இடுகைகள்

பறவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறவைகள் வலசை செல்வதன் காரணம்!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி எறும்பால், எவ்வளவு எடையை தூக்க முடியும்? பத்து முதல் இருபது மடங்கு எடையைத் தூக்க முடியும். இதை அதன் எடையோடு ஒப்பிட வேண்டும். சில எறும்பு இனங்கள், தனது எடையை விட ஐம்பது மடங்கு அதிகமாக தூக்குவதும் கூட உண்டு. எறும்புகள் எடையை தூக்கிக்கொண்டு மரத்தில், அல்லது பாறையில் செங்குத்தாக ஏறுவதையும் அதன் திறமையின் பங்காக சேர்த்துக்கொள்ளுங்கள். முதுகில் டாடா நானோ காரை கட்டிக்கொண்டு உலகின் உயரமான மலைச்சிகரத்தில் நீங்கள் ஏற முடியுமா? யோசித்துப் பாருங்கள். சுறாக்களின் பற்கள் பற்றி கூறுங்கள். சுறாக்களுக்கு, அதன் வாழ்நாளில் முளைக்கும் பற்களின் எண்ணிக்கை இருபது ஆயிரம். ஆறு முதல் இருபது வரிசையில் பற்கள் இருக்கும். முன்னே உள்ள பற்கள் இரையை பிடித்து கடித்து துண்டாக உதவுகிறது. மீன்களின் வயதை எப்படி அறிவது? அதன் செதில்களை வைத்து அறியலாம். மரங்களின் வயதை எப்படி அறிகிறோம். அதன் உட்புறத்திலுள்ள வளைய வடிவம் உதவுகிறது அல்லவா? அதே உத்திதான் இங்கும் உதவுகிறது. மீன்கள் செல்லும் திசையை சட்டென மாற்றிக்கொள்வது எப்படி? அப்படி மாற்றிக்கொள்ளாவிட்டால் சட்டியில் குழம்பாக கொதித்துக்கொண...

ஒரு பறவை பறக்கும் அதிகபட்ச உயரம்! - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
          அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி ஒரு பறவை பறக்கும் அதிகபட்ச உயரம் என்ன? 38 ஆயிரம் அடி. பொதுவாக பறவைகள் இரண்டாயிரம் அடிகளுக்கு மேல் பறப்பதில்லை. நீர்ப்பறவைகள் நான்காயிரம் அடிகளைத் தொடுகின்றன. இப்படி பறக்கும் விஷயம் கூட அரிதானதுதான். வாத்து, மலார்ட், அன்னப்பறவை, பட்டைத்தலை வாத்து ஆகியவை இருபதாயிரம் அடி தொடங்கி முப்பதாயிரம் அடி வரை உயர்ந்து பறக்கின்றன. உயரமாக பறக்கும் பறவைகள் பெரும்பாலும் வலசை செல்லுபவையாக உள்ளன. கேள்விக்கு வருவோம். ரப்பல்ஸ் கிரிஃபோன் ruppells griffon என்ற பறவை, மூன்று மீட்டர் நீளம் கொண்ட இறக்கைகளைக் கொண்டது. இதுவே 38 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறது. இதில் துரதிர்ஷ்டம் இப்படி பறந்து விமானத்தின் எந்திரத்தில் சிக்கிக்கொண்டு உயிரைவிட்டுவிட்டது. இதை கின்னஸ் புத்தகத்தில் கூட பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து பம்பிள்பீ அதிக உயரம் பறக்கும் பட்டியலில் இடம்பெறுகிறது. இதற்கடுத்து நுண்ணுயிரிகள் வருகின்றன. பாக்டீரியா, 65 ஆயிரம் அடிவரை பரவியுள்ளன. கான்கார்டு விமானமே 56 ஆயிரம் அடி உயரம்தான் பறக்கிறது. எனவே, தங்கவேலு நாடார் கடையில் பரிசுக்கப்பை பெயர்...

பனைமரத்தில் கூடு கட்டித் தங்கும் கூழைக்கடா!

படம்
  கூழைக்கடா வீடு   மாறிய கூழைக்கடா திருநெல்வேலியில் கூந்தன்குளம் பறவை சரணாலயம் அமைந்துள்ளது. ஆனால் இங்கு ஆண்டுதோறும் வந்துகொண்டிருந்த கூழைக்கடா பறவைகள் இப்போது ஏரியில் தங்கி இனப்பெருக்கம் செய்யாமல் பனைமரங்களில் தங்கி வருகின்றன. 1994ஆம் ஆண்டு கூந்தன்குளம் பறவை சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. இங்கு பறவை ஆய்வாளரான பால் பாண்டி, 55 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவருகிறார். அவருக்கும் கூழைக்கடா, ஏரி அல்லது ஏரிக்கு அருகில் உள்ள இடங்களில் தங்காமல் பனையில் தங்குவது ஆச்சரியமாகவே உள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழை சதுப்புநிலத்தை நிறைக்க போதுமானதாக இருக்கவில்லை. அப்போது அங்கு வந்த கூழைக்கடா பறவைகள் நீரின் இருப்பு குறைவாக இருப்பதைப் பார்த்து, அருகிலுள்ள அருமனேரிக்கு சென்றுவிட்டன. அங்குள்ள சதுப்புநிலத்தில்   பனைமரங்கள் அதிகம்.   ‘’சதுப்பு நிலத்தில் நீர் வரத்து குறைவு என்பதால் கூழைக்கடாவோடு பிற பறவைகளையும் காப்பாற்ற, இங்கு வரச்செய்து தக்கவைக்க மணிமுத்தாறு அணையைத் திறந்து நீர் விடுமாறு மாவட்ட ஆட்சியரைக் கேட்டுள்ளோம். இதற்கு கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகள் ஆக...

பறவைகளின் உடலிலுள்ள தற்காப்பு ஆயுதங்கள், சிம்பன்சிகளுக்கும் கொரில்லாக்களுக்குமான போர்! -

படம்
  பறவைகளின் உடலில் தற்காப்பு ஆயுதங்கள் குறைவு உண்மை. பறவைகள் பறக்கவே அதிக ஆற்றலை செலவழிக்கின்றன. கூடுதலாக, அதன் உடலில் ஆயுதங்கள் இருந்தால்,அவற்றுக்கு அது கூடுதல் சுமைதான். எனவே பெரும்பாலான பறவைகளின் உடலில் அதிக ஆயுதங்கள் இருக்காது. அதற்கு பதிலாக உடல் நிறமும், அவை எழுப்பும் ஒலியும் அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கூடுதலாக அலகு, கால்களிலுள்ள விரல் நகங்கள்  பறவைகளுக்கு சண்டையிடும்போது உதவுகிறது.  சிம்பன்சிகளும் கொரில்லாக்களும் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடாது! உண்மையல்ல. 2019ஆம் ஆண்டு, லோவாங்கோ தேசிய பூங்காவில் (Loango national park) வாழ்ந்த 18 சிம்பன்சிகள் திடீரென  5 கொரில்லாக்களைத் தாக்கின. 79 நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலில், 2 கொரில்லா குட்டிகள் கொல்லப்பட்டன.  அதே  ஆண்டில், ஆஸ்னாப்ரூக் பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் பரிணாம மானுடவியல் கழகம் ஆகிய இரு அமைப்புகளும் இதுபற்றிய ஆராய்ச்சியை வெளியிட்டன.  https://edition.cnn.com/2021/07/22/africa/chimpanzee-gorilla-attacks-scn-scli-intl/index.html https://nypost.com/2021/07/22/chimps-are-k...

கொடுக்கு இல்லாத தேளின் ஆயுள், தேன்கரடியின் இயல்பு - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கொடுக்கு இல்லாமல் தேளால் வாழ முடியுமா? தென் ஆப்பிரிக்காவில் தாக்குதால் கொடுக்குகளை இழந்த தேள்கள்  8 மாதங்கள் தாக்குப்பிடிக்கின்றன. தேளின் பின்பகுதியில் கொடுக்கு மட்டுமல்லாது செரிமானப்பகுதி, ஆசனவாய் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. தனது வால்பகுதியை இழந்துவிடும்போது தேளின் வாழ்க்கை கடினமாகிவிடுகிறது. உணவு சாப்பிடும் அளவு குறைந்து மெல்ல இறக்கிறது.  தேன் கரடிகள் உண்மையில் தேனை உண்கிறதா? சிலசமயங்களில் மட்டும். தேன் கரடிகளுக்கு முதன்மையான உணவு பழங்கள்தான். 90 சதவீதம் பழங்கள், இலைகள், பூக்கள், பூச்சிகளின் லார்வாக்களை உண்ணுகிறது. தேன் என்பது அதன் உணவு பட்டியலில் முக்கியமானது கிடையாது. தேன்கரடிக்குப் பிடித்தமான உணவு அத்திப்பழங்கள்தான்.  பறவைகளால் மனிதர்களைப் போலவே நிறங்களைக் காண முடியுமா? பறவைகளின் பார்வைத்திறன்களைப் பற்றி நாம் முழுமையாக இன்னும் ஆராய்ச்சி செய்து அறியவில்லை. பறவைகளின் பார்வை அமைப்பு மனிதர்களைப் போலவே நிறங்களை அறியும் கோன் செல்களைக் கொண்டது. கூடுதலாக புற ஊதாக்கதிர்களை கண்டறியும் திறனும் பறவைக்கு ண்டு. இந்த திறன் மூலம், பழுத்த பழங்களையும், ஆண், பெண் பறவைகளுக்கு உள்ள...

வினோதரச மஞ்சரி - சிம்பன்சிகள் பற்றிய சுவாரசியங்கள்

படம்
  பறவைகள் தம் அலகை, நாம் கைகளைப் பயன்படுத்துவது போலவே பயன்படுத்துகின்றன. கூடுகளைக்கட்ட, இறக்கைகளை சுத்தம் செய்ய, உணவு தேட என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. மக்காவ் கிளி இனத்தின் அலகு, கொட்டைகளை உடைத்து தின்னும் அளவுக்கு உறுதியானது. மரங்கொத்திகள், தனது அலகினால் மரத்தை கொத்தி துளையிட்டு பூச்சிகளை உண்ணுவதை அறிந்திருப்பீர்கள்.  ஃபிரில் லிசார்ட் (Frill lizard) என்ற பல்லி இனம் உள்ளது. இது, தான் உண்ண  நினைத்துள்ள இரையை அச்சுறுத்த, தன் சவ்வைப் பயன்படுத்துகிறது. தலைக்கு பின்புறம் குடை போல விரியும் மெல்லிய சவ்வு இதற்கு உண்டு.  பிறந்தவுடனே சிம்பன்சி குட்டிகளால் நடக்க முடியாது. ஏறத்தாழ குழந்தைகள் போலத்தான். எனவே, தாய் சிம்பன்சியின் மார்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். சிம்பன்சிகள் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழுவாக வாழ்கின்றன.  சில மாதங்களில் சிம்பன்சி குட்டிகள் நிற்க முயல்கின்றன. இதற்காக மரத்தைப் பிடித்தபடி நிற்கும். அவை கீழே விழாதபடி அதன் பின்பகுதியை தாய்க்குரங்கு பிடித்துக்கொள்ளும்.  சிம்பன்சிகள் பழம், விதைகள், பூக்கள், தேன் ஆகியவற்றை உண்கின்றன. குச்சிகளையும் கற்களையும்...

சிறுவயதிலிருந்தே பறவைகளை கவனிப்பது பிடிக்கும்!

படம்
  அதிதி முரளிதர் இயற்கை செயல்பாட்டாளர் உங்களைப் பற்றி கூறுங்கள். நான் மும்பையில் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இயற்கை, பறவைகள் பற்றியும் நான் எனது எர்த்தி நோட்ஸ் என்ற வலைத்தளத்தில் எழுதி வந்தேன். இப்படித்தான் மெல்ல இயற்கை பற்றிய செயல்பாடுகளுக்குள் நான் வந்தேன்.  பறவைகளைக் கவனிக்கத் (Bird watching) தொடங்கியது எப்போது? சிறுவயதில் அம்மாவுடன் உட்கார்ந்து, பறவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது நினைவில் உள்ளது. கல்லூரியில் படிக்கும்போது, உயிரியல் ஆய்வகத்தில் அதிக நேரம் செலவிடுவேன். அப்போதும் வெளியே உள்ள பறவைகளைத் தான் கவனித்துக் கொண்டிருப்பேன். ஹூப்போ (Hoopoe) என்ற பறவை எங்கள் கல்லூரிக்கு அடிக்கடி வரும். சிறுவயதில் பறவைகளின் ஒலிகளைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறேன்.  உங்களுக்குப் பிடித்த பறவைகள் என்னென்ன? எனக்கு அனைத்து பறவைகளும் பிடிக்கும். ஆனால் சிறுவயதில், வால்க்ரீப்பர், ஆசியன் ஃபேரி ப்ளூபேர்ட், ஃபயர் பிரெஸ்டெட் ஃபிளவர்பெக்கர் (Wallcreeper, Asian Fairy-bluebird,  Fire-breasted Flowerpecker) ஆகிய பறவைகள் பிடித்தமானவை. இவையே அன்று என் கவனத்தை ஈர்...

வியக்க வைக்கும் புறாக்களின் ஞாபகசக்தி!

படம்
  நினைவுகளை மறக்காத பறவை! தொன்மைக் காலத்தில், புறாக்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்ததை பலரும் அறிவோம். புறாக்களை அக்கால மக்கள், தேர்வு செய்ததற்கு அதன் திசையறியும் திறன்தான் காரணம். ஒருமுறை பறந்த வழித்தடத்தை புறா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்தானே? இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புறாவின் நினைவுகூரும் திறனை ஆய்வு செய்து வியப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.  மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் நினைவுகளை சோதிப்பது சவால் நிரம்பியது.  “இப்படி நடைபெறுவது மிகவும் அரிதானது. ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட தேவைப்படும்போது, அதனைப் புறா மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது  ஆச்சரியப்படுத்துகிறது” என்றார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விலங்கியலாளர் டோரா பைரோ.  2016ஆம் ஆண்டு தொடங்கி, புறாவின் நினைவுகள் பற்றிய ஆராய்ச்சியை பைரோ தலைமையிலான ஆய்வுக்குழுவினர் செய்து வருகிறார்கள். இவர்களின் ஆய்வுக்கட்டுரை, புரோசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி என்ற இதழில் வெளியாகியுள்ளது. இக்குழுவினர் வீட்டில் வளர்க்கும் புறாக்களை 8 கி.மீ. தொலைவிற்கும்...

இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்!

படம்
  இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்! தி சீக்ரெட் லைஃப் ஆஃப் தி அட்டர் நிகோலஸ் மில்டன் பென் அண்ட் ஸ்வோர்ட் புக்ஸ் அட்டர் என்ற விஷப்பாம்பு உலகம் முழுக்கவே அழிந்துவரும் நிலையில் உள்ளது. அதனைப் பற்றி நாம் தவறாக அறிந்துள்ள விஷயங்கள் எவை என நூல் ஆசிரியர் விளக்கியுள்ளார். இங்கிலாந்தில் அதிகளவு இப்பாம்பு இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நூல் ஏற்படுத்தும் ஊக்கத்தால் அட்டர் காப்பாற்றப்பட்டால் நல்லது.  ஃபிளெட்ஜிலி ங் ஹன்னா போர்ன் டெய்லர் ஆரம் பிரஸ்  கானா நாட்டின் கிராமப்புற  பகுதியில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களை ஹன்னா நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். அவர் வளர்த்த உழவாரன் குருவி, மன்னிக்கின் என்ற சிறு பறவை ஆகியவற்றையும் வளர்த்து வந்ததைப் பற்றி படிக்க சுவாரசியமாக உள்ளது.  தி பேரட் இன் தி மிரர் ஆண்டன் மார்ட்டின்ஹோ டிரஸ்வெல் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூலில் ஆசிரியர், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒத்த குணங்கள், பழக்கங்கள் பற்றி விவரிக்கிறார்.  தி கார்ன்கிரேக் ஃபிராங்க்ரென்னி வொயிட்லெஸ் பப்ளிசிங் வடக்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்பட்ட ப...

பறவைகள் வாசனையை வைத்துதான் உணவு தேடுகிறதா? - அறிவியல் நூல்கள் அறிமுகம்

படம்
  சீக்ரெட் பர்ஃஃப்யூம் ஆப் பேர்ட்ஸ் டேனியல்லா ஜே வொய்டேகர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் 2022 பெரும்பாலான பறவை ஆராய்ச்சியாளர்கள் பறவைகளுக்கு சுவாசிக்கும் திறன் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் டேனியல்லா தனது ஆராய்ச்சி வழியாக பறவைகளுக்கு வாசனை அறியும் திறன் உண்டு என்று சொல்கிறார். மேலும், உணவுகளை கண்டுபிடிக்கவும், இணை சேரவும் கூட வாசனைகளை பயன்படுத்துவாக சொல்லுகிறார். எனவே ஆர்வம் இருப்பவர்கள் நூலை வாங்கி வாசியுங்கள்.  அனிமல் ரிசொல்யூஷன் ரோன் புரோக்லியோ மின்னசோட்டா பல்கலைக்கழகம் 2022 இதில் ஆங்கில பேராசிரியர் ரோன், விலங்குகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கட்டுரைகளாக எழுதியுள்ளார்.  ஜர்னி ஆப் தி மைண்ட்  ஹவ் திங்கிங் எமர்ஜெட் ஃப்ரம் சாவோஸ்  ஆகி ஆகாஸ், சாய் கட்டாம் எப்போதும் நமது மூளையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், நியூரான்கள் பற்றிய சந்தேகங்கள் நமக்கு உண்டு. இந்த நூலில் பிரக்ஞை பற்றிய கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை அறியத் தருகிறார்கள். தவளை, மனிதன், குரங்கு ஆகியவற்றின் மூளைகளை படமாக வரைந்து விளக்கியிருக்கிறார்கள்.  தி கைஜூ பிரசர்வேஷன் சொசைட்டி ஜான் ஸ்கால்ஸி  20...

நிலத்தில் கூடு அமைத்து இனப்பெருக்கும் செய்யும் சின்ன சீழ்க்கை சிறகி!

படம்
  சின்ன சீழ்க்கை சிறகி சின்ன சீழ்க்கை சிறகி பெயர்: சின்ன சீழ்க்கை சிறகி (lesser whistiling duck ) குடும்பம்:  அனாடிடே (Anatidae) இனம்:  டி. ஜவானிகா (D. javanica)   அறிவியல் பெயர்: டெண்ட்ரோசைக்னா ஜவானிகா (Dendrocygna javanica) சிறப்பம்சங்கள்  சாக்லெட் நிறம், பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆண், பெண் பறவைகள் அமைப்பில் அதிக வேறுபாடுகள் இருக்காது. சிறு தவளை, மீன், புழுக்கள், நீர்தாவரங்கள், தானியங்களை உட்கொள்கிறது. நிலத்தில் கூடுகளை அமைத்து இனப்பெருக்கம் செய்கிறது.  எங்கு பார்க்கலாம் இந்திய துணைக்கண்டம், தெற்காசியாவில் அதிகம் காணப்படுகின்றன. அறுவடை செய்த சதுப்புநிலம், ஈரமுள்ள வயல்கள், ஏரிகளில் பார்க்கலாம்.  ஐயுசிஎன் பட்டியல் அழியும் நிலையில் இல்லாதவை  (Least concern LC) 3.1 ஆயுள் 9 ஆண்டுகள் முட்டைகளின் எண்ணிக்கை 7 முதல் 12 வரை எழுப்பும் ஒலி சீசிக்...சீசிக் ( “seasick-seasick.") ஆதாரம் https://www.thainationalparks.com/species/lesser-whistling-duck https://www.beautyofbirds.com/lesserwhistlingducks.html

பறவைகளுக்கு ஒகே ஆனால் நமக்கு விஷம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பறவையும் பெர்ரியும் பூச்சிகளுக்கு மழை ஈரம் பிடிக்காதா? மானாவாரி பூமிக்கார ர்களுக்கு மழை பெய்வது பிடித்திருந்தாலும் அதில் நனைந்துகொண்டே இருப்பார்களா என்ன? அதேதான் பூச்சிகளும் கூட மழை பெய்யும் போது இலைகளின் அடியில் அல்லது புல்லுக்கு அடியில் சென்றுவிடும். சூரியன் எப்போது வெளியே வருகிறதோ அப்போதுதான் வெளியே வரும். அனைத்து பூச்சிகளுக்கும் இதமான வெப்பம் அவசியம். எனவேதான் சூரிய வெப்பம் இருக்கும்போது தனது இரை தேடுதலை வைத்துக்கொள்கின்றன. இதில் நிலப்பரப்பு சார்ந்த வேறுபாடுகள் உண்டு.  அதிக காலம் தூங்கும் விலங்கு எது? ஆஸ்திரேலியாவை பூர்விகமாக கொண்ட கோலா கரடிதான். யூகலிப்டஸ் மரத்தில் ஏறினால் அதை மொட்டையடித்துவிட்டுத்தான் கீழே இறங்கும். இதில் சத்துகள் குறைவு. நச்சுத்தன்மை அதிகம். இதனை செரிக்கவே கோலாவுக்கு பதினெட்டு மணிநேரம் ஆகிறது. ஆனாலும் அடம்பிடித்து அதையே சாப்பிட்டுவிட்டு தூங்கி மீண்டும் சாப்பிட்டு... என வாழ்கிறது.  பெர்ரிகள் நச்சுத்தன்மை கொண்டவை என்றாலும கூட பறவைகள் அதனை எப்படி சாப்பிடுகின்றன? குறிப்பிட்ட உயிரினம் சாப்பிடுகிறது என்றால் அந்த தாவரம், பழம் நமக்கும் செட் ஆகும் என்று க...

பறவையின் மூளை இயக்கங்களை பாடல்களாக மாற்றி மனிதர்களுக்கு உதவலாம்! - புதிய ஆராய்ச்சி

படம்
  பறவைகளின் மூளையில் ஒரு பாடல் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், அதன் மூளை இயக்கத்தை ஆராய்ந்து அதனை பாடலாக மாற்றியிருக்கிறார்கள். பாட்டு எப்படியிருக்கும் என்று இப்போது நீங்கள் கேட்க கூடாது. எதற்கு இப்போது இந்த ஆராய்ச்சி என்று கேட்டால் கட்டுரையை நீங்கள் தாராளமாக வாசிக்கலாம்.  அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் மூளை இயக்கத்தை பாடலாக மாற்றும் ஆராய்ச்சியை செய்துள்ளனர். இதன்மூலம் பேச முடியாத மக்களுக்கு குரல் அமைப்புகளை வடிவமைக்க முடியும் என்பதுதான் அவர்கள் சொல்லும் சேதி.  தற்போதுள்ள மருத்துவக்கருவி மூலம் ஒரு நிமிடத்திற்கு இருபது வார்த்தைகளை பேச முடிகிறது.  யோசித்துப் பாருங்கள். நீங்கள் பேசுவதை கூறும் கருவியை விட என்ன பேசலாம் என்று நினைப்பதை பிராஸ்தெடிக் கருவி மூலம் பிறருக்கு தெரிய வைத்தால் பிரமாதமாக இருக்குமே என்கிறார் உளவியல் மற்றும் நரம்பு உயிரியல் பேராசிரியர் டிமோத்தி ஜென்ட்னர்.  ஸீப்ரா ஃபின்ச் என்ற பறவைகளின் உடலில் எலக்ரோடுகளைப் பொருத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் மூளை இயக்கங்களை படம்பிடித்துள்ளனர். இதன்மூலம் மூளை...

அடுத்த பெருந்தொற்று எதன் மூலம் பரவ வாய்ப்புள்ளது? - ஆராய்ச்சி சொல்லும் உண்மை

படம்
                அடுத்த பெருந்தொற்றின் ஊடகம் ! அடுத்த பெருந்தொற்று எந்த பறவை அல்லது விலங்குகளிடமிருந்து பரவ வாய்ப்பிருக்கிறது என தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர் . . கோவிட் -19 பெருந்தொற்று பரவிய வேகத்தில் மக்களை பலிகொண்டதோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது . வைரஸ் , பாக்டீரியாக்கள் இல்லாத இடமே கிடையாது . ஒரு குண்டூசி முனையில் நூறு கோடி நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நோயியல் வல்லுநர்கள் . அடுத்த பெருந்தொற்று எந்த உயிரினம் மூலம் பரவும் என்பதைக் கண்காணிக்கும் பணியை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர் . இதன்மூலம் 2019/20 இல் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னமே கண்டறிந்து தடுக்க முடியும் . காடுகள் , மனிதர்களின் உடல்நலம் , சூழல் ஆகிய மூன்றுமே பின்னிப்பிணைந்தவை .. மக்கள்தொகை பெருக்கம் அதிகரிக்கும்போது காடுகளில் வாழும் விலங்குகளோடு மனிதர்கள் தொடர்புகொள்ள நேருகிறது . இதன்விளைவாக நோய்த்தொற்று எளிதாக பரவுகிறது . இதில் முழுக்க விலங்குகளை குற்றம்சாட்ட முடியாது . ஆனால் அவற்றின் தொ...

சதுப்புநிலங்களை மீட்பது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட!

படம்
  குப்பைகளால் அழியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்! செய்தி: தமிழகத்திலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 8.4 ஜிகா டன்கள் மீத்தேன் வாயு உருவாகி சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை உலக சதுப்புநில நாள் அரசு வனத்துறையால் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பான சந்திப்பில் இயற்கை ஆர்வலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் பங்குபெற்று, பள்ளிக்கரணையில் குப்பை கொட்டும் இடமாக மாறிய சதுப்புநிலங்களை மீட்பது குறித்து ஆலோசித்துள்ளனர். பள்ளிக்கரணையில் பல்வேறு இடங்களில் கருவிகளைப் பொருத்தி கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.  மீத்தேன் அதிகரிப்பு நன்னீர் சதுப்பு நிலப்பகுதியான பள்ளிக்கரணையில்  கொட்டப்படும் நகரின் ஒட்டுமொத்தக் கழிவுகளால்  8.4  ஜிகா டன்கள் மீத்தேன் உருவாகி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் சூழல் ஆராய்ச்சிக் கழக இயக்குநரான ஏ.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.  கடந்த 50 ஆண்டுகளாக பள்ளிக்கரணையிலுள்ள ...

காதலைச் சேர்த்து வைக்கும் பறவை! - லவ்பேர்ட்ஸ் 2011

படம்
      லவ் பேர்ட்ஸ் 2011       லவ் பேர்ட்ஸ் 2011 படம் நியூசிலாந்தில் தயாரான படம்.  Directed by Paul Murphy Produced by Alan Harris Matthew Metcalfe Written by Nick Ward Starring Rhys Darby Sally Hawkins Bryan Brown Music by Tim Prebble Cinematography Alun Bollinger   லவ் பேர்ட்ஸ் 2011 அரசின் ப்ளூகாலர் வேலை ஒன்றில் இருக்கிறார் நாயகன். அவருடைய காதலி அவரை சுத்த வேஸ்ட் என்று சொல்லிவிட்டு அடுத்த ஆளைத் தேடி போய்விடுகிறாள். இவர் அந்த வருதத்தில் இருக்கிறார். அப்போது அவருடைய வீட்டுக்கூரை மீது நீர்ப்பறவை ஒன்று அடிபட்டு வீழ்கிறது. அதனை எப்படி வளர்ப்பது என்று நாயகனுக்கு புரியவில்லை. அதற்காக அருகிலுள்ள வனவிலங்கு காட்சியகத்திற்கு சென்று வருகிறார். அங்கு வேலை செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது முதலில் பிடிகொடுத்து பேசாத அம்மணி மெல்ல மனம் திறக்கிறார். அவருக்கு மணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். ஒருவருக்கொருவர் மனசுக்குள் காதல் இருந்தாலும் சொல்ல தயங்குகின்றனர். இந்த நேரத்தில் நீர்ப்பறவையும் மெல்ல உடல் தேறுகிறது. இவர்களும் காதல் பறவை ஆனார்களா இல்லையா என்பதுதான் கதை. ...

முட்டைக்குள் உள்ள குஞ்சுகள் எப்படி சுவாசிக்கின்றன?

படம்
மிஸ்டர் ரோனி எப்படி பறவைகளின் குஞ்சுகள் முட்டைக்குள் மூச்சு விடுகின்றன? அதற்கு காரணம் முட்டைக்குள் இருக்கும் திசுப்பை அமைப்புதான். மேல்திறப்பு, கீழ் திறப்பு என இரண்டு விதமாக முட்டைக்குள் மெல்லிய இழை அமைப்புகளாக இந்த அமைப்பு அமைந்து குஞ்சுகளைப் பாதுகாக்கிறது. அத்தனை விஷயங்களையும் நான் மொழிபெயர்த்து எழுத முடியாது. மேலேயுள்ள படங்களை அவ்வப்போது பார்த்து புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.... இரண்டாம் அடுக்கு இழை அமைப்பு முக்கியமானது. இதன் உதவியால் ஆக்சிஜனை மெல்லிய நுண்துளைகள் வழியா குஞ்சுகள் சுவாசிக்கின்றன. கார்பன் டை ஆக்சைடை இவை வெளியிடுவது மற்றொரு வழியாக... எனவே குஞ்சுகள் பாதிப்பின்றி உயிரோடு இருக்கின்றன. நன்றி - பிபிசி