டைம் 100- 2024 ஆண்டுக்கான செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - போராளிகள்

 






 



 

டைம் 100
செல்வாக்கு பெற்ற மனிதர்கள் -இறுதிப்பகுதி

ரஷ்யாவில் ஒலிக்கும் ஜனநாயக குரல் - யூலியா நாவல்நாயா
yulia navalnaya

கடந்த பிப்ரவரி மாதம், ஜெர்மனியின் ம்யூனிச் நகரில் பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது. அதில் நான் பங்கேற்றேன். சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயக மதிப்புகள் பற்றி கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக யூலியா மேடையில் தோன்றி பேசினார். சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், அவரது கணவரும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்ஸ் நாவல்னி சிறையில் இறந்துபோயிருந்தார். அந்த செய்தியைக் கேட்டும் கூட மனம் தளராமல் தனது கணவரின் செயல்பாடுகளை தன்னுடையதாக அவர் எடுத்துக்கொண்டுவிட்டார். அதனால்தான் நம் கண்முன்னே அவர் நிற்கிறார். என்னைப் போன்ற நிலையில் நாவல்னியும் இருந்தால், அவரும் இதே முடிவை எடுத்திருப்பார் என்று யூலியா கூறினார். மேடைப்பேச்சுக்குப் பிறகு நாங்கள் அவரைச் சந்தித்து அவரது குழந்தைகள், குடும்பம் பற்றி பேசி பாதுகாப்பை உறுதிசெய்தோம்.
யூலியா அவரது கணவர் ஜனநாயக ரஷ்யாவுக்காக, ஊழல் இல்லாத நாட்டிற்காக போராடி வந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த வகையில் அவர் சுயநலமற்றும், வலிமையோடும் காட்சியளிக்கிறார். ஜனநாயகத்தின் மதிப்பை அடையாளம் காட்டுவதோடு, அதை மீட்டெடுக்கவும் போராளியாக போராட தயாராக இருக்கிறார். ரஷ்யாவின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைக் காக்க, பெற யூலியாவோடு அமெரிக்காவும் அதன் மக்களும் துணை நிற்பார்கள் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்
கமலா ஹாரிஸ்

2

காலநிலை மாற்றக் குரல் - வில்லியம் ரூடோ
william ruto

கென்ய அதிபரான வில்லியன் ரூடோ, ஆப்பிரிக்க கண்டத்தின் காலநிலை மாற்ற பாதிப்புகளை அடையாளம் கண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் நைரோபியில் காலநிலை தொடர்பாக நடந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். அதில், தூய ஆற்றல் ஆதாரங்களை மேம்படுத்த, 23 பில்லியன் டாலர்களை பெறுவதாக லட்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகை அடுத்த பத்தாண்டுகளுக்கானது. ஆப்பிரிக்க நாடுகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்யவும் கடன் வழங்கிய நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். வெளிநாட்டில் பிரபலமாக இருந்தாலும், உள்நாட்டில் விலைவாசி ஏற்றம், எரிவாயு வரி, நீதித்துறையில் தலையீடு என ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறார். உள்நாட்டு பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளித்தால், வில்லியம் ரூடோவின் புகழ் இன்னும் ஓங்கும்.
ஜஸ்டின் வோர்லேண்ட்

3

மண்டியிடாத வீரம் - டயானா சாலாசர் மென்டெஸ்

diana salazar mendez

ஈக்குவடார் நாட்டின் ஆபத்தான பணி, அமலாக்கத்துறையில் அதிகாரியாக இருப்பதுதான். காவல்துறை, போதைப்பொருள் குழுக்கள், நீதித்துறை, தொழிலதிபர்கள் என பலரும் சிலந்தி வலைப்பின்னல் போல சேர்ந்து ஊழலை செய்வதால், இவர்களை பிடித்து முறைப்படி யாரும் தண்டிக்க முடியவில்லை. தண்டிக்க நினைக்கும் அதிகாரிகள் உயிருடன் இருப்பதில்லை. டயானா, அமலாக்கத்துறை அதிகாரியான பிறகு கால்பந்து அணி நிர்வாகிகள், முன்னாள் அதிபர், முன்னாள் அரசு வழக்குரைஞர் ஆகியோருக்கு இடையிலான ஊழல் பின்னணியை வெளியே கொண்டுவந்துள்ளனர்.

டயானாவிற்கு சாவு அதிக தூரத்தில் இல்லை. அவரையும், அவரது குடும்பத்தையும் குறிவைத்து கொலை மிரட்டல்கள் வரத்தொடங்கியுள்ளன. யார் சட்டத்தின்படி நடக்க முயல்கிறார்களோ, அவர்களை துப்பாக்கியால் குறிவைத்து வீழ்த்துவதுதான் அங்கு சமகால நீதி. அதை மாற்றத்தான் டயானா முயல்கிறார். அரசு அமைப்புகளின் மீது நம்பிக்கை சரிந்துவிட்ட நிலையில் ஒற்றை சுடராக நம்பிக்கை தருகிறார். ஈக்குவடார் நாடு முழுக்க ஒரு உண்மையைச் சொல்லவேண்டும். நீதி ஒருக்காலும் மண்டியிடாது என தன்னம்பிக்கையோடு பேசுகிறார்.

சமந்தா பவர்

4

ஜிகார் ஷா

jigar sha

தூய ஆற்றல் ஆதாரங்களை உருவாக்குவதே இவரது லட்சியம். இதற்காக சன் எடிசன் என்ற நிறுவனத்தை உருவாக்கி இயங்கினார். அன்றைய காலத்தில் சூரிய ஆற்றலுக்கு யாரும் திரட்டமுடியாத நிதியை திரட்டிய சாதனையாளர். தற்போது, அமெரிக்க அரசின் ஆற்றல் துறையில் உள்ள கடன் வழங்கும் பிரிவின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

தூய ஆற்றல் துறையை வளர்த்தெடுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக 200 பில்லியன் டாலர்களுக்கு மேல் கடன் வழங்கியுள்ளார். இதன் மூலம் தொழில்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கார்பன் வார் ரூம் என்ற நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் ஜிகார் ஷாதான். பிறகு அந்த நிறுவனம், ஆர்எம்ஐ என்ற நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் தூய ஆற்றல் துறை வளரும்போது, அதை கட்டமைத்தவர்களில் முக்கிய இடம் ஜிகார் ஷாவிற்கு உண்டு.

ரிச்சர்ட் பிரான்சன்

5

மக்கள் தலைவன் - லீ குயாங்

li qiang


1959ஆம் ஆண்டு சீனாவின் ஸெஜியாங் பகுதியில் பிறந்தவர். இளம் வயதில் நீர் விநியோக நிலையத்திலும் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலும் வேலை பார்த்தார். தற்போது, சீனாவின் 17.52 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் ஏற்படும் பிரச்னைகளை கருத்தியலுக்கு சிக்கல் வராமல் தர்க்க முயன்று வருகிறார். அதிபர் ஷி ச்சின் பிங்கிற்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர். நாட்டின் பிரதமர். 2017ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக இயங்கினார். கோவிட் காலத்தில் போடப்பட்ட பல்வேறு விதிகள் காரணமாக அதுவரை கிடைத்த வளர்ச்சியின் நேசன், வணிகத்திற்கு ஆதரவான தலைவர் என்ற புகழ்பேச்சுகள் மங்கின.

ஷி ச்சின்பிங்கின் மாறாத ஆதரவாளர். விசுவாசி. அதற்காகவே இப்போது நாட்டின் பிரதமராக இருக்கிறார்.  வேலையின்மை, முதலீடு குறைவது, உள்ளூர் அரசின் கடன் உயர்வு, உள்நாட்டு உற்பத்தியான 76 சதவீதத்திற்கு சமமாக உள்ளது, பங்குச்சந்தை ஐந்து ட்ரில்லியன் அளவுக்கு சரிவு, நிலசந்தை தடுமாற்றம் என நிறைய பிரச்னைகளை சமாளித்து வருகிறார். சீனர்கள் தைரியம், அறிவு கொண்டவர்கள். அவர்கள். தடை, சவால்களை கடந்து வருவார்கள் என்று கடந்த மார்ச் மாதம் மக்களிடம் பேசியிருக்கிறார். சவால்களை கடந்து வர கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும்.

சார்லி கேம்ப்பெல்

6

மரினா சில்வா
marina silva

பிரேசில் நாட்டின் அமேசான் காட்டில் பிறந்தார். ரப்பர் தோட்டத்தில் மரங்களிலிருந்து பால் சேகரிப்பதுதான் குடும்ப வேலை. சிறுவயதில் எழுதவும் படிக்கவும் கற்றார். பிரேசில் நாட்டில் செல்வாக்கு மிகுந்த மக்களவை பிரதிநிதி. அதிபர் வேட்பாளராகவும் போட்டியிட்டவர். தற்போது, வனத்துறை, காலநிலை மாற்ற துறை அமைச்சராக உள்ளார்.
சட்டவிரோதமாக அமேசானில் மரங்களை வெட்டி காடுகளை அழிக்கும் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி உள்ளார். உள்நாட்டிலேயே எரிபொருள் தேவையை பெறுமாறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கரிம எரிபொருட்களை மெல்ல கைவிட்டு தூய ஆற்றல் ஆதாரங்களை நோக்கி திரும்ப ஊக்கப்படுத்தி வருகிறார்.

கிரிஸ்டியானா பிகர்ஸ்

7
டொனால்ட் டஸ்க்
donald tusk

போலந்து நாட்டில் ஒலிக்கும் ஜனநாயகத்தை ஆதரிக்கும் குரல். நாம் எப்படி ஆசை பிரசாரகர்களைத் தோற்கடிப்பது, ஜனநாயகம் பாதிக்கப்படுவதை எப்படி தடுப்பது, சட்டத்தின்படி ஆட்சி நடத்துவது எப்படி என்ற இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்ன அரசியல்வாதி.

இளம்வயதில் சாலிட்ஆர்னோஸ்க் சமூக இயக்கத்தில் செயல்பாட்டாளராக இயங்கினார். போலந்து நாட்டின் ஜனநாயக தலைவர்களில் முக்கியமானவர் டஸ்கும் ஒருவர். கட்சியின் நிறுவனர், நாட்டின் பிரதமர், ஐரோப்பிய கவுன்சிலின் அதிபர் என பல்வேறு பதவிகளை சிறப்புற செய்தவர். 2023ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அரசியலைப் பொறுத்தவரை டஸ்க் மாரத்தான் வீரர் என்றுதான் கூற வேண்டும். எனவே இப்போதும் தாமதம் ஆகவில்லை. நமது ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்று திரள்வோம்.

உர்சுலா வான் டெர் லேயென்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்