இடுகைகள்

சூனியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சொத்துக்காக சிறுமியின் உயிரைப் பறிக்க காஷ்மோரா பூதத்தை ஏவும் கும்பல்! துளசிதளம் - எண்டமூரி வீரேந்திரநாத்

படம்
  துளசிதளம்  எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் கௌரி கிருபானந்தன் அல்லயன்ஸ்  துளசிதளம் நாவல் தலைப்பை அறிந்தவுடன் கோட்டயம் புஷ்பநாத் நாவல் போல இருக்குமோ என யாருமே நினைக்கலாம். ஆனால் உண்மையில் கதை அப்படி அமையவில்லை.  ஶ்ரீதர், சாரதா, துளசி, அனிதா, நாராயணன் ஆகிய பாத்திரங்கள் முக்கியமானவை. துளசி என்ற ஶ்ரீதர் - சாரதா தம்பதிக்கு பிறக்கும் மகளுக்கு ஶ்ரீதரின் நிறுவன முதலாளி சொத்துக்களை எழுதி வைக்கிறார். இந்த சொத்து துளசிக்கு பத்து வயது ஆனபிறகு  கிடைக்கும். அப்படி அவள் பத்து வயதுக்குள் இறந்துவிட்டால், சொத்து கிருஷ்ணா என்ற ஆசிரமத்திற்கு கிடைக்கும். சொத்துக்காக ஆசிரம தலைவர் செய்யும் அதீத செயல்பாடுகளும் அதற்கான எதிர்வினையாக ஶ்ரீதர், அவரின் நண்பர் நம்பூதிரி, வழக்குரைஞர் லட்சுமிபதி, மருத்துவர் பார்த்தசாரி, ஹிப்னாட்டிச பேராசிரியர் ஆகியோர் என்ற செய்கிறார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி.  நாவலில் எண்டமூரி வீரேந்திர நாத்தின் புத்திசாலித்தனத்தை எங்கு வியக்கிறோம் என்றால் அது நூலின் இறுதிப்பகுதியில்தான்.அதில் காஷ்மோரா பூதம் அதிருப்தியடைந்து துளசியை விட்டுவிட்டதா, அவளைக் கொல்லும் முயற்சியை ஹிப்னாட்டிச பேராசிரியர் தா