இடுகைகள்

அஞ்சு வர்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைஞர்களின் குரல்!

படம்
ashoka.org கவிதா குல்ஹாத்தி (19,பெங்களூரு) எனக்கு அப்போது பதினைந்து வயது. திடீரென பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு. அப்போதுதான் ஒரு செய்தியைப் படித்தேன். உலகெங்கும் பதினான்கு மில்லியன் லிட்டர் நீர் உணவகங்களில் வீணாவதை அறிந்தேன். இதைத் தடுக்க வொய் வேஸ்ட்( Why Waste) என்ற அமைப்பைத் தொடங்கினேன். ’கிளாஸ் ஹாஃப் புல்’(Class Halfful) என்ற திட்டத்தை அமைப்பின் முதல் திட்டமாக தொடங்கினோம்.  நாங்கள் ஒருங்கிணைந்து பெங்களூருவிலுள்ள உணவகங்களுக்குச் சென்று, வாடிக்கையாளர்களுக்கு அரை டம்ளர் நீரை மட்டுமே வழங்க கோரினோம்.  நாங்கள் சிறுவர்கள் என்பதால் இச்செயலை சாத்தியமாக்க போராட வேண்டியிருந்தது. whywasteorg.com இன்று, தேசிய உணவ அசோசியேஷனின் ஆதரவைப் பெற்று எங்கள் நோக்கங்களை ஒரு லட்சம் உணவகங்களுக்கு மேல் பிரசாரம் செய்து வருகிறோம். இன்று கல்வி கற்க பல்வேறு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும் நான் என் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறேன். நாம் இளமையிலேயே நிறைய சாதிக்க முடியும். முப்பது அல்லது நாற்பது வயதானபின்தான் உலகில் மாற்றத்தை ஏற்படுத்த