இடுகைகள்

கிரேட்டா துன்பெர்க் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழலியலில் போராடி வரும் இளைஞர்கள்!

படம்
              இளைய போராளிகள் ஜான் பால் ஜோஸ் இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் போராட்டக்கார ர் . உலகளவில் நடைபெறும் இயற்கை பேரிடர்களில் இந்தியாவைச் சார்ந்து கருத்துகளை முன்வைத்த சூழலியல்வாதி . இவர் எழுத்தாளரும் கூட . டெலானி ரினால்ட்ஸ் இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் . மியாமி பல்கலைக்கழகத்தில் படித்தவர் . கடல்நீர்மட்டம் உயர்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறார் . ஷியா பட்டிஸ்டா அமெரிக்காவைச் சேர்ந்தவர் . நியூயார்க்கில் வசித்து வருகிறார் . பிரைடேஸ் பார் ப்யூச்சர் யூத் வெப்பநிலை மாற்ற சூழல் போராட்டத்தின் முக்கியமான தலைவர் . ஹோலி கில்லிபிராண்ட் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் .. இங்கிலாந்து நாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்திவர்கள் இவர்ரகள முக்கி ஆட்டும் பெல்டியர் கனடாவாசி . தூய்மையான தண்ணீருக்கு போராடி வருகிறார் . இதற்கான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . பருவநிலை மாறுதல் போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடி வருகிறார் . ரித்திமா பாண்டே ...

அரசு கொள்கைகளை வகுத்தால் மட்டுமே பூமியைக் காக்க முடியும்!

படம்
நாம் நினைத்ததை நிலைமை மோசமாக உள்ளது டேவிட் வாலஸ் வெல்ஸ் , நியூயார்க் மேகசின் கூடுதல் ஆசிரியர் . வெப்பமயமாதல் பற்றி தி அன்ஹேபிட்டபிள் எர்த் என்ற நூலை எழுதியுள்ளார் . ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவுக்கு வந்தவரிடம் பேசினோம் . நீங்கள் உங்கள் நூலின் தொடக்கத்திலேயே இப்போது உள்ளதை விட நிலைமை மோசமாகும் என்று கூறியுள்ளீர்களே ? நாம் என்ன செய்துள்ளோம் என்று கூட தெரியாதபடி வெப்பமயமாதலுக்கான விஷயங்களை செய்து விட்டோம் . இப்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் கூட புயல்கள் , கடலின் நீர்மட்டம் உயர்வது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் . கொல்கத்தா போன்ற நகரங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் . வெப்ப பாதிப்பால் பலரும் சுருண்டு விழுவார்கள் . வெப்பமயமாதலால் , 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சூழல் அகதியாக இடம்பெயர்வார்கள் . 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டால் இறப்பார்கள் . இதுமட்டுமன்றி , ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் கரையும் . இதனை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதை திட்டமிடுவது அவசியம் . இதில் நிலப்பரப்பு ரீதியான அரசியல...

மக்கள் கொடுத்த பொறுப்பை அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்! - துன்பெர்க்

படம்
நேர்காணல் - கிரேட்டா துன்பெர்க் உலகளவில் இயற்கை சூழலியலுக்களான நாயகியாக மாறியிருப்பவர் இவர்தான். ஸ்வீடனைச்சேர்ந்த பதினாறு வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க், சூழலியலுக்காக போராடுவதில் முன்நின்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். வெப்பமயமாதலை சமாளிக்க இந்தியா என்ன செய்யவேண்டும்? அது குறித்த பிரசாரத்தை மக்களிடம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு வெப்பமயமாதலைக் குறைக்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தவேண்டும். இந்தியா வளரும் நாடு என்பதால் அதனை விட ஸ்வீடன் நாடு இதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென நினைக்கிறேன். மோடிக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? பிரதமர் மோடி வெப்பமயமாதலை முக்கியமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயலாற்றவேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை இந்த பிரச்னையின் விளைவுகளை உணரமாட்டார்கள். உங்களுக்கு பொறுப்புகள் இருந்தாலும் அதனை நிறைவேற்றாதபோது உலகமே பின்னாளில் உங்களை அவதூறாக பேசும். இந்தியாவிலுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? வெப்பமயமாதலுக்காக போராடும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நான் வ...

கிரேட்டா துன்பெர்க்- இளைய போராளி

படம்
கடந்த ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் சிறுமி ஒருத்தி போராட அமர்ந்தாள். என்ன கோரிக்கை, என்ன விஷயம் என யாருக்கும் புரியவில்லை. அப்புறம் பார்த்தால் வெப்பமயமாதலுக்கான போராட்டம் அது. அரண்டு போன ஊடகம், மைக்கையும் கேமராவையும் எடுத்துக்கொண்டு ஓடிவர மெல்ல கிரேட்டா துன்பெர்க்கும், அவரது போராட்டமும் உலகளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கியது.  இதன் விளைவாகத்தான் லண்டனில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக நடந்த போராட்டமும் கூட.  கடந்த ஆகஸ்டில் துன்பெர்க் செய்த போராட்டத்திற்கு அவரது பெற்றோர், சக நண்பர்கள் யாரும் ஆதரவு தரவில்லை. ஆனால் இன்று எட்டு மாதத்திற்கு பிறகு அவரை ஆதரிக்காத ஆட்கள் உலகிலேயே கிடையாது என்ற அளவு துன்பெர்க்கை உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.  71 நாடுகளில் 700 நகரங்களுக்கு மேலாக சுற்றுச்சூழல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது எனக்கு பெரிய ஆச்சரியம் என கண்கள் மினுங்கப் பேசுகிறார் துன்பெர்க். இவரது தந்தை புகழ்பெற்ற நடிகர் எழுத்தாளர் ஸ்வெந்தா துன்பெர்க், தாய் பிரபலமான ஓபரா பாடகி. துன்பெர்க் பெரியளவு யாரையும் கவனம் ஈர்க்கும் சிறப்புகளைக் கொண்டவர் அல்...