இந்தியாவின் வன்முறை கலாசாரம் மாறவேண்டும்
முத்தாரம் Mini
உங்களுடைய நூல் இந்தியாவைப் பற்றியது
இல்லையா?
நான் பார்த்த காட்சிகள், உணர்ந்து
அனுபவப்பூர்வ விஷயங்களை வாசகர்களுடன் நேர்மையாக பகிர முயற்சித்திருக்கிறேன். போக்குவரத்து,
லஞ்சம் உள்ளிட்ட விஷயங்களை விட மனிதர்களை பாகுபாடாக நடத்துவது என்னை பெரிதும் வருத்திய
விஷயம். அதேசமயம் 2015 வெள்ளத்தின்போது வேறுபாடுகளை உடைந்தது நெகிழ்ச்சியான நிகழ்வு.
இந்தியாவில் மாறவேண்டிய விஷயங்களாக
எதனைக் கூறுவீர்கள்?
தென்னிந்தியாவில் கும்பல் வன்முறை,
பசு தொடர்பான தாக்குதல்கள் குறைவு. பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிரான கடுமையான
சட்டங்களை அரசு உருவாக்குவது அவசியம். கொலை, தாக்குதல் குறித்து வேகமான விசாரணைகள்
நீதிகிடைக்க அவசியம்.
இத்தாலிய மாப்பிள்ளை மாமியார்
வீடான சென்னை எப்படியிருக்கிறது?
டெல்லி மற்றும் மும்பையை விட சென்னை
அமைதியான நகரம். எனக்கு வட இந்தியாவும் தென்னிந்தியாவும் ஒன்று கலக்கும் சௌகார்பேட்டை
பிடித்த இடம். போக்குவரத்து நெரிசலும் இங்கு நம் பொறுமையை அதிகம் சோதிப்பதில்லை.
-கார்லோ பிஸாட்டி, பத்திரிகையாளர்.