ஒரு பறவை பறக்கும் அதிகபட்ச உயரம்! - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

 

 

 

 



 
அறிவியல் பேச்சு
மிஸ்டர் ரோனி

ஒரு பறவை பறக்கும் அதிகபட்ச உயரம் என்ன?

38 ஆயிரம் அடி.

பொதுவாக பறவைகள் இரண்டாயிரம் அடிகளுக்கு மேல் பறப்பதில்லை. நீர்ப்பறவைகள் நான்காயிரம் அடிகளைத் தொடுகின்றன. இப்படி பறக்கும் விஷயம் கூட அரிதானதுதான். வாத்து, மலார்ட், அன்னப்பறவை, பட்டைத்தலை வாத்து ஆகியவை இருபதாயிரம் அடி தொடங்கி முப்பதாயிரம் அடி வரை உயர்ந்து பறக்கின்றன. உயரமாக பறக்கும் பறவைகள் பெரும்பாலும் வலசை செல்லுபவையாக உள்ளன.

கேள்விக்கு வருவோம். ரப்பல்ஸ் கிரிஃபோன் ruppells griffon என்ற பறவை, மூன்று மீட்டர் நீளம் கொண்ட இறக்கைகளைக் கொண்டது. இதுவே 38 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறது. இதில் துரதிர்ஷ்டம் இப்படி பறந்து விமானத்தின் எந்திரத்தில் சிக்கிக்கொண்டு உயிரைவிட்டுவிட்டது. இதை கின்னஸ் புத்தகத்தில் கூட பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து பம்பிள்பீ அதிக உயரம் பறக்கும் பட்டியலில் இடம்பெறுகிறது. இதற்கடுத்து நுண்ணுயிரிகள் வருகின்றன. பாக்டீரியா, 65 ஆயிரம் அடிவரை பரவியுள்ளன. கான்கார்டு விமானமே 56 ஆயிரம் அடி உயரம்தான் பறக்கிறது. எனவே, தங்கவேலு நாடார் கடையில் பரிசுக்கப்பை பெயர் எழுதி வாங்கி வெற்றியாளரான பாக்டீரியாக்களுக்கு கொடுத்துவிடலாம்.

பிட்ஸ்

பயணிகள் விமானம் 30 ஆயிரம் தொட்ங்கி 42 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறது. இலகுரக விமானம், 12 ஆயிரம் அடி உயரத்தில் செல்கிறது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்