ஸ்கிம்டு பாலில் உள்ள சர்க்கரை அளவு, பூமியிலுள்ள தனிநபருக்கான நீரின் அளவு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

 

 

 

 



 

 

 

 அறிவியல் பேச்சு
மிஸ்டர் ரோனி

ஆடை நீக்கிய பாலில் எத்தனை கிராம் சர்க்கரை இருக்கும்?

ஆடை நீக்கிய பால், ஆரோக்கியமானது. இதில் கால்சியம் உள்ளது. இச்சத்து, உடலிலுள்ள எலும்பு, பற்களுக்கு நல்லது என கூறப்படுகிறது. கொழுப்பு குறைவு என்பதால், இதை டயட்டை கடைபிடிப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதில் பலரும் மறந்துவிடுவது, சேர்க்கப்பட்டிருக்கும் பத்து கிராம் சர்க்கரை பற்றி....

ஒரு கிளாஸ் பாலில் பத்து கிராம் சர்க்கரை உள்ளது. பாலில் சேர்த்து உண்ணும் உணவுகள், பிரெட், சூப் ஆகியவற்றில் சர்க்கரை மறைவாக உள்ளது. இதையும் ஒருவர் கவனமாக பரிசீலித்து உணவுமுறைகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மூத்திஸ் என பழங்களில் செய்து விற்கப்படும் பானங்களில் சர்க்கரை அளவு அதிகம். எந்தளவு என்றால் கார்பன்டை ஆக்சைடு கரைக்கப்பட்ட கோலாக்களை விட அதிகம். பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. அதை பழரசமாக மாற்றி பதப்படுத்தி குடிப்பதில் நார்ச்சத்து இருக்காது. ஆனால் சர்க்கரை அதிகம் இருக்கும். வாழைப்பழம், மாம்பழம், திராட்சை ஆகியவற்றில் சர்க்கரை அளவு அதிகம். எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். பழங்களைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

முடிந்தால் ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து முறையான வழிகாட்டுதலைப் பெறுவது நல்லது.

உலகில் தனிப்பட்ட மனிதர்களுக்கு என பயன்படுத்தும் நீரை வரையறை செய்ய முடியுமா?

200 பில்லியன் தொடங்கி 220 பில்லியன் லிட்டர் என்று கூறலாம். ஒருவர் தினசரி ஐந்து லிட்டர் பயன்படுத்துகிறார் என்று கணக்குப் போட்டாலும் அவருக்கான நீர் பூமியில் 115 மில்லியன் ஆண்டுகள் வரும். நீர் இருக்கிறது. ஒன்று அது தவறான இடத்தில் உள்ளது. அடுத்து, சுத்திகரிக்காமல் இருக்கிறது.

கடல் நீரைப் பாருங்கள், ஆனால் கையில் அள்ளி எடுத்து குடிக்க முடியாது. குடித்தாலும் தாகம் தீராது. தாகம் பெருகும் அளவுக்கு உப்பு உள்ளது. இதை சற்று மலிவான தொழில்நுட்பத்தில் சுத்திகரித்தால் குடிநீர் கிடைக்கும். காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருவதால், கடல்நீரை சுத்தப்படுத்துவதற்கான தொழில்நுட்பம், ஆற்றல் ஆதாரத்தை கண்டுபிடிப்பது முக்கியம்.

pinterest








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்