தீர்வு என கூறிவருகிறது . இதனை செயல்படுத்தினால் இந்தியா , ஜம்மு - காஷ்மீரை தன்னுடன் இணைக்கும்போது கூறிய விதிகள் குறித்த வாதங்களை நாம் மீண்டும் பேசவேண்டியிருக்கும் . வேறு என்னதான் தீர்வு ? காஷ்மீர் தன்னாட்சி நிலையை அடைவதே எங்கள் கட்சி (NC) நிலைப்பாடு . பாஜக , காஷ்மீரை இந்தியாவோடு இணைப்பதையும் ஹூரியத் அமைப்பினர் சுதந்திரம் அல்லது பாகிஸ்தானோடு இணைத்துக்கொள்வதையும் அமைதிக்கு தீர்வாக கூறுவார்கள் . தன்னாட்சி என்பது புத்திசாலித்தனமான தீர்வென நம்புகிறீர்களா ? தன்னாட்சி திட்டங்களை அரசு முன்வைத்தால் நிச்சயம் விவாதிக்கலாம் . நடைமுறையில் அணு ஆயுத நாடுகளை ( சீனா , பாகிஸ்தான் , இந்தியா ) எல்லையில் வைத்துக்கொண்டு காஷ்மீர் தன்னாட்சியாக செயல்பட வாய்ப்பு குறைவு . அரசுக்கு எதிராக தீவிரவாதக்குழுக்களில் இளைஞர்கள் பெருமளவில் சேர என்ன காரணம் ? பாஜவும் , மக்கள் ஜனநாயக கட்சியும் காஷ்மீரில் ஏற்படுத்திய வன்முறையான சூழல்தான் இதற்கு காரணம் . -