இலியானாவின் இடுப்பில் சித்தார்த் ஆடும் ஆட்டம்!

 

 

 


 



இலியானாவின் இடுப்பில் சித்தார்த் ஆடும் ஆட்டம்!
ஆட்டா
சித்தார்த், இலியா
இசை தேவி ஶ்ரீபிரசாத்

அமைச்சரின் மகன், கல்லூரி செல்லும் இளம்பெண்ணை வல்லுறவு செய்து சாலையில் கொன்று வீசிவிட்டு செல்கிறான். அதற்கான நியாயத்தை நாயகனும், நாயகியும் சேர்ந்து பெற்றுத் தருகிறார்கள். ஆட்டா என்றால் மைதா கலந்ததா, கோதுமை மட்டுமே என்று கேட்காதீர்கள். ஆட்டம். நாயகன் ஆடுகிற ஆட்டம். கடைசி பத்து நிமிடம் மட்டும் நாயகனுடன். மீதி நேரம் எல்லாம் நாயகியுடன்.

தயாரிப்பாளர் எம்எஸ் ராஜூவே கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார். அதனால் படம் சிறப்பாக இருக்கிறது என நினைத்துவிடவேண்டும். திரைக்கதை இலியானாவின் மார்பு, தொப்புள், தொடை என தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டே இருக்கிறது. கீழே இறங்கவே இல்லை. படத்தின் கதை, திரைக்கதையை எல்லாம் விட்டுவிடுங்கள். பாடல்களில், நாயகியை எந்தளவு உடையை உரிக்க முடியுமோ அந்தளவு உரித்து காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். பிறகு, இலியானவை நடிக்கவா புக் செய்ய முடியும்? டைப்காஸ்ட்தான். இலியானாவும் சாங்கோபாங்கோவாக இழைந்திருக்கிறார்.

படத்தின் கதை?

சித்தார்த், சினிமா தியேட்டர் ஆபரேட்டரின் மகன். சிறுவயதில் இருந்து படம் பார்ப்பதுதான் ஒரே லட்சியம். மற்றபடி அவர் பள்ளிக்கெல்லாம் போவதில்லை. எல்லாவற்றையும் சினிமா பார்த்து, டிவி பார்த்தே கற்றுக்கொள்கிறார். என்ன கற்றுக்கொண்டார் என கேட்க கூடாது. ஏதோவொன்று என புரிந்துகொள்ளுங்கள். நாயகனுக்கு தொடக்கப்பாடல் வேண்டுமே? இதற்காக சினிமா ரீல்பெட்டியை சைக்கிளில் எடுத்து வரும்போது ரவி பாபுவுடன் சண்டைக்காட்சி ஒன்று வருகிறது. அதையும் சொந்தமாக எடுக்காமல் ஜாக்கிசான் திரைப்படங்களை காப்பியடித்து எடுத்து வைத்திருக்கிறார்கள்.

கிராமத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் நாயகன், வழியில் நாயகியை சந்திக்கிறான். அவளை அமைச்சரின் மகன் வல்லுறவு செய்ய தீர்மானித்து துரத்தி வருகிறான். அவளைக் காப்பாற்றி காதலிப்பதுதானே நாயகனின் ஒரே வேலை. அதேதான்.

தெலுங்கு படங்களில் சில டெம்ப்ளேட் விஷயங்கள் உண்டு. முதல் நாற்பது நிமிடங்களில் வெளிநாடு சுற்றிவிட்டு வந்துவிட்டு, அதற்குப் பிறகு நடக்கும் காட்சிகள் அனைத்துமே ஒரே அரண்மனை போன்ற வீட்டில் நடந்து முடிந்துவிடும். கதை இல்லையா, ஷூட்டிங்கிற்கு காஉ இல்லையா என்று கேட்க கூடாது. அது அப்படித்தான். அதாவது, நாயகன் வில்லனுக்கு சவால்விட்டு அவனுக்கு நண்பன் போல நடித்து காதலியை கரம் பிடித்து இறுதியாக சண்டை போட்டு வெல்வான்.

ஆட்டா படமும் அதேரகம்தான். படத்தின் இறுதியில் ஏதோ ட்விஸ்ட் என்று ஒரு விஷயம் சொல்கிறார்கள். படம் பார்க்கும் நமக்கு போதும்பா சாமி, முடிச்சுவிடுங்க என்று ஆகிவிடுகிறது. படத்தின் திரைக்கதையோ, வேறு எதிலும் புதுமை கிடையாது. இலியானாவின் இடுப்புதான் படத்தின் ஆதாரமே.... படத்தில் வரும் வில்லன் ரயிலில் வைத்து ஒருமுறை அவளை வல்லுறவு செய்வதாக கூறுவான். பிறகு கூட அவளை திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துவிடுவான். ஆனால் நாயகன் காதல் என்ற பெயரில் நாயகியை கசக்கி பிழிகிறான். யூட்யூபில் படம் இருக்கிறது. படத்தை பார்க்க அவசியமில்லை. படத்தின் பாடல்களைப் பார்த்தாலே போதுமானது. அவ்வளவுதான் விஷயம்.

இலியானாவை பலவந்தமாக இதழில் முத்தமிட்டுவிட்டு, இனி ஆந்திரத்தில் இப்படித்தான் பெண்களிடம் ஆண்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஒரு வசனத்தை நாயகன் சித்தார்த் பேசுகிறார். படத்தின் அவர் பெயர் ஶ்ரீ கிருஷ்ணா. நாயகியின் பெயர் சத்யா. படத்தின் மையப்பொருள் வல்லுறவுக்கு எதிரான நீதி. நம்ப முடிகிறதா? ஆற்றில் படகில் வரும்போது, உறங்குகிற நாயகியின் இடுப்பில் கட்டெறும்பு ஊருகிற, கடிக்கிற காட்சியெல்லாம் வேறு லெவல். உண்மையில் தனது ஃபெட்டிஷ் சமாச்சாரங்களை தயாரிப்பாளர் இப்படி தீர்த்துக்கொள்கிறாரோ என்னவோ?

படத்தில் ஒரே ஆறுதல் நடிகர் சுனில், பிரம்மானந்தம் ஆகியோர் மட்டுமே.
மற்ற பாத்திரங்கள் எல்லாம் அதீத நடிப்பைக் கொண்டு இயல்பை மீறியவர்களாகவே நடமாடுகிறார்கள்.

அரைவாசி ஆபாசப்படம்

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்