இந்தியா - சீனா ஒப்பீடு

 

 

 

 



 

 

 

இந்தியா - சீனா ஒப்பீடு

இரு நாடுகளுக்கும் எந்த பொருத்தமும் இல்லை. அனேகமாக மக்கள்தொகையில் மட்டுமே இந்தியா சற்று முன்னிலை பெறுகிறது. ஆசியாவில் மிகப்பெரும் சக்தியாக வளர்ந்துள்ள வல்லரசு நாடான சீனாவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

இரு நாடுகளிலும் 1.4 பில்லியனுக்கும் அதிக மக்கள் உள்ளனர். இப்போதைக்கு இந்தியாவே பந்தயத்தில் முன்னிலையில் உள்ளது.

ஐ.நா மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, சீனாவில் 116 ஆண்களுக்கு 100 பெண்கள் உள்ளனர். இந்தியாவில் 100 பெண்களுக்கு 110 ஆண்கள் உள்ளனர்.

உலக வங்கி அறிக்கைப்படி, 2022ஆம் ஆண்டில்  சீனாவில் உள்ள மக்களின் தோராய ஆயுள் எழுபத்தொன்பதாக உள்ளது. இந்தியாவில் மக்களின் ஆயுள் அறுபத்தெட்டாக உள்ளது.

சீனாவின் பொருளாதாரம் 18 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு. இந்தியா பொருளாதார வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பொருளாதார அளவு 3.7 ட்ரில்லியன் டாலர்கள்.

சீனாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள் உண்டு. இந்தியாவில் 820 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளனர்.

சீனா, 2020ஆம் ஆண்டு வறுமையை ஓரளவுக்கு ஒழித்துவிட்டது என அறிவித்துவிட்டது. நாற்பது ஆண்டுகால பொருளாதார சீர்திருத்தங்கள் வழியாக எண்ணூறு மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்தனர் என கூறுகிறது சீன அரசு. தினசரி 6.5 டாலர்களுக்கும் குறைவாக சம்பாதிக்கும் 17.2 சதவீத மக்கள் வறுமை நிலையில் உள்ளதாக சீன அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இந்திய அரசு,  தனக்கு ஆதரவான கணக்கீடுகள் மூலம் 135 மில்லியன் மக்களை வறுமை நிலையில் இருந்து மீட்டெடுத்து சாதனை செய்தது. தினசரி 2.5 டாலர்களுக்கு குறைவாக சம்பாதிப்பவரே வறுமையில் இருப்பதாக 2011-19  காலகட்ட அறிக்கைகள் கூறுகின்றன.

சீனா ஒற்றைக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியை மட்டுமே கொண்டது. இந்தியா பல் கட்சிகளைக் கொண்ட அமைப்பைக் கொண்டது.

சீனாவில் வயதாகும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். சீனாவின் கருவுறுதல் அளவு 1.2 சதவீதம். இந்தியாவில் 2.0 சதவீதமாக உள்ளது.

காலநிலை மாற்றத்திற்கான இலக்கை சீனா, 2070 என திட்டமிட்டுள்ளது. இந்தியா, 2060 என கூறியுள்ளது.

சீனாவின் மக்கள் விடுதலைப்படை ராணுவம் உலகிலேயே பெரியது. இரண்டு மில்லியன் வீரர்கள், இதில் இயங்கி வருகிறார்கள். இந்தியாவில் 1.45 மில்லியன் வீரர்கள் உண்டு. நான்காண்டு குத்தகைக்கு வரும் வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என தெரியவில்லை.

ஆரோக்கியம்

2021ஆம் ஆண்டு, சீனா உள்நாட்டு உற்பத்தியில் 5.38 சதவீதத்தை மக்களுக்காக செலவிட்டது. பத்தாயிரம் மக்களுக்கு 25.183 மருத்துவர்கள் சேவையாற்றுகிறார்கள். இந்தியா 3.28 சதவீதத்தை மக்களுக்கு செலவிடுகிறது. பத்தாயிரம் மக்களுக்கு 7.265 மருத்துவர்கள் உள்ளனர். இது உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் அறிக்கை.

தி வீக்
சட்டரூபா பட்டாச்சாரியா, ஶ்ரீமணிகண்டன்
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்