எமர்ஜென்சி முதலுதவிக்கு படிப்பு கட்டாயமாகிறது!


விபத்துகளில் இந்தியர்கள் பலி!


Image result for emergency golden hour

எமர்ஜென்சி மருத்துவ வசதிகள் கிடைக்காததால் ஆண்டுதோறும் 50 ஆயிரம் இந்தியர்கள் இறப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அவசரநிலையில் நோயாளிக்கு எதுமாதிரியான சிகிச்சைகளை அளிக்கவேண்டும் என்பதை மருத்துவர்களும், செவிலியர்களும் அறியாததால் இந்த அவலநிலை.

“அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அக்யூட் கிரிட்டிக்கல் கேர் கோர்ஸ்(ACCC) அனைத்து மருத்துவர்களுக்கும் கட்டாயம். அவசரநிலை உதவிகளால் பத்து சதவிகித மரணங்களை தடுத்து மக்களை காப்பாற்ற முடியும்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்று உறுப்பு அறுவைசிகிச்சை வல்லுநர் அஜய் சர்மா.
நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிப்பது தொடர்பான மருத்துவர்- செவிலியர்களின் தடுமாற்றங்களால் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 98 ஆயிரம் பேர் மரணித்து வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் இப்பாடம் அறிமுகமானாலும் இதனைக் கற்றவர்களின் அளவு இந்தியளவில் 450 மருத்துவர்கள் மட்டுமே. எமர்ஜென்சி சூழலில் விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு வருபவர்களின் மூச்சை சோதித்து ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது இதில் முக்கிய அங்கம்.