இடுகைகள்

பிரிவினை இலக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தி மொழியை விட ஆங்கிலத்தில் நிறைய தகவல்கள் ஆதாரங்கள் உள்ளன! - எழுத்தாளர் கீதாஞ்சலி

படம்
  கீதாஞ்சலி ஸ்ரீ எழுத்தாளர் டெய்ஸி ராக்வெல் மொழிபெயர்ப்பாளர் இவர் எழுதிய ரெட் சமாதி என்ற நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் பெயர், டாம்ப் ஆப் சாண்ட். இதனை டெய்ஸி ராக்வெல் என்ற பெண்மணி மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் தற்போது புக்கர் பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தி நூல் ஒன்று, இப்பரிசு பட்டியலில் இடம்பெறுவது அரிதானது.  கணவர் இறந்தபிறகு, மனைவி பாகிஸ்தான் செல்கிறார். தனது வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை அடையாளம் காண்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி இப்படி கற்பனை செய்து எழுதினீர்கள்? கீதாஞ்சலி - இந்த நூலை எழுத எனக்கு ஏழு ஆண்டுகள் ஆனது. முதிய பெண் பற்றிய பிம்பம்தான் கதைக்கு முக்கியமானது. அவள் கணவரை இழந்திருக்கிறாள். இதுவரை அவள், குடும்பம், கணவன் என வாழ்ந்ததில் பிறர் சொல்லியே அவளது வாழ்க்கை நடந்து வந்திருக்கிறது. இதன் விளைவாக அவள் தனது வாழ்க்கை மீது கொண்ட ஆர்வத்தையே இழந்திருக்கிறாள். கணவரின் இறப்பு பெரும் விடுதலையை அடையாளம் காட்டுகிறது. இனி தன்னுடைய வாழ்க்கை புத்துணர்வு பெறவேண்டும் என நினைக்கிறாள். அதன் பொருட்டே எல்லைகளால் பிரிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான்