துப்பாக்கி வன்முறை குற்றங்கள் குறைவாக உள்ள நாடு ஜப்பான்!
ஜப்பான் நாட்டில் துப்பாக்கிகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் நிறைய விதிகள், சட்டங்கள் உள்ளன. குடிமக்கள் ஷாட்கன், ஏர் ரைபிள் மட்டுமே வாங்க முடியும். ஹேண்ட் கன் ரகங்களை வாங்க முடியாது.
துப்பாக்கி வாங்க நினைத்தால் இதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவேண்டும். அடுத்து, எழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும். பிறகு, துப்பாக்கி சுடும் பயிற்சியில் வெற்றி பெறவேண்டும். இதன் பின்னால், மனநலன் சார்ந்த தேர்வு, சாப்பிடும் மருந்துகள் பற்றிய சோதனை நடைபெறும். இவையன்றி, நமது பின்னணி பற்றிய தேர்வும் உண்டு.
இதெல்லாம் துப்பாக்கி வாங்குவதற்குத்தான். அதற்கு பிறகு இன்னும் சில நடைமுறைகள் உள்ளன.
துப்பாக்கியை அருகிலுள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்யவேண்டும். துப்பாக்கி பற்றிய தகவல்கள், தோட்டா பற்றியும் கூறவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தோட்டாக்களை காவல் நிலையத்தார் சோதனை செய்வார்கள். துப்பாக்கி பயன்படுத்தும் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இப்படி புதுப்பிக்கும்போது எழுத்து தேர்வு எழுதவேண்டும்.
தண்டனை என்ன?
துப்பாக்கியை வைத்து குற்றங்களை பெரிதாக செய்தால் 15 ஆண்டுகள் சிறை வாசம் உண்டு. துப்பாக்கியின் எண்ணிக்கை கூடினால் மேலும் 15 ஆண்டுகள் சிறையில் வாழவேண்டும். பொது இடத்தில் துப்பாக்கியை பயன்படுத்தினால் ஆயுள் சிறைவாசம் நிச்சயம் உண்டு.
துப்பாக்கி படுகொலைகள்
ஆப்ரஹாம் லிங்கன்
படுகொலை செய்யப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் லிங்கன்தான். இவர் , நடிகர் வில்கெஸ் பூத் என்பவரால் நாடகம் பார்க்கும் தியேட்டரில் சுட்டு கொல்லப்பட்டார். 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று கொலை செய்யப்பட்டார். லிங்கனின் மரணத்திற்குப் பிறகுதான் - நான்கு நாட்கள் கழித்து, அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
ஜான் எஃப் கென்னடி
1963ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். டல்லாஸ் தெருவில் ஹார்வி ஆஸ்வால்ட் என்பவர் இவரது கொலைக்கு காரணமானார்.
பெனாசீர் பூட்டோ
பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர். தேர்தல் பேரணியின்போது துப்பாக்கியால் சுடப்பட்டார். கூடவே தற்கொலை படை தாக்குதலும் நடத்தப்பட்டது. 2007ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பெனாசீர் பூட்டோ சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
மனித உரிமைகள் செயல்பாட்டாளர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். டென்னிசியில் நடந்த ஊதிய உயர்வு போராட்டத்தில் பங்கேற்றபோது ஸ்னைப்பர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று அகிம்சை, சகோதரத்துவம் பேசிய மார்ட்டின் புகழுடம்பு எய்தினார்.
ஜான் லென்னான்
பீட்டில்ஸ் குழுவைச் சேர்ந்த பாடகர் லென்னான் 1980ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அப்படி அவர் கொல்லப்பட்டது, பீட்டில்ஸ் இசைக்குழுவின் ரசிகர் ஒருவரால்தான். லென்னான் அவரது அபார்ட்மெண்டுக்கு வெளியில் நின்ற ரசிகரால் சுடப்பட்டார்.
பிரான்ஸ் ஃபெர்டினாண்ட்
ஆஸ்திரிய ஹங்கேரிய மன்னர். இவரை செர்பிய நாட்டு தேசியவாதி சுட்டுக்கொன்றார். 1914ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று ஃபெர்டினாண்ட் கொல்லப்பட்ட பிறகு நடந்த விஷயங்கள் முதல் உலகப்போரை உருவாக்கியது.
மோகன்தாஸ் காந்தி
1948ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று தேசத்தந்தை காந்தி பிரார்த்தனைக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சே என்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த இந்துத்துவ அடிப்படைவாதியால் சுடப்பட்டார். நாட்டை பிரித்ததுதான் காரணம் என்று கோட்சே காரணம் சொன்னார்.
images
pixabay
story translation TOI
கருத்துகள்
கருத்துரையிடுக