இடுகைகள்

இடம்பெயரும் யானைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இடம்பெயரும் யானைகள்!

படம்
இடம்பெயரும் யானைகள்! நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாய நிலங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் யானைகளின் வாழிடம் சுருங்கிவருகிறது. இதன் விளைவாக ஆசிய யானைகள் (Elephas maximus), இமாலய மலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என அறிவியல் இதழ் டைவர்சிட்டி அண்ட் டிஸ்ட்ரிபூஷன்  தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் ஆசிய யானைகளில் 60 சதவீதம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 26,330 முதல் 37,770 வரையிலான யானைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் யானைகள் வாழ்ந்து வந்த 2,56,518 ச.கி.மீ வனப் பரப்பு (41.8%) அழிக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல் அதிகரித்துவருவதோடு, பஞ்சமும் அடுத்த சவாலாக எதிரே நிற்கிறது. எனவே, யானைகள் நீர், உணவுக்கு பிரச்னை இல்லாத மலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. யானைகள் நடமாடும் 101 பகுதிகளிலுள்ள மனிதர்கள், உணவு தேடிவரும் யானைகளை கண்டு திகிலில் உள்ளனர். தகவல்: DowntoEarth படம் - ஆன்டிக் இமேஜஸ்!