இடுகைகள்

வளர்சிதை மாற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவுக்குப் பின்னர்/ முன்னர் எப்போது நொறுக்குத்தீனியை சாப்பிடலாம்? - ஆசையோடு சாப்பிட்டாலும் உடல் எடையைக் குறைக்கலாம்!

படம்
  பொதுவாகவே, எனக்கு உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதில் அலர்ஜி. ஆனாலும், அம்மாவுக்கு ஓட்டுநராக சிலசமயங்களில் விழாவுக்கு போய், வண்டிக்கு அருகில் பாதுகாத்து நிற்பது வழக்கம். இந்தவகையில் பெரியம்மா ஒருவரின் பேத்திக்கு பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்றது. அவர் பெருநகரில் டீ கடையோடு இணைத்து ஹோட்டல்   ஒன்றை வைத்திருக்கிறார். அதை மெஸ் என்று கூறலாம். மைதாமாவைப் பயன்படுத்தி புதுமையாக தோசை, போண்டா, வடை சுடுவதில் பெரியம்மா கடை மாஸ்டர்கள் விற்பன்னர்கள்.   பெரியம்மா, பெருநகரில் ஹோட்டல் மூலம் ஏராளமாக சம்பாதித்தார். இதன் காரணமாக, அவருக்கு, ஏராளமான ஆட்கள், நலம்விரும்பிகளாக நண்பர்களாக சேர்ந்துகொண்டனர்.   பேத்தியின் விழாவிற்கு ஏராளமான ஆட்கள் வந்து, இருசக்கரம், கார் என வசதிப்படி வந்து சிறப்பித்தனர். மண்டபத்தின் சாப்பிடும் பந்தி விரைவில் நிரம்பிவிட்டது. அப்படியிருந்து போட்டி போட்டு   சாப்பிட்டு வந்த சித்தி ஒருவர், எனது அம்மாவிடம் ‘’எல்லாம் நல்லாத்தான் இருந்துதுக்கா. ஆனா ஒரு குறை. ஐஸ்க்ரீம் தரலியே?’’ என்றார். ‘’ஒரு ஐஸ்க்ரீமில் என்னங்க, வெளியில் வாங்கிக்கொள்ளலாம் வாங்க’’ என்று நான் சொன்னதில் இருந்து அவர் இ

மன அழுத்தம் போக்கும் விட்டமின்கள்!

படம்
இன்று நோய் பாதிப்பு என்பது உடலுக்கு உள்ளிருந்தே ஏற்படுகிறது. வெளியிலிருந்து வரும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றின் தாக்குதல்களை விட நமது வாழ்வு சார் பிரச்னைகள், பழக்க வழக்கங்கள் ஏராளமான வியாதிகளை உருவாக்குகின்றன. அவற்றிலிருந்து மீள அதற்கான மருந்துகளை விட்டமின்களை சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. உணவு மூலம் எடுத்துக்கொள்வதே சரியானது என்றாலும் சில நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அவற்றை தனியாக சாப்பிடுவதும் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். ரோடியோலா ரோசியா ஆசியா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் விளையும் மூலிகை. உடலில் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறனை வளர்க்கிறது. உறக்கமின்மை பாதிப்பு கொண்ட நூறு பேரிடமும் இரண்டு மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. ரோசியாவின் மூலக்கூறு கொண்ட மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நல்ல பயன் கிடைத்தது. உடலில் ஏற்படும் பதற்றம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றுக்கும் இவை பயன்தருகின்றன. இதனை 400 மி.கி எடுத்துக்கொண்டால் பயன் தெரியும். மெலடோனின் தூக்கம் வருவதற்கான ஹார்மோன். சூரிய வெளிச்ச

தாவரங்களுக்கு இறப்பு உண்டா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? தாவரங்கள் வயதானால் இறந்துவிடுவது உண்மையா? இயற்கையில் பிறப்பும் இறப்பும் இயல்பானது. தாவரம் உட்பட அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது உண்டு. ஆனால் சில தாவரங்கள் இறப்பை மிக மெதுவாக ஏற்கின்றன. அப்போது அவை வாழ்கின்றன என்றுதானே அர்த்தம். இவை அனைத்திற்கும் நமது வளர்சிதை மாற்றவேகமே அடிப்படை. பெரும்பாலான தாவரங்கள் புதிய கன்றுகளை செடியை உருவாக்கிவிட்டு இறந்துவிடுகின்றன. ஆனால் சில செடிகள் எத்தகைய சிக்கல்களையும் எதிர்கொண்டு மனிதர்களாக தொந்தரவு செய்யும்வரை சாசுவதமாக வாழும்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்