இடுகைகள்

பூனைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூனைகள் கருப்பு வெள்ளை நிறத்தை மட்டுமே பார்க்குமா?

படம்
pixabay  பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ பறவைகள் பொதுவாக குரல் கொடுப்பது இணையைக் கவர்வதற்கும், தனது பகுதியை கூறுவதற்கும்தான். பறவைகளுக்கு குரல் கொடுப்பதற்கென உள்ள உறுப்பின் பெயர் சைரின்க்ஸ். இது மனிதர்களின் குரல் அமைப்பான லாரினக்ஸ் என்பது போலத்தான். நுரையீரலிருந்து கிளம்பும் காற்று தசை, மற்றும் சைரின்க்ஸ் இழைகளின் வழியாக வெளிப்படுகிறது. சில பறவைகள் பறக்கும்போது கூட பாடுவது உண்டு. ஆனால் அப்படி செயல்படும் பறவைகளின் எண்ணிக்கை மிக குறைவு. ஸ்டார்லிங் எனும் பறவை தான் கேட்கும் ஒலியை அப்படியே நகல் செய்து ஒலிக்கும். உதாரணமாக காரின் ஹார்ன் ஒலி போலீஸ் வாகன சைரன் ஒலி, டெலிபோன் ரிங்டோன். அவை பாடும் இசையும் பிரமாதமாக இருக்கும். பூனைகள் கருப்பு வெள்ளை நிறத்தை மட்டுமே பார்க்குமா? முதலில் அப்படி நினைத்து வந்தனர். ஆனால் இப்போது அறிவியல் வளர்ந்துவிட்டது. எனவே, ஆராய்ச்சி மூலம் பூனைகள் சில குறிப்பிட்ட நிறங்களை பார்க்கமுடியும் என்பதை உறுதிசெய்துள்ளனர். சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களை அவை அடையாளம் கண்டு கொள்கின்றன. மனிதர்களைப் போல பூனைகளுக்கு நிறம் அவ்வளவு துல்லியமாக தெரியாது. அப்ப