பசுமையான மரங்கள் நடப்படவேண்டும் என்பதே எனது லட்சியம்! - பீட்டர் ஜேம்ஸ்

 








நேர்காணல்

பீட்டர் ஜேம்ஸ்

உதவி பேராசிரியர், 

சூழலியல், ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

சூழலியல் பற்றிய தங்களது ஆராய்ச்சியை விளக்க முடியுமா?

இயற்கை சார்ந்த இடங்கள் எப்படி மனிதர்களின் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கின்றன, தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்து வருகிறேன். 1976ஆம் ஆண்டு தொடங்கி பல தனிப்பட்ட சூழலியலாளர்கள் செய்த ஆய்வுத்தகவல்களை இதற்காக ஆராய்ந்து வருகிறேன். மனிதர்களின் நோய், இறப்பு ஆகியவற்றையும் கவனித்து வருகிறோம். 

இயற்கைச் சூழல் மனிதர்களுக்கு என்ன பயன்களை தருகிறது?

நாம் இன்று டிஜிட்டல் உலகில் கணினி, ஸ்மார்ட்போன்  ஆகியவற்றின் திரைகளைப் பார்க்க அதிக நேரத்தை செலவிடுகிறோம். இது நமது கவனத்தை சிதறடிக்கிறது. இயற்கைச்சூழல், சீர்குலைந்த கவனத்தை சீராக்கி, திறன்களையும் மெருகேற்றுகிறது. பணியாற்றும் போது ஜன்னல் வழியாக தெரியும் இயற்கை காட்சிகள் ஒருவரின் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கிறது. 

 சூழல் பற்றிய தகவல்களை எப்படி சேகரிக்கிறீர்கள்?

ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்தி சூழல் பற்றிய தகவல்களை சேகரிக்கிறோம். இதோடு கைகளில் அணியும் டிஜிட்டல் கருவிகள், டீப் லேர்னிங் அல்காரிதம், கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறோம். 

இயற்கை சூழல் ஆய்வில் நீங்கள் கண்ட வேறுபாடு என்ன?

வசதி படைத்தவர்கள் அதனை எளிதாக அணுக முடியும் என்பதாக பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். உங்கள் வீட்டில் உங்கள் பங்கிற்கு ஒரு மரத்தை வளர்த்தால் போதுமானது. நான் இதற்கு 3-30-300 என்ற சூத்திரம் வைத்திருக்கிறேன். ஒரு வீட்டில் மூன்று மரங்களை வளர்க்கலாம். அவர்களின் வீட்டை மரங்களே 30 சதவீதம் கூரையாக மூடியிருக்கவேண்டும். 300 மீட்டர் தூர இடைவெளியில் பசுமையான மரங்கள் நடப்பட்டிருக்கவேண்டும். இதுதான் எனது லட்சியம். 

nature lessens anxiety and dlows cognitive decline


toi apr 30,2022

https://www.hsph.harvard.edu/peter-james/

கருத்துகள்