இடுகைகள்

பச்சோந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய உயிரினங்கள் - 2021

படம்
  2021 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட புதிய உயிரினங்கள்! உலகின் சிறிய பல்லி, புதிய இன ஆக்டோபஸ், எறும்பு என பல்வேறு புதிய உயிரினங்கள் உலகில் கண்டறியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதையும் மனிதன் ஆக்கிரமித்துவிட்டான் என்று தோன்றினாலும் கூட நாம் நினைத்துப்பார்க்க முடியாத ரகசியங்களை இயற்கை கொண்டிருக்கிறது. அப்படி கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட உயிரினங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.  எறும்பு (Strumigenys ayersthey) ஈகுவடார் நாட்டில் சாகோ டேரியன் எனும் பகுதியில் புதிய எறும்பு கண்டறியப்பட்டது. யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டக்ளஸ் பூஹெர் எனும் ஆய்வாளர் எறும்பைக் கண்டுபிடித்து அதனை உறுதி செய்தார். எறும்புக்கு ஸ்ட்ரூமிஜெனிஸ்  அயர்ஸ்தே (Strumigenys ayersthey) என்று தனக்கு பிடித்த ராக் இசைக்கலைஞரின் பெயரை சூட்டியிருக்கிறார் டக்ளஸ்.   நிறம் மாறாத பச்சோந்தி (Brookesia nana) நகத்தை விட சற்றே பெரிதாக இருக்கும் பச்சோந்தி (B.nana) இது.  ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்தில் ஆண், பெண் என இரண்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மடகாஸ்கரில் உள்ள மழைக்காடுகளில் அமைந்துள்ள மலைத்தொடர்தான் பச்சோந்தியின் இருப்பிடம். பச்சோந்தி