இடுகைகள்

சிசோபெரோனிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஃபேன்டசியாக கொலை! - ஹார்வி கிளாட்மன்

படம்
அசுரகுலம் ஹார்வி கிளாட்மன் அமெரிக்காவிலுள்ள பிராங்ஸில் பிறந்த ஹார்வி அபார புத்திசாலி. அதற்கேற்ற பிரச்னைகளும் அவரது மூளையில் இருந்தன. அவரின் செயல்பாடுகளை கவனித்த அவரது அம்மாவுக்கு அவரிடம் ஏதோ ஒரு தவறு இருப்பதாக பட்டது. தன்னைத்தானே துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் தன்மையை எதேச்சையாகத்தான் அவர் கண்டுபிடித்தார். உடனே மருத்துவர்களிடம் அழைத்து சென்னார். ஆனால் அவர்கள் அவரின் மனநலன் நன்றாக இருக்கிறது. வளர்ந்தவுடன் அனைத்தும் சரியாகிவிடும் என சினிமாவில் வருவது போலவே பேசினார்கள். வளர வளர ஹார்வியின் செயல்பாடுகள் பயமுறுத்துவது போலவே இருந்தது. பொதுவாக ஒல்லியாக பலவீனமாக இருப்பவர்களின் கனவு என்னவாக இருக்கும்? பலசாலியின் சில்லி மூக்கை உடைப்பதுதானே? இந்த விஷயத்தில் ஐக்யூ 130 புள்ளிகள் கொண்ட ஹார்வி வேறு மாதிரி யோசித்தார். பள்ளியில் சோனிப்பையனாக இருந்ததால் கிண்டல், கேலி, அடி, உதைகளை வாங்கினார். மெல்ல பெண்கள் என்றால் என்ன  காரணத்தாலோ பயப்படத் தொடங்கினார். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் மனதளவில் மட்டுமே. அக்காலகட்டத்தில் பெண்கள் தனியாக வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு வந்தார். அடையாளத்தை மனதில் வைத