அத்தை மகளை மணம் செய்ய கேபிள் டிவி கம்பெனியைத் தொடங்கும் நாயகனின் கனவு!

 

 

 

 

 


 

 






 


காஞ்சன மாலா கேபிள் டிவி நெட்வொர்க்

ஶ்ரீகாந்த், லட்சுமி ராய்,தேஜ், சுனில், கிருஷ்ண பகவான்

வசதியான பணக்கார குடும்பம். பல்லாண்டுகளுக்கு முன்னர், அவர்களின் ஒரே பெண் பிள்ளை காணாமல் தொலைந்து போய்விடுகிறாள். அவள் பெயர்தான் காஞ்சன மாலா. அந்தப்பெண்ணை நேசிக்கும் தாய் மாமன், அவளது பெயரில் கேபிள் டிவி சர்வீஸ் கொடுப்பதைத் தொடங்கி ரூபர்ட் முர்டோக் லெவலுக்கு வளர நினைக்கிறான். இந்த நிலையில் காணாமல் போன அத்தைப் பெண் திரும்ப கிராமத்திற்கு வருகிறாள். நாயகனுக்கும் அவளுக்கும் காதல் தீ பற்றியதா, தொழில் வளர்ந்ததா என்பதே கதை.

முழுக்க கிராமத்தில் எடுத்திருக்கிறார்கள். படத்தில் நாயகனும், அவனது குழுவும், கிராமத்தினரும் மட்டுமே படத்திற்கு பொருத்தமாக தெரிகிறார்கள். மற்றவர்கள் அனைவருமே குறிப்பாக நாயகி, அவளது தோழி, அவர்களது ஆடைகள், இறுதியாக வரும் மோசடி வில்லன் என அனைவருமே செயற்கையாக தெரிகிறார்கள்.

படத்தில் வில்லன் கிருஷ்ண பகவான். அவரது பாத்திரம் பொம்பளை சோக்கு பேர்வழி. இதனாலோ என்னமோ, அவரது ஒன்லைன் கவுன்டர்களில் உள்ள சுவாரசியம் பாத்திரத்தின் தன்மையில் இல்லை.

டிவியில் வரும் பிம்பங்களை மக்கள் நம்புகிற காலகட்டம் ஒன்றிருந்தது. அந்த காலகட்ட படம். அதுசரி. ஏற்றுக்கொள்ளலாம். ஒரு லாஜிக்கைப் பார்ப்போம். உங்கள் கண்முன்னே ஒருவர் குழந்தையாக பிறந்து, வளர்ந்து பெரியவனாகிறார். அவரை டிவியில் காட்டி மோசமானவர் என்றால் உடனே ஊர் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன? கிருஷ்ண பகவான் வசதியான மைனர். எப்போதும் ஊரிலுள்ள விலைமாதுவுடன் கூடித் திரிபவர். அனைத்து பஞ்சாயத்துகளிலும் அந்தப் பெண்ணை பக்கத்தில் அமர்த்திக்கொள்கிறார். அதே பெண்ணுடன் சேர்ந்து சீட்டாடுகிறார். குடிக்கிறார். இப்படியான ஆளை ஊர்மக்கள் எப்படி நம்புகிறார்கள்?

காஞ்சனமாலா கேபிள் டிவி குழு, கிராமத்தில் உள்ள பொம்பளை சோக்குப் பேர்வழிகளின் குத்தாட்ட கூத்தை இரவில் டிவியில் நேரலையாக ஒளிபரப்பி மக்களின் மனதைக் கவருகிறார்கள். ஏறத்தாழ சமூகத்தைக் காப்பாற்றும் நிகழ்ச்சி போல கேமரா மூலம் ஸ்டிங் ஆபரேஷனை நடத்துகிறார்கள். இதனால் கிருஷ்ண பகவானின் கோஷ்டி பாதிக்கப்படுகிறது. இவர்கள் ஊரை ஏமாற்றுபவர்கள், கெட்டவர்கள் என கூற முடியாது. பெண்ணாசை, சூதாட்டம், குத்தாட்டம் என வாழ்க்கையை அனுபவித்து வருபவர்கள். அவ்வளவுதான். ஊரில் உடைந்துபோகும் பாலம் கட்டுகிறார்கள், சாதி என்ன என்று கேட்டு உதவிகளை செய்கிறார்கள், வெறுப்பை, பிரிவினையை செய்கிறார்கள் என்றெல்லாம் கூறமுடியாது. பெண்ணாசை தவிர ஊரில் வேறு எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை.

இவர்களை நாயகன் எதற்கு குறிவைக்கிறான் என்றால் தனது கேபிள் டிவி சர்வீசால் மக்களுக்கு பயன் இருக்கவேண்டும். அப்படி நிரூபித்தால் கேபிள் டிவிக்கான மாதக்காசு கிடைக்கும். அதை வைத்து வாங்கிட கடனின் அசல், வட்டிக்காசைக் கட்டலாம். அதுதான் நோக்கம். இப்படியாக தனக்கான உள்ளூர் எதிரிகளை ஏகத்துக்கும் சம்பாதிக்கிறான். இதனால் படத்தின் இறுதியில் கொலைப்பழி விழுகிறது. அதிலிருந்து மீண்டானா என்பதே சோர்வளிக்கும் உச்சகட்ட இறுதிக் காட்சி.

படத்தில் உறுத்தலாக தெரியும் ஒரே பாத்திரம் சிரிஸா எனும் லட்சுமி ராய்தான். அவர்தான் காஞ்சனமாலா என்று பொய் சொல்லி நடிக்க வருகிறார். அவருக்கு நகரத்தில் அச்சுறுத்தல் ஒன்று இருக்க, அதிலிருந்து தப்பிக்க கிராமத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு இருக்கும் சிக்கல், அவரைக் காதலிக்கும் நாயகன்தான். அத்தை மகளை மணம் செய்வதுதான் நாயகனது ஆசை. மற்றபடி அதற்காகவே கேபிள் டிவி சர்வீஸை தொடங்குகிறார்.

லட்சுமி ராய் படத்தில் மிகவும் அந்நியமான உடைகளை உடுத்தி வந்து படம் முடியும் வரை பாத்திரத்தில் பொருந்தாமல் நிற்கிறார். அவரது பாத்திரத்தில் முறையான உணர்வுகளும் வெளிப்படவில்லை. சுடிதாரோ, பாவாடை தாவணி அணிந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். அபார உயரம், அந்நிய நவீன நாகரிக உடைகள், பொருந்தாத வசனம், உச்சரிப்பு  என படத்தின் கிராம பின்னணிக்கு நாயகி கடைசி வரை பொருந்தவே இல்லை. படத்தின் கவர்ச்சிக்கான ஒரு பொருள். பாடல்களில் உடைகளை உரித்தெறிந்து அதை இயக்குநர் சொல்படி செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார்.

கல்யாணம் செய்துகொள்ளும் முறையுள்ள பெண் குளிக்கிறார். அதை வருங்கால மாப்பிள்ளையான முறை மாமன் ஒளிந்திருந்து பார்க்கிறார். இதை எந்த கிராமத்து மக்கள் குற்றம்சாட்டுவார்கள் என புரியவில்லை. இதை ஒரு காட்சியாக வேறு எடுத்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் இயக்குநர் இக்கதையை நகரத்தில் எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் பட்ஜெட் பிரச்னை காரணமாக கிராமத்தில் எடுக்கவேண்டி வந்திருக்கிறது. கதையில் நிறைய விஷயங்களை நகரத்திற்கு ஏற்றபடியே வைத்து எடுத்துவிட்டார். அதனால்தான் டிவி சேனல் வழியாக மக்கள் ஒருவரை நம்புகிறார்கள், அடுத்த காட்சியில் நம்பவில்லை என்று கூறும் கூத்தெல்லாம் நடக்கிறது.

டிஆர்பி ரேட்டிங் படுத்துவிட்டது
கோமாளிமேடை டீம்  

வயதான நாயகர்களுடன் அவர்களின் வயதில் கால்வாசி உள்ள இளம் நடிகைகள் நடிக்கும்போது, படத்தில் அதிகபட்ச கவர்ச்சி காட்சிகள் இருக்கும். நாயகர்களால் ஆடி ஓடி நடனம் ஆட முடியாது. எனவே அவர்களின் வேலையை இளம் நாயகிகள் எடுத்துக்கொண்டு நடனம் ஆடுவார்கள். பாருங்கள். இந்த விமர்சனத்தை எழுதும்போது மிஸ்டர் பச்சன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் நாயகியின் தொப்புளில் ரவிதேஜா முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்னர் வெளியான அதே படப் பாடலில் நாயகியின் பின்புறத்தில் இருகைகளை வைத்து வினோத அசைவுகள் வேறு....

யூட்யூப் ஆட்களுக்கும் ரோஸ்ட் கச்சாப்பொருட்கள் தேவை...

tenor.com


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்