இடுகைகள்

விதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் ஊடகங்கள் என்றால் என்ன, அதன் விதிமுறைகளைப் பற்றிய கையேடு!

 டிஜிட்டல் ஜர்னலிசம் ஹேண்ட்புக் சேஜ் பதிப்பகம் இந்த நூலைப் பற்றி சற்று விரிவாக பேசவேண்டும். ஏற்கெனவே, இதைப்பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.அதை நினைவில் கொண்டிருக்கிறேன் நண்பர்களே. நூல் ஆய்வு நூல் என்பதால் 600 பக்கங்களுக்கும் மேல் செல்கிறது. இந்த நூல் முழுக்க உலகம் முழுக்க பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன, எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன, பெரும் ஊடகங்கள் இயல்பான வணிகத்தை மாற்ற முயன்ற நிறுவனங்களை எப்படி நசுக்கின என்று விளக்கமாக கூறியிருக்கிறார்கள்.  டிஜிட்டல் ஊடகங்கள் என்றால், இணையத்தில் உள்ள செய்தி வெளியீட்டு வலைத்தளங்கள் என்று புரிந்துகொள்ளலாம். இன்று வெறும் வலைத்தளங்கள் என்று இல்லாமல் தனியாக செய்திகளை வெளியிட்டு அதிலும் பெரும் சம்பாத்தியத்தைக் காட்டும் நிறுவனங்கள் உண்டு. வேடூநியூஸ், ஒன்இந்தியா ஆகிய தளங்கள் டிஜிட்டல் தளங்களை வெகுசனமயாக்கின. நல்லவிதமாக அல்ல.  எலன் மஸ்க் எப்படி நான் எக்ஸில் வெளியிடும் வீடியோக்கள் ஒருவரை அங்கேயே அதிகநேரம் தங்க வைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா, அதேபோல்தான். எந்தளவு மட்டமாக தலைப்பை வைக்க முடியுமோ அந்தளவு வைப்பார்கள். வியாபா...

இணையத்தை மையமாக கொண்டு தொடங்கும் வணிகத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்!

படம்
  40 ரூல்ஸ் ஃபார் இன்டர்நெட் பிசினஸ் மேத்யூ பால்சன்  கட்டுரை நூல்  ஆங்கிலம் இன்று பெரும்பாலான வணிகம், ஸ்டார்ட்அப்பாக இணையத்தில் தொடங்கப்படுகிறது. முதலீடு பெற்று வளர்ந்தால் அதை பாரம்பரிய வணிகம் போல இடம் பிடித்து அலுவலகம் திறந்து பெரிதாக்குகிறார்கள். ஆனால், இணைய நிறுவனங்கள் வளர்வது முழுக்க வேறுவிதமாக உள்ளது. அலிபாபாவை எடுத்துக்கொள்ளுங்கள். அமேசானின் வணிகத்தைப் போன்று இயங்கும் நிறுவனம். சீனாவில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் உருவாக்கிய மாற்றங்களும் அசாதாரணமானவை. தனது வணிகத்திற்கான அடிப்படை நிதி கட்டமைப்பையே ஒரு நிறுவனம் உருவாக்கி சந்தையைப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல.  இன்று இணையத்தில் மட்டுமே  ஸ்மார்ட்போன்கள் முதலில் விற்கப்பட்டு பிறகு கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் மக்கள் ஆன்லைனில்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு 9 டு 5 வேலை பிடிக்காமல் போய் ஆன்லைன் வணிகம் தொடங்கினால் அதை எப்படி நடத்துவது, வெற்றி பெறுவது, புகார் கொடுப்பவர்களை சமாளிப்பது, நல்ல வாடிக்கையாளர்களை காப்பாற்றிக்கொள்வது ஆகியவற்றை எப்படி செய்வது என நூலாசிரியர் விரிவாக விளக...

யூக்கு டூவு - சீனா பொழுதுபோக்கு வீடியோ துறையில் அரசன்

 file:///home/anbarasu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/3.jpg யூக்கு டூவு - சீனா பொழுதுபோக்கு வீடியோ துறையில் அரசன் யூக்கு டூவு என்ற வலைத்தளம்தான் சீனாவில் பொழுதுபோக்கு வீடியோக்களில் நாற்பது சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இதற்குப்பிறகுதான் பைடு, டென்சென்ட்டெல்லாம் வருகிறது. 2014ஆம் ஆண்டே இதில் 500 மில்லியன் பயனர்கள் இருந்தனர். யூக்கு டூவைத் தொடங்கியவர் விக்டர் கூ. இவர் ஹாங்காங்கை பூர்விகமாக கொண்டவர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் படித்தவர். எம்பிஏவை ஸ்டான்போர்டில் படித்தவர், முதலீட்டு நிறுவனமான ரிச்சினா குழுமத்தில் பணியாற்றி வந்தார். 1999ஆம் ஆண்ட சீனாவில் இணையம் பெரிதாக வளரவில்லை. அப்போது சோகு என்ற நிறுவனத்தில் வேலை செய்தார். தனக்கென தனியாக சொந்த நிறுவனம் தொடங்கும் ஆசை இருந்தது. 2005ஆம் ஆண்டு யூக்கு நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த எட்டு ஆண்டுகளில் நிறுவனம் பெரிதாக வளர்ந்தது. 2010ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு அதன் போட்டியாளரான டூவு.காம் நிறுவனத்தோடு இணைந்தது. சீனாவிலேயே இரண்டாவது பெரிய ஆன்லைன் வீடியோ சேவை நிற...

அமெரிக்காவில் வழங்கப்பட்ட முதல் காப்புரிமை!

படம்
      அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அறிவியல், தொழில்நுட்பம் என இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அறிவியல், தொழில்நுட்பம் என இரண்டுமே தொடர்புடையது என்றாலும் இலக்குகள் வேறுபட்டவை. இயற்கை உலகின் அடிப்படை அறிவைப் பெறுவதே அறிவியலின் இறுதி லட்சியம். அறிவியலை விளக்குவதற்காக ஆராய்ச்சி, கொள்கை, விதிகள், சமன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இதன் வழியாக இயற்கை உலகை அனைத்து மக்களும் புரிந்துகொள்கிறார்கள். தூய அறிவியல் என அழைக்கும் இத்துறையில் படிக்கும் ஆட்களே குறைந்து வருகிறார்கள். தொழில்நுட்பம் என்பது இயற்கை உலகில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கானது. இதன் அடிப்படை நோக்கம், மனித குலத்தை மேம்படுத்துவது, சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவை மட்டுமே. இந்த தொழில்நுட்பத்திற்கு அறிவியலின் கொள்கை, விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. டபுள் பிளைண்ட் ஸ்டடி என்றால் என்ன? ஒரு ஆய்வில் பங்கேற்பவர்கள், அதை நடத்துபவர்கள் ஆகியோருக்கு ஆய்வு பற்றி முக்கியமான அம்சங்கள் தெரியாமல் இருப்பது எனலாம். இந்த வகையில், ஆய்வு பாகுபாடு இன்றி, போலித்தனமாக இல்லாமல் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அறிவியல் கொள்கை, வித...

கொடியை நகல் எடுக்க கூடாது!

படம்
          தனித்துவம் கொண்ட கொடி! வாகைப்பூவோ, தூங்குமூஞ்சி பூவோ உருவாக்கும் கொடி தனித்துவமாக சொல்ல வரும் கருத்தை தெளிவாக கூறவேண்டும். இணையத்தில் நிறைய கொடி வடிவமைப்புகள், டெம்பிளேட்டுகள் உள்ளன. அதையெல்லாம் எடுத்து இசைக்கலைஞர் அனிருத் போல சாம்பிள் பார்த்து கடன் வாங்கி வெற்றியடையலாம் என நினைக்காதீர்கள். எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. நாட்டின் கொடி என்றால் அங்கு வசிக்கும் மக்கள், கலாசாரம், பெருமை, நிலப்பரப்பு என நிறைய விஷயங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும். இன்னொரு நாட்டின் கொடியைப் பார்த்து அப்படியே நகல் எடுப்பது விபரீதத்தில்தான் முடியும். கானா நாட்டின் கொடியைப் பாருங்கள். இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களோடு நடுவில் கருப்பு நட்சத்திரம் உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பிறநாட்டு கொடிகளை அடிப்படையாக கொண்டு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தனித்தன்மையாக உள்ளது. இந்தோனேசியா நாட்டின் கொடியைப் பார்த்தால் அப்படியே மொனாக்கோ நாட்டு கொடியைப் போலவே உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கொடியை அப்படியே தலைகீழாக்கினால் ஸ்பெயின், போலந்த...

பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? - மிஸ்டர் ரோனி

படம்
            பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? இதற்கான பதிலை பலரும் அறிந்திருப்பார்கள். பதில் சொல்வதும் எளிதுதான். ஆனால் அதன் பின்னணிதான் இங்கு முக்கியம். சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளுக்கு 67 நிலவுகள் உள்ளன. இதில் பெரிய நிலவின் பெயர், கனிமெட். 2600 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதுவே பிற கோள்களுக்கும் நிலவு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள தகவல். இதுபற்றிய டிவி வினாடி வினா நிகழ்ச்சியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஜீரோ தொடங்கி பதினெட்டாயிரம் நிலவுகள் வரை பதில் தரலாம் என கூறப்பட்டது. ஆனால் பொருத்தமான உண்மைக்கு அருகில் உள்ள பதில் ஒன்று. பூமிக்கு ஒரு நிலவு உள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஏராளமான பாறைக்கோள்கள் வட்டப்பாதைக்கு வருகின்றன. பல்லாண்டுகளாக சுற்றி வருகின்றன. அவற்றை நாம் நிலவு என்று கூறுவதில்லை. இதற்கு காரணம் இரண்டே விஷயங்கள்தான். துல்லியமாக சொன்னால் அறிவியலாளர்கள் வகுத்த இரண்டு விதிகள். அவை ஆயிரம் ஆண்டுகளாக வட்டப்பாதையில் சுற்றிவர வேண்டும். அதன் அளவு ஐந்து கி.மீ. என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்கவேண்...

சூழல் சட்டங்களுக்கு எதிராக ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்!

படம்
  ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்! விவசாயிகள் மேற்குலக நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு விதிமுறைகளை மாற்றக்கோரி பெரும் திரளாக போராடி வருகிறார்கள். போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உக்கிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம், ஐரோப்பிய யூனியனின் சூழல் பாதுகாப்பு விதிமுறைகள், இறைச்சி, தானியங்களை மலிவான விலைக்கு அரசுகள் இறக்குமதி செய்வது, உரவிலை ஏற்றம் ஆகியவை முக்கியமான காரணங்கள். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரும் இன்னொரு மறைமுக காரணி.  உலக நாடுகளில் வேறுபாடுகள் இன்றி வெப்ப அலை, வெள்ளம், பஞ்சம், காட்டுத்தீ பாதிப்புகள் ஏறபட்டு வருகின்றன. இந்த பாதிப்புகள் ஏற்படும் கால அளவு நீண்டுகொண்டே வருகிறது. வெப்பம் இயல்பாகவே அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் கடந்த 2022, 2023 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் உற்பத்தி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. ஸ்பெயின் நாட்டில் கோதுமை, அரிசி, பார்லி ஆகிய தானியங்கள் உற்பத்தி பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.  ஜெர்மனி, போலந்து நாடுகளில் அதிக மழைபொழிவு காரணமாக கோதுமை பயிர் சேதமாகி அறுவடை செய்யும் காலம் தவறிப்போயுள்ளது. இத்த...

மேற்கு நாடுகளின் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  டியூக் பல்கலைக்கழகம், சீனா நியூயார்க் பல்கலைக்கழகம், சீனா லிவர்பூல் பல்கலைக்கழகம், சீனா வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கண்காணிக்கும் சீனா! சீனா, தனது நாட்டிற்குள் வெளிநாட்டினரின் சிந்தனைகள் நூல் வழியாக அல்லது வேறு எந்த வழியாக வருவதையும் விரும்புவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அங்கு செயல்பட்டுவரும் நியூயார்க் பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்து வரும் மாற்றங்களைக் கூறலாம். இங்கு அமெரிக்காவின் சுதந்திரமான சிந்தனை கொண்ட பேராசிரியர்களை பல்கலைக்கழக போர்டில் உள்ள கம்யூனிச கட்சியினர் மெல்ல அகற்றி வருகின்றனர். பாடநூல்களையும் மாற்றச்சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சீனாவில் வந்து கல்வித் தொழில் சேவையை செய்யும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சீன அரசின் பங்களிப்பு உண்டு. அதாவது, தொழில் கூட்டாளி. எனவே, இந்த அடிப்படையில் கம்யூனிச கட்சி உறுப்பினர்   போர்டில் அமர்ந்து சீன அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களை, விருப்பு வெறுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதை பல்கலைக்கழகம் மறுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. மேற்குநாடுகளின் அறிவியல்...

பத்திரிகையாளர்களை அடக்கி ஒடுக்கும் சீன அரசு! விசுவாசமே முக்கியம், நேர்மை அல்ல!

படம்
  அடிமை பத்திரிகையாளர்களை உருவாக்கும் சீனா திருத்தப்படும் ஊடகங்கள் – சீனாவில் ஊடகங்களுக்கான புதிய விதிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சீன அதிபர் ஜின்பிங், அரசின் நாளிதழ், டிவி சேனல்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். செய்திகள் உண்மையான தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின்படி இருக்கவேண்டும் என்று கூறினார். கூடவே, பத்திரிகையாளர்கள் கம்யூனிச கட்சியை நேசித்து அதை காக்கவேண்டும் என மறக்காமல் கூறினார். அவர் கூறிய விதிகளுக்கும், உண்மையாக செயல்படும் பத்திரிகையாளர்களுக்கும் முரண்பாடுகள் வந்தால் என்ன செய்வது என்று ஜின்பிங் கூறவில்லை. ஆனால், செயல்பாட்டில் அதை காட்டினார். கடந்த ஜூன் 30 அன்று, பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி ஆப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. அதில், மக்களின் கருத்துகளை எப்படி திருத்தி வழிகாட்டுவது என்பதற்கான செயல்முறை இருந்தது. ஏறத்தாழ அந்த ஆப், எப்படி கம்யூனிச கட்சிக்கு ஆதரவான முறையில் பத்திரிகையாளர்கள் செயல்படுவது என்பதைப் பற்றியதுதான். ஆப், வழிகாட்டு நெறிமுறைகளை சற்று மென்மையாக கூறினாலும், பத்திரிகையாளர் நேர்மையாக உண்மையாக நடந்தால் விளைவுகள் கடுமையாகவே இருந்தன. ஏனெனில் ஏரா...

உங்களை தலைவராக்கும் விதிகளைக் கொண்ட நூல்!

படம்
  21 இர் ரெப்யூடபிள் லாஸ் ஆஃப் லீடர்ஷிப் ஜான் சி மேக்ஸ்வெல் 336 பக்கம் ஹார்ப்பர் கோலின்ஸ்   தலைமைத்துவத்தை ஒருவர் எப்படி வளர்த்துக்கொள்வது என்பதை ஏராளமான அமெரிக்க நாட்டு உதாரணங்களோடு எழுத்தாளர் எழுதி விளக்கியுள்ளார். பிறரது வாழ்க்கை அனுபவங்களோடு, தான் தேவாலயத்தில் பாதிரியாக பொறுப்பேற்று செயல்பட்டபோது செய்த சரி, தவறு, அதனால் நேர்ந்த விளைவுகள் அனைத்தையும் தான் பேசும் தலைமைத்துவ மையப்பொருளுக்கு இணைத்திருக்கிறார். நூலில் இந்தியாவைப் பற்றி மோசமான விவரிப்புதான் உள்ளது. அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. காந்தி, இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சுதந்திரம் பெற்றுத்தர எப்படி உழைத்தார், மக்களை தொடர்புகொண்டார் என்பதை சிறப்பாக விளக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவது, எதிர்ப்புகளை வெல்வது, பிறருக்கு உதாரணமாக முன்னே நின்று தடைகளை எதிர்கொள்வது, எதிரிகளை வெல்வது, தொலைநோக்காக யோசிப்பது, நெருக்கடியில் வேகமாக சிந்தித்து செயல்படுவது என ஏராளமான விஷயங்களை உதாரணங்களுடன் மெல்ல விவரித்து எழுதியிருக்கிறார். சில இடங்களில் எழுத்தாளர் தான் நடத்தும் பயிற்சி வகுப்பு ...

இதழியல் லாபம் சம்பாதிக்கும் வணிகத் தொழிலாக மாறிய வரலாறு!

படம்
  ஜர்னலிசம் – ஷார்ட் இன்ட்ரோடக்‌ஷன் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பத்திரிகை தொழில் அன்றிலிருந்து இன்றுவரை கொள்கை ரீதியாக செயல்பாட்டு ரீதியாக எப்படி மாறியிருக்கிறது என கூறுகிறார்கள். நூலில் அதிகம் பேசப்படுபவர், ரூபர்ட் முர்டோக் என்ற ஊடக தொழிலதிபர்தான். இவர்தான் ஸ்டார் டிவி குழுமத்தை தொடங்கியவர். இப்போது ஸ்டார் டிவி குழுமத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கிவிட்டது. ரூபர்ட்டின் ஃபாக்ஸ் டிவி அமெரிக்க ஊடக கலாசாரத்தை மறு வடிவமைப்பு செய்தது என்று கூற வேண்டும். ஐரோப்பா முழுக்கவே ஊடகங்களின் கொள்கைகளை மாற்றி பொழுதுபோக்கை முதன்மையாக்கி செய்திகளின் தரத்தை கீழிறக்கிய ஊடக தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகள், அரசியல்வாதிகளுக்கு ஏற்றபடி செய்திகளை மக்கள் மாற்றிப் புரிந்துகொள்ளும்படி எழுதுவது, மடை மாற்றி தலைப்புகளை வைப்பது, முக்கியமான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என இங்கிலாந்தில் உள்ள சன், கார்டியன், டெய்லி மிரர் என ஏராளமான நாளிதழ்களை, ஜர்னலிசம் நூல் சாடுகிறது. எடுத்துக்காட்டுகளுடன் தான் பேசியவற்றை வாசகர்களுக்கு கொடுக்கிறது. நூலில் உள்ள உள்பக்க படங்களை கீழே உள்ள கேப்ஷன்களுடன் சேர்...

15.அதிக மின்கட்டணத்தை மக்களிடம் வாங்க ஆடிய ஆட்டம்! - மோசடி மன்னன் அதானி

படம்
  தேசத்திற்காக அதானி உழைத்தபோது.. ஊழலைப் பற்றிய விசாரணை... ஊழலைப்பற்றிய காவல்துறை விசாரணை   விசாரணைக்காலம் 2006-2010 2011ஆம் ஆண்டு, கர்நாடகத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் குறைகேள் அதிகாரி, 466 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சுரங்க தொழிலை செய்பவர்கள் எப்படி பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி முறைகேடாக இரும்புத்தாதுவை கடத்துகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. (ப.12) மாநில அரசில் முறைகேடான ஆட்சி நிர்வாகம், ஊழல் ஆகியவற்றை விசாரிப்பதே குறைகேள் அதிகாரியின் வேலை. அவர் தயாரித்த அறிக்கையில், பெலகிரி அருகே உள்ள துறைமுகத்தை வாடகைக்கு எடுத்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனமும், கூடவே இன்னொரு நிறுவனமும் சட்டவிரோதமாக இரும்புத்தாதுவை அகழ்ந்து எடுத்து விற்பனை செய்ததாக கூறப்பட்டிருந்தது. பெலகிரி துறைமுகம், ஊழலுக்கான மைய இடத்தைப் பிடித்தது. மோசடியின் மதிப்பு அக்காலகட்டத்தில் 12 பில்லியன் டாலர்களாக இருந்தது. அரசுக்கு சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்துள்ளதோடு, முறையான ஆதாய உரிமைத்தொகைகளையும் வழங்கவில்லை. இதுபற்றி சுரங்க நிறுவனங்கள் எப்படி நுட்பமாக ஏமாற்றினார்கள்...

காடுகள் சட்டத்தில் மாறும் விதிகள்!

படம்
  வனவிலங்கு மேலாண்மையில் புதிய சீர்திருத்தம்! இந்தியாவில் வன விலங்குகளையும், அவை வாழும் காடுகளையும் பாதுகாக்க வனப்பாதுகாப்பு சட்டம் உள்ளது. 1972ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. தற்போதுவரை இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.   2021ஆம் ஆண்டு மத்திய அரசு, வனப் பாதுகாப்பு சட்டத்தில் சில மாறுதல்களை செய்துள்ளது. இதில், விளைநிலங்களுக்குள் வரும் விலங்குகளை வேட்டையாடுவது குற்றமல்ல என்ற ஷரத்து இடம்பெற்றிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய சட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.  மேற்குலக நாடுகளில் விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிமங்களை அரசு வழங்குவது, வருவாய்க்கான முக்கிய வழி. “பாதுகாக்கப்பட்ட பகுதி, தேசியப் பூங்கா ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, பிற இடங்களுக்கு வரும் விலங்குகளை வேட்டையாடுவது  விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க உதவும்” என ட்ரூ கன்சர்வேசன் அலையன்ஸ்(TCA) என்ற அமைப்பு கூறியுள்ளது. மேலும், வனப்பாதுகாப்பு சட்டம்...

துப்பாக்கி வன்முறை குற்றங்கள் குறைவாக உள்ள நாடு ஜப்பான்!

படம்
  ஜப்பான் நாட்டில் துப்பாக்கிகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் நிறைய விதிகள், சட்டங்கள் உள்ளன. குடிமக்கள் ஷாட்கன், ஏர் ரைபிள் மட்டுமே வாங்க முடியும். ஹேண்ட் கன் ரகங்களை வாங்க முடியாது.  துப்பாக்கி வாங்க நினைத்தால் இதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவேண்டும். அடுத்து, எழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும். பிறகு, துப்பாக்கி சுடும் பயிற்சியில் வெற்றி பெறவேண்டும். இதன் பின்னால், மனநலன் சார்ந்த தேர்வு, சாப்பிடும் மருந்துகள் பற்றிய சோதனை நடைபெறும். இவையன்றி, நமது பின்னணி பற்றிய தேர்வும் உண்டு.  இதெல்லாம் துப்பாக்கி வாங்குவதற்குத்தான். அதற்கு பிறகு இன்னும் சில நடைமுறைகள் உள்ளன.  துப்பாக்கியை அருகிலுள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்யவேண்டும். துப்பாக்கி பற்றிய தகவல்கள், தோட்டா பற்றியும் கூறவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தோட்டாக்களை காவல் நிலையத்தார் சோதனை செய்வார்கள். துப்பாக்கி பயன்படுத்தும் உரிமத்தை  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இப்படி புதுப்பிக்கும்போது எழுத்து தேர்வு எழுதவேண்டும்.  தண்டனை என்ன? துப்பாக்கியை வைத்து குற்றங்களை பெரிதாக ச...

10 நிமிட டெலிவரி பயன் தருகிறதா?

படம்
  பத்தொன்பது நிமிட டெலிவரியைப் பார்த்திருப்பீர்கள். பீட்ஸா கம்பெனிகள்தான் வேகமான டெலிவரி என்ற விஷயத்தை உருவாக்கியது. இந்தவகையில் அவர்கள் 45 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்கு மாறினார்கள். இப்போது பிளிங்இட், பிக் பேஸ்கட், ஸ்விக்கி, ஜோமோடோ, டன்சோ என பலரும் இருபது நிமிட டெலிவரி சிஸ்டத்தில் வேலை செய்கிறார்கள். இதில் கூட டெலிவரி செய்யும் ஆட்கள் நகரங்களில் வேகமாக செல்வது,சிக்னல் விதிகளை மீறுவது என செல்கிறார்கள். இதோடு பைக் டாக்சிகளும் ஓடுவதில் பலருக்கும் குழப்பமாகிறது.  இத்தனையும்  தாண்டி ஸெப்டோ என்ற நிறுவனம் மார்க்கெட்டில் உள்ளே வரும்போதே பத்து நிமிட டெலிவரி என்று கூறி உள்ளே நுழைந்தது. இதனை தொடங்கியவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் படிப்பை முடிக்காத இரு இளைஞர்கள். ஒன்பது மாத நிறுவனமான இதன் இயக்குநர் ஆதித் பலிச்சா. இவரது நிறுவனம் இப்போதைக்கு 11 நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் 24 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.  200 மில்லியன் நிதி திரட்டிய நிறுவனத்தின் மதிப்பு 900 மில்லியன் ஆகும்.  ஆதித் பலிச்சா (வலதுபுறம்) வேகமாக பொருட்களை டெலிவரி செய்த ஆர்டர் செய்பவர்கள...

தலைவிதியை மாற்றி எழுத முடியுமா? - காதலைக் காப்பாற்ற போராடும் கைரேகை நிபுணன்- ராதேஷ்யாம்

படம்
  ராதே ஷ்யாம்  ராதாகிருஷ்ண குமார் மனோஜ் பரம ஹம்சா இசை - ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி - தமன் எஸ்  புகழ்பெற்ற கைரேகை வல்லுநரான விக்ரம் ஆதித்யாவிற்கு, சொந்த வாழ்க்கையில் நடக்கும் காதலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா என்பதும்தான் கதை.  படம் எழுபது, எண்பதுகளில் நடக்கும் கதை. ராதே ஸ்யாம் என்பதற்கு கிருஷ்ணன் அல்லது ராதா கிருஷ்ணன் என பொருள் கொள்ளலாம். ஏன் இயக்குநர் தனது பெயரைக் கூட முதல் படத்திற்கு வைத்துக்கொண்டார் என நினைக்கலாம். வேத பாடசாலையில் உள்ள குருவான சத்யராஜ், பார்வையற்றவர். கைரேகையை தொட்டுணர்ந்து சொல்லும் தீர்க்கமான ஆற்றலுடையவர். இவரது சீடர் தான் விக்ரம் ஆதித்யா. இவருக்கும் இஸ்ரோ விஞ்ஞானியான தலைவாசல் விஜய்க்கும் நடக்கும் விவாதமே படத்தின் போக்கை சொல்லிவிடுகிறது. இதில் சத்யராஜ் ஜோதிட சாஸ்திரத்தை நம்பினாலும், மனிதனின் சிந்திக்கும் அறிவு செய்யும் மாயத்தை உணர்ந்தே இருக்கிறார். இதில் இவரது கிரேட் சிஷ்யரான விக்ரம் ஆதித்யா, சற்று மாறுபட்டு விதியை கணித்தால் மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.  இதனால் நிறைய பிரபலங்களிடம் அப்படியே உண்மையை சொல்லி வம்பு தும்புகளை...

ரோபோக்களை அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்திய அமெரிக்க எழுத்தாளர்! - ஐசக் அசிமோவ்

படம்
  எழுத்தாளர் ஐசக் அசிமோவ் அறிவியல் ஜெகஜால எழுத்தாளர்  ஐசக் அசிமோவ் கலையும், அறிவியலும் தனித்தனி உலகம் என்று கூறுபவர்கள் உண்டு. இன்றுவரையிலும் இதனை கோட்பாடாக கருதி விவாதம் செய்பவர்கள் பலர். ஆனால்,  அறிவியல் எழுத்தாளர் ஐசக் அசிமோவ் இரண்டு பிரிவுக்கும் தொடர்புண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என கூறினார்.  கலைஞனின் அறிவுடன் பிரபஞ்சத்தைப் பார்ப்பது என கூறினார் ஐசக் அசிமோவ். இவரும் இதற்கு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் பேராசிரியராக பணியாற்றினார் ஐசக் அசிமோவ்.  அறிவியல் புனைவுகளை எழுதியதில் இவர் இன்றளவும் மகத்தான எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். இவர் எழுதிய காலாடிக் எம்பயர், ரோபோட் ஆகிய தொடர் கதைகளின் வழியாக மூன்று முக்கிய எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெற்றார். இப்பட்டியலில் ஆர்தர் சி கிளார்க், ராபர்ட் ஹெய்ன்லெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  சோவியத் யூனியனிலிருந்து இடம்பெயர்ந்த யூதக்குடும்பம் ஐசக்கினுடையது. 1920ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று பிறந்தவர். இவர்களது பெற்றோர் அமெரிக்காவில் தங்களது எதிர்காலத்தை உருவாக்க கடினமாக உழைத்தனர்....

போலிச்செய்திகளுக்கு ஏற்ப நாமும் விதிகளை மாற்றி கண்டுபிடிப்புகளை அதிகரிக்க வேண்டும்! - வான் டெர் லிண்டென்

படம்
      வான் டெர் லிண்டென் போலிச்செய்தி ஆய்வாளர் உங்களுக்கு போலிச்செய்திகளைக் கண்டறிவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி ? உலஇரண்டாவது உலகப்போர் நடைபெற்று முடிந்தபிறகும் , பிற மனிதர்களின் மோசமான நடவடிக்கைகள் , ஆபத்தான யோசனைகளை அறிந்தபிறகுதான் இதைப்பற்றி ஆராய வேண்டும் என்று தோன்றியது . இது அனைத்து சமூக உளவியலாளர்களின் எமமும்தான் . மக்கள் எப்படி செய்திகளின் மூலம் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள் என்பதை ஆராய நினைத்தேன் . 2015 ஆம் ஆண்டு நான் அமெரிக்க தேர்தலுக்கு முன்னர் , பருவச்சூழல் மாறுபாடு பற்றிய தவறான தகவல்களை படித்தேன் . குறிப்பாக இப்படி தவறான தகவல்களை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கு பாடுபடும் மனிதர்களை முடக்க சிலர் நினைத்தனர் . இதில் ஏராளமான மூடநம்பிக்கைகள் , முட்டாள் தனங்கள் இருந்தாலும் இதன் அடிப்படை நோக்கம் மேற்சொன்னதுதான் . எங்களுக்கு முன்னிருந்த கேள்வி எப்படி இதிலிருந்து மக்களை காப்பது , அ வர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பதுதான் . தவறான தகவல்களுக்கு எதிராக உளவியல் தடுப்பூசி என்ற யோசனையை எங்கே பிடித்தீர்கள் ? ஐம்பது அறுபதுகளில் பில் மெக்யூர...