இடுகைகள்

பயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்தாவது ஆண்டில் கோமாளிமேடை - தொடரும் பயணம்!

படம்
  பத்தாவது ஆண்டில் கோமாளிமேடை....  இந்த வலைப்பூவை இத்தனை ஆண்டுகள் நடத்த முடியும் என யார் நினைத்திருக்க முடியும்? எங்களுக்கே அந்த நம்பிக்கை இல்லை. என்ன எழுதுவது, எப்படி இயங்குவது, யாருக்கு என்ன தெரியும் என நிறைய கேள்விகள் இருந்தன. தொடக்க காலத்தில் எழுதிய கட்டுரைகளிலும் கூட இதுபோன்ற தடுமாற்றங்கள் தென்பட்டிருக்கலாம். கோமாளிமேடையின் ட்ரங்குப்பெட்டியில் இதற்கான சான்றுகள் உண்டு என நம்புகிறோம்.  அன்பரசு என்ற ஒருவரின் சிந்தனையில்தான் கோமாளிமேடை வலைப்பூ உருவானது. அதுதான் அடித்தளம். அதன் அடிப்படையில்தான் ஆராபிரஸ் இ நூல் பதிப்பகம் கூட பின்னாளில் உருவானது. இந்த பத்து ஆண்டுகளை திரும்பி பார்ப்பது என்பது கடினமாகவே இருக்கிறது. ஏனெனில் பாதை அந்தளவு எளிமையாக இல்லை. சந்தித்த மனிதர்களும், அவர்களுடனான அனுபவங்களும் கூட மகிழ்ச்சி கொள்ளத்தக்கவை அல்ல. ஆனால் , நகை முரணாக அவைதான் கோமாளிமேடையில் எழுதிய பல்வேறு கட்டுரைகளுக்காக அடித்தளமாக அமைந்தது.  பெரும்பாலான நேரங்களில் எழுதிய எழுத்துகள் மட்டுமே மனதளவில் பெரிய ஆறுதலாக இருந்தது. தொடக்க காலத்தில் கணியம் சீனிவாசன் அவர்கள், அன்பரசு எழுதிய  மொழிபெயர்ப்பு நூலை தனது ஃப்

கதவைத் தட்டும் வாழ்க்கை! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  பின்டிரெஸ்ட்/பிகேன்ஸ் நீங்கள் கதவு, ஜன்னல், ஆகியவற்றை மூடிவைத்துவிட்டு வீட்டுக்குள் வாழ்ந்தால் பாதுகாப்பாக, ஆபத்தின்றி இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது அப்படியானதல்ல. வாழ்க்கை, மூடிய கதவுகள், ஜன்னல்கள் மீது முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. அப்படி முட்டி திறந்தால் நீங்கள் இப்போது பார்ப்பதை விட விரிவான காட்சியைக் காணலாம். ஆனால் உங்கள் மனதில் உள்ள பயத்தால் ஜன்னல்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள். இதனால் வாழ்க்கை உங்கள் கதவை தட்டும் சத்தம் அதிகமாக கேட்க தொடங்குகிறது. வாழ்க்கை பற்றிய வெளிப்புற பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டால், அது உங்களை நோக்கி வந்து வெளித் தள்ளுவதற்கு தொடங்கும். வாரணாசி 16 டிசம்பர் 1952 தி கலெக்டட் வொர்க்ஸ் வால். 7   உங்களை மாற்றுவது எது?   நெருக்கடி, தலையில் விழும் அடி, சோகம், கண்ணீர் இவை எல்லாமே ஒரு நெருக்கடிக்கு அடுத்த நெருக்கடி என தொடர்ந்து நடக்கும்போது ஏற்படுபவைதான்.   நீங்கள் வேதனையால் இடைவிடாமல் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை. காரணம், நீங்கள் மாற்றத்திற்கு இன்னொருவரை நம்பியிருக்கிறீர்கள். யாருமே, பிரச்னையை நான் கண்டுபிடித்து த

மனதிற்கு தேவையான விடுமுறை!

படம்
  நிறையபேருக்கு வேலை கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. லிங்க்டு இன் தளத்தில் கூட புலம்பல்கள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் வேலை செய்வதிலும் அதில் உண்டாகும் மன அழுத்தத்தை போக்கிக்கொள்வதும் பெரும் பிரச்னையாகத்தான் இருக்கிறது.   சில நிறுவனங்களில் உலகின் சூழல்களை புரிந்துகொள்ளாமல் ஆறுநாட்கள் வேலை நாட்களாக வைத்திருப்பார்கள். ஞாயிறு என்ற ஒருநாளில் ஒருவர் எங்கு போய்விட்டு வந்து திங்கட்கிழமை வேலைக்கு உற்சாகமாக வர முடியும் என்ற பொது அறிவு கூட இல்லை.   ஞாயிறு நிறைய கடைகள் இயங்காது. அவர்களுக்கும் ஓய்வெடுக்க ஒரு நாள் வேண்டுமே? இதில் அவர்களையும் குறை சொல்ல முடியாது. இந்த லட்சணத்தில் மனதை விடுமுறைக்கு ஏற்றபடியாக மாற்றிக்கொண்டால் என்ன என்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். ஆய்வில், 441 அமெரிக்க பணியாளர்கள் பங்கு பெற்றனர். ஆய்வை கேஸி மோகில்னர் ஹோம்ஸ் என்ற யுசிஎல்ஏ பல்கலைக்கழக பேராசிரியர் நடத்தினார். அதாவது வெளியில் எங்கும் செல்லாமலேயே மனநிலையை விடுமுறையில் இருப்பது போல மாற்றிக்கொள்வதுதான் மையப்பொருள். இப்படி மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் வேலையில் மன அழுத்தம் கொள்வதில்லை.   தொய்வடையாமல் பணிபுர

தங்குமிடம் ஏதுமில்லை - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  தங்குமிடம் ஏதுமில்லை 6.1.2022 அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்று திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். அதற்காக அங்குள்ள நண்பர் வினோத்திற்கு போனில் அழைத்தேன். அப்போது நான் அவரது வீட்டில் தங்கிவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது வீட்டில் ஏற்கெனவே இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் என்று கூறினார். ‘’முன்னமே தகவல் சொல்லிவிட்டு, அங்கு வந்தால் தங்கும்படியான அறையைத் தயாரித்து வைக்கலாம்’’ என்று சொன்னார். நான் அதை மறந்துவிட்டேன். வீடு, அவர்களுக்கும் சேர்த்து வேண்டுமே? அவர்களது குடும்ப உறுப்பினர்களே நான்கு பேர் ஆகிவிட்டனர். இனிமேல் தனியார் விடுதியில் தங்கிவிட்டு வினோத் அண்ணனைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இனியும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்துள்ளேன். சென்னையில் மெல்ல நோய்க்கட்டுப்பாடு இறுகி வருகிறது. வேலையை செய்துவிட்டால் வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என நினைத்துள்ளேன். ஆபீஸ் வேலையை முடித்துவிட்டால், சொந்த வேலைகளை செய்துகொண்டிருக்கலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்கலாம். அத்துறை சார்ந்த செயல்பாட்

சப்ஸ்டாக் வலைத்தளத்திலும் பயணிப்போம் - வாய்ப்புள்ளோர் இணையலாம் - வாங்க!

படம்
  இனி வலைப்பூவில் எழுதும் கட்டுரைகள் சப்ஸ்டாக்கிலும் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் இதிலும், தொடரலாம். தமிழோடு இணைந்து பயணிப்போம்.  https://anbarasushanmugam.substack.com/ நன்றி - மெட்டாமங்கீஸ் - விஜய் வரதராஜ்

உலகம் சுற்றிவர தனியாக கிளம்பும் பெண்கள் - சாகச பயணத்தின் மேல் உருவாகும் புதிய மோகம்

படம்
  இன்று உலகம் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய மாறியிருக்கிறது. அதேசமயம், ஆண், பெண் என பாலின வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார வலிமையில் பெண்கள், ஆண்களுக்கு நிகர் இணையாக ஏன் அவர்களையும் கடந்து சென்றுவிட்டார்கள். வீடு, அலுவலகம் கடந்து புதிய இடங்களுக்குச் செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு   பொருளாதார வலிமையும் கைகொடுக்கிறது. லீவு போட்டுவிட்டு அல்லது வேலையை விட்டு விலகிச் செல்ல துணிச்சலான மனமும் இருக்கிறது. அப்புறம் என்ன? உடனே பையை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதானே? பெங்களூருவில் எஃப்5 எஸ்கேப்ஸ் என்ற நிறுவனம், பெண்களுக்கு மட்டுமேயான பயணங்களை திட்டமிட்டு ஏற்பாடு செய்துகொடுக்கிறது. தங்கும் இடம், சாப்பாடு என அவசிய விஷயங்களை, இந்த நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. பெண்கள் முடிவு செய்யவேண்டியது ஒன்றுதான். குழுவாக செல்வதா அல்லது தனியாக செல்வதா என்பதை முடிவு செய்வது மட்டும்தான். இந்த நிறுவனம் 300க்கும் மேலான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. 30க்கும் அதிகமான முறை, பெண்களின் குழுக்களை   சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் பெண்கள் பயணித்துள்ளனர். வாண்டர் வும

வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்ந்தால் ... உல்லாசம் - ஷான் நிகாம், பவித்ரா லட்சுமி

படம்
  உல்லாசம் மலையாளம் ஷான் நிகம், பவித்ரா லட்சுமி லட்சியத்தைக் கொண்ட துயரங்களா, இலக்கைப் பற்றி கவலைப்படாத மகிழ்ச்சியா என இரு வேறுபட்ட விஷயங்களைப் பற்றி பேச முயல்கிற படம்தான் உல்லாசம். ஹாரி மேனன் என்ற இளைஞரும், யாரிடமும் அதிகமாக பேசாத கர்ப்பிணிகளைக் கண்டால் மட்டும் மனம் பதைபதைக்கிற இளம்பெண்ணும் ஊட்டியில் சந்திக்கிறார்கள். மோதல் தொடங்கினால் காதலாகத் தானே மாற வேண்டும். அந்த வகையில் காதல் ஆகிறது. ஆனால் இதில் இளம்பெண், ஹாரி மீது நம்பிக்கை வராமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களையும் கூறுவதில்லை. ஹாரிக்கு அந்த பெண்ணை திரும்ப சந்திக்க ஆசையிருக்கிறது. மனதில் காதலும் இருக்கிறது. ஆனால், அவள் எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியாது. ஹாரி கோவையிலும், இளம்பெண் கேரளாவுக்குமாக பிரிந்து செல்கிறார்கள். இருவரும் பிறகு சந்தித்தார்களா இல்லையா என்பதே கதை. ஹாரியாக ஷான் நிகம் நடித்திருக்கிறார். படம் நெடுக   ஷானின் இளமைத் துடிப்பும் நடிப்பும்தான் படத்தை காப்பாற்றுகிறது. இதில், நிமா என்ற பாத்திரத்தில் பவித்ரா லட்சுமி நடித்திருக்கிறார். மாடல் போல தோற்றமிருந்தாலும் இந்த படத்திற்கு அவரின் பங்களிப்பு என்பதே குறைவ

பிறரது வாழ்க்கை அனுபவங்களின் வழியே துக்கத்தை மறக்கும் அகவயமானவனின் கதை! நித்தம் ஒரு வானம் -ரா கார்த்திக்

படம்
  நித்தம் ஒரு வானம் நித்தம் ஒரு வானம்  நித்தம் ஒரு வானம் இயக்கம் – ரா கார்த்திக் பாடல் – கோபி சுந்தர் பின்னணி தரண் குமார் பாடல்கள் கிருத்திகா நெல்சன் படத்தில் பாடல்கள் தனியாக தனியிசை ஆல்பம் போல இருக்கிறது. அதனால் அதை தனியாக நிதானமாக பாடல் வரிகளை அசைபோட்டு கேட்கலாம். அகவயமான இளைஞர் வாழ்க்கை, திருமணம் நின்றுபோனதால் எப்படி பிரச்னைகளுக்குள்ளாகிறது. அதை அவன் எப்படி எதிர்கொண்டு மீள்கிறான் என்பதே கதை. ஓசிடி உள்ள அதிகம் பேசாத ஆள். அவனுக்கும் காதல் வருகிறது. அவனை மணக்க பெண் சம்மதிக்கிறாள். ஆனால் அவளது காதல் மீண்டும் மனதிற்குள் வரும்போது என்னாகிறது? அர்ஜூனை விட்டு கல்யாணப் பெண் தனது முன்னாள் காதலனைத் தேடி செல்கிறாள். இந்த நேரத்தில் அர்ஜூன் கிடைத்த கல்யாண வாழ்க்கையும் கைவிட்டு போகிறது என நொந்துபோகிறான். அந்த மன அழுத்த த்திலிருந்து தப்ப உறவினரான மருத்துவரின் உதவியை நாடுகிறான். அவர் அவனுக்கு இரண்டு ஜோடியின் கதைகளைக் கொடுக்கிறார். அந்த கதைகளை படிக்கிறான். அதில் இறுதிப்பக்கங்கள் இல்லை. அதைத் தேடி மேற்குவங்கம், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களுக்கு பயணிக்கிறான். உண்மையை அவன் கண்டுபிடித

வெப்ப வாயு பலூன்களில் பயணம்!

படம்
  வெப்ப வாயு பலூன்கள்! இந்த பலூன்கள் ஆகாய விமானங்கள் போன்றவை அல்ல. வானத்தில் மெல்ல காற்றில் அசைந்தாடித்தான் பயணிக்கும். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜோசப் மிச்செல் ஜாக்குயிஸ் மான்ட்கோல்ஃப்பையர் என்ற இரு சகோதரர்கள் வெப்ப வாயு பலூனை உருவாக்கினர். 1793ஆம்ஆண்டு இதனை உருவாக்கி பறக்க வைத்தனர்.  பட்டு மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி பலூனை உருவாக்கினர். இன்று உருவாக்கப்படும் பலூன்களுக்கு நைலான், பாலியஸ்டர் இழைகள் அடிப்படையானவை. இதில் நெருப்பு பிடிக்காமலிருக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வெப்பவாயு விடுவிக்கப்பட, அந்த இடத்திலுள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது.  இதனால், வெளியிலுள்ள குளிர்ந்த காற்று தரும் அழுத்தத்தில் பலூன் நகர்கிறது. இதனால் பலூன் மேல்நோக்கி (upthrust) உந்தப்படுகிறது.  ஜெர்மனியில் பறக்கும் கப்பல் (Air ship) உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஹீலியம் வாயுவால் இயக்கப்படுகிறது. வெப்பமான காற்றைப் போல, ஹீலியம் வாயுவும் அடர்த்தி குறைவானது. இதன் காரணமாகவே பறக்கும் கப்பலும் வானில் பயணிக்கிறது. இதில் திசையைத் தீர்மானிக்க புரப்பல்லர் இயந்திரங்கள் உள்ளன. காற்று வேகமாக அடிக்கும் சூழலில் இந்த இயந்திரங்க

பயணம் செய்பவர்களுக்கான ஆப்ஸ்கள்!

படம்
  polar grit x coros vertix 2 பீக் ஃபைண்டர்  இந்த ஆப் மூலம் உயரமான மலைச்சிகரங்களை அடையாளம் காணலாம். ஏராளமான மலைகள் இருப்பதால், உங்களுக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுத்து ஏறலாம். மலைகளை 360 டிகிரியில் பார்க்க முடியும். இதனை ஆஃப்லைனிலும் பயன்படுத்த முடியும். கட்டண சேவை தான்.  ஸ்லோவேய்ஸ்  இங்கிலாந்து மக்கள் பயன்படுத்த இலவச ஆப் இது. லாக்டௌனில் தொடங்கிய ஆப் இது. இலவசம்தான். இங்கிலாந்தின் 7 ஆயிரம் வழித்தடங்களை  ஒரு லட்சம் கி.மீ. தொலைவுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதனால் கதவைத் திறந்து சாலைகளைப் பார்த்ததும் மிரளாமல் பயணம் செய்யலாம்.  கோமூட் பயணிப்பதற்கான வழித்தடங்களை உருவாக்கும் ஆப் இது. வழித்தடம், ட்ராக்கர், சமூக வலைத்தளம் என பல்வேறு வசதிகளைக் கொண்ட ஆப் இது. நகர தெருக்கள் தொடங்கி மலைகள், சிகரங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், எங்கே தூங்குவது, குடிநீர் கிடைக்கும் இடம் என பல்வேறு விஷயங்களை ஆப் தருகிறது.  இத்தனைக்கும் சேவை இலவசம்தான். பயணம் தொடர்பான அனைத்து விஷயங்களும் கோமூட் ஆப்பிலேயே கிடைத்துவிடும்.  கோரோஸ் வெர்டிக்ஸ் 2 சாகச பயணத்திற்கு ஏற்ற ஜிபிஎஸ் வாட்ச் இது. 140 மணி நேரம் ஜிபிஎஸ் வசதியைப் பயன்பட

எங்கெங்கோ செல்லும் பயணத்தின் கதை! கடிதங்கள்

படம்
            இனிய தோழர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . வணக்கம் . இதோ இங்கு இன்னும் வெறித்தனமாக பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள் . காற்று மண்டலம் கற்கண்டாக மாறுகிறது என ரேடியோவில் சொல்லுவார்கள் . இங்கு கந்தக மண்டலமாக மாறிவிட்டது . புகை மூட்டத்தில் மூச்சுத் திணறத் தொடங்கிவிட்டது . தினகரன் , விகடன் , இந்து தவிர்த்த தீபாவளி மலர்களில் ஆன்மிகம் தூக்கலாக இருக்கிறது என தினமலர் நாளிதழ் கூறியிருக்கிறது . இந்த ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வேலை செய்துள்ளது மகி்ழ்ச்சியாக உள்ளது . வாய்ப்பு கிடைத்தால் நூலை வாங்கிப் பாருங்கள் . குங்குமத்திலிருந்து சென்றுவிட்ட வெ . நீலகண்டன் , கோகுலவாச நவநீதன் ஆகியோரின் இடத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை என்பது உண்மை . தீபாவளி மலர் வேலைகளை முடித்தவுடனே அடுத்து பொங்கல் மலருக்கான வேலைகள் இருக்கின்றன . நீங்கள் ஏதாவது புதிதாக படித்தீர்களா ? நான் மாதம்தோறும் காலச்சுவடு , தீராநதி இதழ்களை படித்துவிடுகிறேன் . இனி புதிய நூல்களை விட பழைய புத்தக கடைகளில் நூல்களை வாங்கலாம் என நினைத்துள்ளேன் . பயணம் ஒன்று போதாது - தீபன் எழுதிய நூல்தான் அண்மையில் ப

வேலைக்கு பயணிக்கும் தொலைவு - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  ஒருவர் மாங்காடு, அல்லது மடிப்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை வருவது என்றால் தினசரி அவர் எத்தனை மணிக்கு கிளம்பவேண்டும்? கணித லாஜிக் கிடையாது என்பதால் மனதில் தோன்றும் விடையை நீங்கள் சொன்னால் போதும். குறைந்தது 30 நிமிடங்களை பயணத்திற்கென ஒதுக்கவேண்டும். போக்குவரத்து நெரிசல் கூடினால் அமைச்சர்கள் நகர்வலம் வந்தால் இன்னும் நேரம் கூடும்.  1994ஆம் ஆண்டு சீசர் மார்செட்டி, பயணம் செய்வதில் மனிதர்களின் குணங்களை பற்றி ஆராய்ந்தார். இதனை மார்செட்டி கான்ஸ்டன்ட் என்று அழைக்கின்றனர். இவரது ஆய்வுப்படி ஒருநாளில் ஒருவர் ஒரு மணிநேரத்தை பயணத்திற்கென ஒதுக்கிவிடுகிறார். இந்த வகையில் அமெரிக்காவில் 30 நிமிடங்கள் என கணக்கு போட்டால், அமெரிக்காவில் 27, இங்கிலாந்தில் 29, கனடாவில் 26 நிமிடங்கள் செலவாகின்றன.  காலம்தோறும் எப்படி நகரங்கள் மாறுகின்றன, அதற்கேற்ப பயணம் செய்து மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை மார்செட்டி ஆய்வு செய்தார். இப்போது அதுதொடர்பான தகவல்களைப் பார்ப்போம்.  1800களில் ரோம், வெனிஸ், பெர்லின் ஆகிய நாடுகளில் மக்கள் தினசரி வேலைக்கு நடந்து சென்ற தூரம் 5 கி.மீ.  ஒருவரால் முப்பது நிமிடங்களில் நடக்க முட

உண்மையான காதலைத் தேடும் பயணம்! - காதலை மூழ்கடிக்குமா காமம்?

படம்
        கிராஜூவேட்       கிராஜூவேட்   Director: Mike Nichols Produced by: Lawrence Turman Screenplay by: Calder Willingham, Buck Henry படத்தின் லைன் சிம்பிள்தான் . பென் , தனது கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புகிறான் . அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாக உள்ளது . அவர்களது வீட்டில் அவனுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொல்லி நண்பரின் மகள் எலைனைப் பரிந்துரைக்கிறார்கள் . ஆனால் எலைனின் அம்மாவுக்கு வீடு திரும்பிய பென்னின் உடல் மீது மட்டுமே கண் . முதலில் அ்வனை வீட்டுக்கு கூட்டிப்போய் மெல்ல மசிய வைக்கப் பார்க்கிறாள் . ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை . பென் மிரண்டு போய் திரும்பி பார்க்காமல் வீடு வந்து விடுகிறான் . ஆனால் அடுத்தடுத்த ஹோட்டல் சந்திப்புகளில் தினசரி நீச்சல் பயில்வதைப் போல காமமும் கை வந்த கலையாகிவிடுகிறது . ஒரு பெண்ணுடனே தொடர்ச்சியாக காமம் என்றால் போரடிக்குமே ? பென்னுக்கும் போரடிக்கிறது . அவனை , நண்பரின் மனைவி பயன்படுத்திக்கொள்வதாக நினைக்கிறான் . அப்போது , பார்த்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் நண்பரின் மகள் எலைன் வருகிறாள் . அவளுக்கு பென்னைப்