இடுகைகள்

அலகு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொடுக்கு இல்லாத தேளின் ஆயுள், தேன்கரடியின் இயல்பு - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கொடுக்கு இல்லாமல் தேளால் வாழ முடியுமா? தென் ஆப்பிரிக்காவில் தாக்குதால் கொடுக்குகளை இழந்த தேள்கள்  8 மாதங்கள் தாக்குப்பிடிக்கின்றன. தேளின் பின்பகுதியில் கொடுக்கு மட்டுமல்லாது செரிமானப்பகுதி, ஆசனவாய் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. தனது வால்பகுதியை இழந்துவிடும்போது தேளின் வாழ்க்கை கடினமாகிவிடுகிறது. உணவு சாப்பிடும் அளவு குறைந்து மெல்ல இறக்கிறது.  தேன் கரடிகள் உண்மையில் தேனை உண்கிறதா? சிலசமயங்களில் மட்டும். தேன் கரடிகளுக்கு முதன்மையான உணவு பழங்கள்தான். 90 சதவீதம் பழங்கள், இலைகள், பூக்கள், பூச்சிகளின் லார்வாக்களை உண்ணுகிறது. தேன் என்பது அதன் உணவு பட்டியலில் முக்கியமானது கிடையாது. தேன்கரடிக்குப் பிடித்தமான உணவு அத்திப்பழங்கள்தான்.  பறவைகளால் மனிதர்களைப் போலவே நிறங்களைக் காண முடியுமா? பறவைகளின் பார்வைத்திறன்களைப் பற்றி நாம் முழுமையாக இன்னும் ஆராய்ச்சி செய்து அறியவில்லை. பறவைகளின் பார்வை அமைப்பு மனிதர்களைப் போலவே நிறங்களை அறியும் கோன் செல்களைக் கொண்டது. கூடுதலாக புற ஊதாக்கதிர்களை கண்டறியும் திறனும் பறவைக்கு ண்டு. இந்த திறன் மூலம், பழுத்த பழங்களையும், ஆண், பெண் பறவைகளுக்கு உள்ள வேறுபாடுகளையும் அற

வினோதரச மஞ்சரி - சிம்பன்சிகள் பற்றிய சுவாரசியங்கள்

படம்
  பறவைகள் தம் அலகை, நாம் கைகளைப் பயன்படுத்துவது போலவே பயன்படுத்துகின்றன. கூடுகளைக்கட்ட, இறக்கைகளை சுத்தம் செய்ய, உணவு தேட என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. மக்காவ் கிளி இனத்தின் அலகு, கொட்டைகளை உடைத்து தின்னும் அளவுக்கு உறுதியானது. மரங்கொத்திகள், தனது அலகினால் மரத்தை கொத்தி துளையிட்டு பூச்சிகளை உண்ணுவதை அறிந்திருப்பீர்கள்.  ஃபிரில் லிசார்ட் (Frill lizard) என்ற பல்லி இனம் உள்ளது. இது, தான் உண்ண  நினைத்துள்ள இரையை அச்சுறுத்த, தன் சவ்வைப் பயன்படுத்துகிறது. தலைக்கு பின்புறம் குடை போல விரியும் மெல்லிய சவ்வு இதற்கு உண்டு.  பிறந்தவுடனே சிம்பன்சி குட்டிகளால் நடக்க முடியாது. ஏறத்தாழ குழந்தைகள் போலத்தான். எனவே, தாய் சிம்பன்சியின் மார்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். சிம்பன்சிகள் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழுவாக வாழ்கின்றன.  சில மாதங்களில் சிம்பன்சி குட்டிகள் நிற்க முயல்கின்றன. இதற்காக மரத்தைப் பிடித்தபடி நிற்கும். அவை கீழே விழாதபடி அதன் பின்பகுதியை தாய்க்குரங்கு பிடித்துக்கொள்ளும்.  சிம்பன்சிகள் பழம், விதைகள், பூக்கள், தேன் ஆகியவற்றை உண்கின்றன. குச்சிகளையும் கற்களையும் விளையாட்டுப் பொருட்களாக சிம்

உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டால் குஞ்சையே கொல்லும் நாமக்கோழி!

படம்
  நாமக்கோழி தனது குஞ்சுடன் நாமக்கோழி (Euracian coot) அறிவியல் பெயர்  ஃபுலிக்கா அட்ரா (Fulica atra)  இனம்  F. atra குடும்பம் ராலிடே(Rallidae) சிறப்பு அம்சங்கள்  கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் உடல் இருக்கும். கரையில் உள்ள மரங்களில் கூடுகட்டி வாழும். நீரில் நீந்திக்கொண்டே புழு, பூச்சிகளை உண்ணும். நெற்றி தொடங்கி மூக்குவரையில் உள்ள வெண்மை நிறம்தான் நாமக்கோழி என பெயர் வரக் காரணம். உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் தனது குஞ்சுகளை தானே கொன்று விடும் இயல்பு கொண்டது. கால் அமைப்பு, வலை போன்ற அமைப்பில் வேறுபட்டு அமைந்துள்ளது.  எங்கு பார்க்கலாம் புல்வெளி, சதுப்புநிலங்கள், கடல்பகுதிகள் பரவலாக வாழும் நாடுகள் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, சீனா, பின்லாந்து ஐயுசிஎன் பட்டியல் அழியும் நிலையில் இல்லாதவை (LC 3.1) ஆயுள்  7 ஆண்டுகள் மொத்த எண்ணிக்கை 53,00,000-65,00,000 எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  முட்டைகளின் எண்ணிக்கை  10 எழுப்பும் ஒலி குக்... குக் .. கிக் .. கிக் .. கீ  https://www.dinamalar.com/news_detail.asp?id=365376 https://www.iucnredlist.org/species/22692913/154269531