இடுகைகள்

பசுமைப் புர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் பெருமையான சாதனைகள்! India@75

படம்
  இந்தியாவின் பெருமையான சாதனைகள்! இந்திய அரசியலமைப்பு இந்தியாவின் அரசியலமைப்பு நாட்டைக் கட்டமைத்ததில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றை இதில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குடிமக்களுக்கு வழங்குகின்றன. அனைத்து மாநிலங்களுக்கான உரிமைகளை உள்ளடக்கிய ஒன்றிய அரசு என்பதை அரசியலமைப்புச் சட்டங்களே உறுதிப்படுத்துகின்றன. இன்று அதனை உடைக்க மதவாத கும்பல் முயன்றாலும், அது உருவாக்கப்பட்ட காலத்திலும் இன்றும் வலிமையான ஒன்றாக எளிய மக்களுக்கும் உதவுகிறதாகவே உள்ளது.  அனைவருக்கும் வாக்குரிமை பாலினம், வகுப்பு, கல்வி, சாதி, மதம்  என எந்த பாகுபாடுமின்றி அனைத்து வயது வந்தோர்களுக்கும் வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியுள்ளது. பல்லாண்டுகளாக காலனித்துவ நாடாக இருந்த நாடு இந்தியா. பணக்கார ர்கள் ஏழைகளுக்கான இடைவெளி இன்றும் இருக்கிறது. ஆனாலும் அனைத்து மக்களுக்குமான வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியது மகத்தான சாதனை.  ராணுவ ஒழுக்கம் இந்தியாவில் அருகில் உள்ள பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளில் ராணுவ கலகம் நடந்துள்ளது. இன்றுவரை பாகிஸ்தானில் ராணுவம்தான் மறைமுக ஆட