இடுகைகள்

புரட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செவ்வானத்தில் வெள்ளை நட்சத்திரம் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  பீகார், மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான காடுகள் உள்ளன. இங்கு வாழும் பழங்குடிகளின் வாழ்க்கை மோசமாகிக் கொண்டே வருகிறது. கனிமங்களை அகழ்ந்தெடுக்க இம்மக்களை பல்வேறு வசதிகளைத் தருவதாக கூறி வேறு இடங்களுக்கு மாற்ற அரசும், தனியார் அமைப்புகளும், கூலிப்படையினரும் முயன்று வருகின்றனர. அங்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என செருக்குறி ராஜ்குமார் எழுதிய கட்டுரைகளின் சுருக்கமான தமிழாக்கமே இந்த நூல்.  நூலை வாசிப்பதன் மூலம் ஆதிவாசி பழங்குடிகள் எந்தளவு அரச பயங்கரவாதத்தின் பாதிப்பில் உள்ளனர் என்பதை அறியலாம். நூலில் உள்ள இந்து நாளிதழுக்கு செ.ரா அளித்த நேர்காணல் முக்கியமானது. அதில் அவர் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். இதில் கட்சி ரீதியான விமர்சனங்களும் உள்ளடங்கும்.  நூலை ஸ்கேன் செய்தும் வாசிக்கலாம்.... நூல்களை வாசிக்க.... செவ்வானத்தில் வெள்ளை நட்சத்திரம் நூல் https://www.amazon.in/dp/B0BNQFWFL5 நட்பதிகாரம் https://www.amazon.in/dp/B08B14WJ6M நெ.1 சமூக தொழில் அதிபர் https://www.amazon.in/dp/B08CCW8P7F ஜனநாயக இந்தியா https://www.am

வலியால் மரத்துப்போகும் உடல்! - கதிரவனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.7.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா? வேலை எப்படி போகிறது? தாய் - மார்க்சிம் கார்க்கி நாவலைப் படித்தேன். 1334 பக்கம். தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம். பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன.  ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது. பார்ப்போம். பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. இந்தளவு பதிப்பாக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை. ரூமில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை. பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம். சாதாரண பாய் வாங்கினால், எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது. தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது.  அன்பரசு  2 21.7.2021 மயிலை அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. ஒரு கடிதம் எழுதி அன

பெண்களின் உரிமைக்காக பாடுபட்ட பெண் செயல்பாட்டாளர்கள்!

படம்
            மாற்றங்களை ஏற்படுத்திய பெண்கள் இளவரசி இசபெல் - பிரேசில் இரண்டாம் பெட்ரோ மன்னரின் மகள்தான் இசபெல் . தந்தை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது இசபெல் , தங்க சட்டம் என்பதை கொண்டு வந்தார் . இதன்மூலம் பிரேசில் நாட்டில் அடிமை முறையை ஒழித்தார் . இது அடிமை வியாபாரிகளையும் , செல்வந்தர்களையும் கோபப்படுத்தியது . இதனால் இவர்கள் ஒன்றாக சேர்ந்த அரச குடும்பத்தை ஆட்சியிலிருந்து அகற்றும் கலகத்தை தொடங்கினர் . கலகம் தொடங்கியதால் பிரான்சிற்கு சென்ற இளவரசி இசபெல் , தனது 30 ஆண்டுகளை வெளிநாட்டில் செலவழித்தார் . ஹெலன் கெல்லர் பார்வை , பேச்சுத்திறன் , செவித்திறன் இல்லாதவர் . பிரெய்லி முறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற சாதனையாளர் . சைகை முறையில் பிறருடன் உரையாடினார் . பிரெய்லி முறையில் பனிரெண்டு நூல்களை எழுதியுள்ளார் . ஹெலன் கெல்லர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது . ரேச்சல் கார்சன் இன்றைய சூழலியல் போராட்டங்களுக்கான முன்னோடி . கடல் சார்ந்த உயிரியல் ஆராய்ச்சிகளை திறம்பட செய்தவர் . 1962 ஆம் ஆண்ட

ராப் இசையால் சமூக பிரச்னைகளைப் பேச முடியும்! - பரவும் ராப், ஹிப்-ஹாப் இசைக்குழுக்கள்

படம்
swadesi சமூகப் பிரச்னைகளை தீர்க்கும் இசை ! இன்று திரைப்படங்கள் சமூக பிரச்னைகள் பற்றி பேசுவது குறைந்துவிட்டது . அரிதாகவே சில முதுகெலும்பு உள்ள இயக்குநர்கள் பிரச்னைகளை சந்தித்து படங்களை வெளியிடுகிறார்கள் . அவையும் பார்க்கப்படுவது மக்கள் கையில்தான் உள்ளது . ஆனால் தனியிசை பாடல்களாக இசைக்கலைஞர்கள் வெளியிடும் பாடல்கள் இணையம் வழியாக எளிதாக மக்களைச் சென்று சேர்கிறது . இதனை இந்தி திரைப்படம் கல்லி பாய் முதன்முதலில் தொடங்கி வைத்தது . இப்படத்தில் இசைக்கலைஞர் டிவைனின் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டது . மேல்நாட்டுப் பாடல்களை பார்த்தால் அழகான செட் , ஃபெராரி காரில் வந்து தன்னை மறந்து போன காதலியைப் பற்றி பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்கள் . இன்று அதற்கு மாற்றாக சமூக பிரச்னைகளைப் பற்றி பாடத்தொடங்கியிருக்கிறார்கள் . தமிழில் அறிவு அப்படியொரு பணியை செய்துகொண்டிருக்கிறார் . ahmer javed வட இந்தியாவில் தாராவி குடிசையில் பிறந்த வளர்ந்த ராப் பாடகர்கள் இனம் , மத வேறுபாடுகள் , ஏழைகளின் பிரச்னை , பாகுபாடு என்ற பல்வேறு விஷயங்களையும் அனைவரும் அறிய பாடி வருகிறார்கள் . அஹ்மர் ஜாவேத் , அர்ஷத் மாலிக் ஆகியோர் இவ

மக்களுக்கான உரிமைகளைக் கோரும் சுதந்திர புரட்சி நூலகங்கள்!

படம்
ozy சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நூலகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தலைநகர் டில்லியில் புரட்சி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இவை தமிழகத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்ற பிரமாண்டத்தைக் கொண்டவை அல்ல. ஆனால் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சுதந்திர மனநிலை கொண்ட மனிதர்களுக்கானவை. இந்த நூலகங்களை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடங்கினர். கொரோனா பீதிக்கும் முன்புவரை இவை சுதந்திர மனநிலை கட்டற்ற பேச்சுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் மனிதர்கள் வந்து செல்லும் இடங்களாக இருந்தன. அச்சமயத்தில்தான் காவல்துறை டாக்டர். ஜாகீர் உசேன் நூலகத்தில் உள்ளே நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. மாணவர்களின் மீது அநீதியான முறையில் தடியடி நடத்தியது. இந்திய அரசின் பாரபட்சமான குடியுரிமை சட்டதிற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் எங்கெங்கு நடந்தனவோ, அங்கு போராட்டத்தின் ஒரு பகுதியாக புரட்சிகர நூலகங்கள் தொடங்கப்பட்டன. இப்படி கான்பூர், நாக்பூர், சம்பால், உதயகிரி உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களில் புரட்சிகர நூலகங்கள் உருவாக்கப்பட்டடன. நாங்கள் எங்களது நூலகங்களை அரசியல

ஊரக உள்ளாட்சிகளுக்கு மரியாதை! - சாதனைகளுக்கு விருது!

படம்
உள்ளாட்சிக்கு மரியாதை! மக்களாட்சியின் மணிமகுடமாக திகழ்பவை ஊராட்சி அமைப்புகள். இவையே கிராமங்களை சுதந்திரமாக செயல்பட வைக்க உதவுகின்றன. கிராம சபைகள் கூடி எடுக்கும் தீர்மானத்தை நீதிமன்ற உத்தரவுகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அந்தளவு ஆற்றல் வாய்ந்த முடிவுகளை எடுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகளுக்கு இந்திய அரசு பல்வேறு விருதுகளை அளித்து கௌரவம் சேர்க்கிறது. இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை, உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை கவனிக்கிறது. 2011-12 ஆம் ஆண்டு முதலாக இத்துறை மிகச்சிறந்த செயற்பாடுகளைக் கொண்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச கிராம ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்குவிக்கிறது. அதில் முக்கியமான விருதுகளைப் பார்ப்போம்.  சிறந்த முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு, தீன்தயாள் உபாத்யாய பஞ்சாயத் சகாத்கிகாரன் புரஸ்கார் விருது ( Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar (DDUPSP)) வழங்கப்படுகிறது. இந்த விருது கிராமம், நகரம், பெருநகரம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. சாலை, குடிநீர், சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, பட்டியலினத்தோர்

அடுத்து வரும் ஏ.ஐ. புரட்சி- அப்டேட்டாகும் துறைகள் ஓர் அலசல்!

படம்
ஏஐ புரட்சிக்கு ரெடியா?  அண்மையில் டெலாய்ட்(Deloitte) என்ற ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் உலகளவில் பயன்படுத்தும் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தொழில்துறை, பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? செய்யும் வேலைகளின் எளிமை. அதேதான். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மனிதவளத்துறை முதல் தொழில்துறை வரை வேலைநேரமும் செலவும் பெருமளவு குறைகிறது. மனிதவளத்துறை மனிதவளத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ரோபாட்டிக்ஸ் புரோசஸ் ஆட்டோமேஷன்(Robotics Process Automation RPA) எனும் முறையை மனிதவளத்துறையில் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளம், தகவல் மேலாண்மை, கடிதம் எழுதுவது ஆகியவற்றில் இவை உதவுகின்றன. நடப்பு முதல் எதிர்காலம் வரை வியாபார நிலைகளைக் கணித்து வளர்ச்சி எப்படியிருக்கும் என்பது வரை செ

போரில் துயருற்ற புரட்சி மக்களின் கதை- உலக மக்களின் வரலாறு!

படம்
உலக மக்களின் வரலாறு! நிழல்வண்ணன் வசந்தகுமார் - மொழிபெயர்ப்பு ஆங்கில மூலம் கிறிஸ் ஹார்மன்ம விடியல் வெளியீடு பொதுவாக உலக வரலாறு எனும்போது என்ன எழுதுவார்கள் என்றால், முழுக்க அரசு, அதில் சதி, தம்பி தகராறு, அண்ணன் வரலாறு என்ற ரீதியில்தானே?  அதைத்தவிர உலகில் வேறு ஏதும் நடக்கவில்லை என்பது போல எழுதுவார்கள.   ஆனால் உண்மையில், அரசர்களின் முட்டாள்தனமான மூர்க்கத்தனமான விதிகளால் நொறுக்கப்படுவது ஏழை மக்கள்தான். பொதுவெளியில்  இதனைக் கவனப்படுத்தும் நூல்கள் மிக குறைவு. அப்படி அரிதான நூல்களில் ஒன்றுதான் இது.  இந்நூல் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் என்னென்ன காலகட்டங்களை கடந்து வந்தன, அதில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன என்பதைப் பதிவு செய்கிறது. குறிப்பாக இன்று அரசியலில் புழங்கும் பாசிசம், நாசிசம், தேசியம் உள்ளிட்ட வார்த்தை பதங்கள் எப்படி உருவாயின என்பதை வாசித்தறிவது, சுவாரசியமான பயணமாக இருந்தது. இது நேரடியாக மக்களின் பார்வையில் எழுதப்பட்ட நூலாக கொள்ளலாம்.  அரசருக்கு எதிராக புரட்சி நடக்கிறது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் பொறுப்பேற்கின்றனர். அப

ராபர்ட் முகாபே - ஜனநாயகவாதியின் தவறுகள்!

ஜிம்பாவே நாட்டின் முன்னால் அதிபர் ராபர்ட் முகாபே 95 வயதில் காலமாகியுள்ளார். 37 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர், மக்களில் வாழ்விலும் கொடுமையான ஆட்சியின் அடிச்சுவட்டை பதித்துச் சென்றிருக்கிறார்.  2017 ஆம் ஆண்டு கலகம் தொடங்கியது. இதனால் பதவியிழந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்துபோயிருக்கிறார். இவரை விடுதலையின் அடையாளம் என்று அதிபர் எமர்சன் நங்காவா கூறியுள்ளார். பலரும் முகாபேயை சர்வாதிகார அதிபராகவும், நாட்டை நசித்த தலைவராகவும்தான் அடையாளம் காண்கிறார்கள். புதிய அலை எழுந்து அல்ஜீரியா முதல் சூடான் வரை முகாபே போன்ற தலைவர்களை பதவியிழக்கச் செய்த து சுவாரசியமான ஆய்வாகவே இருக்கும். ஜிம்பாவே ஆப்பிரிக்கன் தேசிய யூனியன் எனும் கட்சியை தலைமை தாங்கியவர் முகாபே. செய்த போராட்டத்தால், பத்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. இந்த தண்டனை முடிந்தபோது மக்கள் அவரை நாயகனாகவே நினைத்து பேசினர். புகழ்ந்தனர். 1980 ஆம் ஆண்டு புத்திசாலி நாயகனாக இவரையே தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆட்சிக்கு வந்ததும் முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. முகாபே , கருப்பினத்தவர்களுக்கான கல்வி, மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். திட்டங்

ஓடுக்கப்பட்டோருக்கான உரிமைக்குரல்! - லாங்டன் ஹியூஸ்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் கவிஞர் லாங்டன் ஹியூஸ் அமெரிக்காவில் மிசோரியில் 1902 ஆம் ஆண்டு பிறந்தார் ஹியூஸ். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கைத தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், நாளிதழ் பத்திகள் எழுதியுள்ளார். இவர் பிறந்ததும் கணவரை விட்டு தாய் பிரிந்து கிளீவ்லாந்து வந்தார். அங்கு அவரின் பாட்டியுடன் சேர்ந்து வசிக்கத்தொடங்கினார். ஆற்றைப் பற்றி பேசும் நீக்ரோ என்ற கவிதையை பள்ளிப்பருவத்தில் எழுதினார். அது பிரசுரமாகவே எழுத்து பற்றிய நம்பிக்கையைப் பெற்றார். 1921 ஆம் ஆண்டு தி கிரிசிஸ் என்ற பத்திரிகையில் அக்கவிதை பிரசுரமானது. பின்னர், கவிதைகளை தொடர்ந்து  எழுதிக்கொண்டிருந்தவருக்கு 1925 ஆம் ஆண்டு ஆப்பர்சூனிட்டி இதழின் பரிசும் கிடைத்தது. அதோடு இரு நண்பர்களான அர்னா, வெச்டன் ஆகியோரின் நட்பும் கிடைத்தது. இவர்களின் நட்பு வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்தது. பல்கலைக்கழக படிப்புக்காக வந்தவருக்கு ஹார்லேம் நகருடன் நீடித்த தொடர்பு ஏற்பட்டது. இருள் நகரம் என்று அதனை எப்போதும் குறிப்பிடுவது ஹியூஸின் பாணி. 1926,27 ஆண்டுகளில் தி நேஷன் உள்ளிட்ட பத்திரிகைகளில் சிறந்த ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞராக பாராட்டு பெ

கண்காணிப்பை தகர்க்கும் போராட்டக்காரர்கள்! - சீனா எரிச்சல்

படம்
கண்காணிக்கும் விளக்கு கம்பம்! ஹாங்காங்கில் போராட்டக்கார ர்கள் செய்யும் குறிப்பிட்ட காரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாம் சாதாரணமாக கவனமின்றி எரிச்சலில் என்ன செய்வோம்? ஜல்லிக்கற்களை எடுத்து சோடியம் வேபர் விளக்கில் விட்டெறிந்து அதனை உடைப்போம். இது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு. பின்னர் அப்படி அடித்த ஆட்களே அதனை தவறு என்று மாறுவது வழக்கம். அதேபோல அங்கு சீன அரசு அமைத்துள்ள மின்விளக்கு தூண்களை ஹாங்காங் குடிமகன்கள் அடித்து உடைத்து சாய்க்கின்றனர். அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போடுகின்றனர். எதற்கு? காரணம், அது சீனாவின் கண்காணிப்பு கோபுரமாக உள்ளது. சீன அரசு அதனை போக்குவரத்தை கண்காணிக்கும் கம்பம் என்று கூறுகிறது. மின்விளக்கு கம்பம்தான், குப்பைகளைப் போடுபவர்களை கண்காணிக்கிறது. மேலும் தட்பவெப்பநிலை, 5ஜி இணைய இணைப்பு, ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு இயங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி வசதிகளில் இதுவும் ஒரு அங்கம். இதைத்தான் ஹாங்காங்க் புரட்சியாளர்கள் அடித்து உடைக்கின்றனர். அவர்களின் கூட்டம் அதற்கு அப்ளாஸ் எழுப்புகின்றனர். இதன் விலை 34.75 மில்லியன் டாலர்கள். அதாவது ஒரு க

மனித உரிமைகளை நசுக்கும் சவுதி அரேபியா- கொல்லப்படும் ஏமன் மக்கள்

படம்
சவுதி அரேபிய படைகள், ஏமன் நாட்டைச் சேர்ந்த மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.இதன் விளைவாக கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 47 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை நடந்த ஐந்து தாக்குதல்களில் ஹெலிகாப்டர்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீனவர்களின் படகுகளில் இருந்த சிறுவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சவுதி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளியாகி உள்ளது. வயிற்றுப்பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை எதற்கு ராணுவ எதிரிகள் போல கனரக ஆயுதங்களை வைத்து சவுதி ஆதரவுப்படைகள் தாக்குகின்றன என்பது புரியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநரான பிரியங்கா மோடாபர்த்தி. சவுதி - ஏமன் போருக்கு முன்பு மீன்பிடித்தொழில் நன்றாக நடந்துவந்திருக்கிறது. போர் தொடங்கிய பிறகுதான் நிலைமை மாறியிருக்கிறது. சிறையில் அகப்பட்ட 115 மீனவர்கள் மருத்துவ வசதி, சட்ட உதவி என எதையும் பெற அனுமதிக்கப்படவில்லை. தற்போது பெருமுயற்சி செய்து விடுதலை ஆகியுள்ளவர்களும் ஒன்ற