இடுகைகள்

ஆர்க்டிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமயமாதல் விளைவுகள்!

படம்
  ஆர்க்டிக்கில் தீவிரமாகும் பருவச்சூழல் விளைவுகள்! சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் வெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடியுள்ளதை ஐ.நா அமைப்பு, சுட்டிக்காட்டியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை  உலக தட்பவெப்பநிலை அமைப்பு (WMO) வெளியிட்டது. ஆர்க்டிக் பகுதியில் இம்முறையில் அதிகரித்துள்ள வெப்ப அளவு, கடந்த கோடைக்காலத்தை விட அதிகம். இப்படி வெப்பம் அதிகரிப்பது காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றை நிகழ்ச்சிகளை அதிகரிக்கக்கூடும்.  கடந்த ஆண்டு சைபீரியாவில் செய்த ஆய்வில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே சமகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான  அதிக வெப்பநிலை ஆகும். பருவச்சூழல் மாறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஐ.நா அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்ய நகரமான வெர்க்கோயான்ஸ்க் (verkhoyansk)என்ற இடத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நகரம் ஆர்க்டிக் பகுதியிலிருந்து 115 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தட்பவெப்பநிலை கணக்கீடு 1885ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.  2020ஆம் ஆண்டு, உலகளவில் அதிக வெப்பநிலை நிலவிய மூன்று ஆ

கடல் பகுதியில் வாழும் வைரஸ்கள்!

படம்
  கடல் வைரஸ்கள்!  கடற்கரையில் நீச்சலடித்து குளிக்கும்போது, கடல்நீரை நீங்கள் குடிக்காமல் இருக்கமுடியாது. அந்த நீரில் இரண்டு லட்சம் கிருமிகள் வாழ்வதாக  ஆய்வாளர் குழு கூறியுள்ளது.  நீரில் நுண்ணுயிரிகள் வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் அவற்றின் எண்ணிக்கை பற்றி பலரும் ஆர்வம் கொண்டது 2015 ஆம் ஆண்டுதான். அப்போது, கடல் ஆராய்ச்சிக்குழு ஒன்று, 5,476 என்ற எண்ணிக்கையிலான வைரஸ்கள் கடல் நீரில் இருப்பதாக கண்டறிந்து கூறியது.  அடுத்த ஆண்டே அக்குழு, கடல் நீரிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 என்று அறிவித்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. பனிரெண்டு சதவீத அதிக வளர்ச்சி இது.  இது அழகான பிரமிக்க வைக்கும் ஆய்வு என்றார் நார்த் கரோலினா க்ரீன்ஸ்போரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரி வல்லுநர் லூயிஸ் மேரி போபே. உலகம் முழுக்க எழுபது சதவீதமுள்ள கடல்நீரை ஆராய்வது சாதாரண காரியம் அல்ல. 2015 -2016 ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதிகளில் 43 இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.  தாரா ஓசேன் ப்ராஜெக்ட்ட

நகரும் செர்னோபில் - ரஷ்யாவின் சூப்பர் திட்டம்!

படம்
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் நிலங்களில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டார்கள். அடுத்து அவர்களின் பார்வை ஆர்க்டிக் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது அங்கு கனடா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் துண்டு போட்டு இடம்பிடிக்க முயற்சித்து வருகின்றன. உச்சபட்சமாக கடுங்குளிர் நிலவும் அங்கு, அணு உலை ஒன்றை நகரும் விதமாக அமைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் பெயர் அகாடெமிக் லோமோன்சோவ். அணு உலை என்றால் அதற்கு உடனே மின்நிலையம் என்று சொல்லித்தானே எழுதுவார்கள். இதனையும் அப்படித்தான் கூறுகிறார்கள். இந்த அணுஉலை மூலம் 70 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த மின்சாரத்தை வைத்து ஒரு லட்சம் வீடுகளுக்கு தோராயமாக மின்வசதியை வழங்க முடியும். சாதாரணமாக நிலத்தில் அமைக்கும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை கண்காணித்து முறைப்படுத்துவதே கடினம். இதில் ஆர்க்டிக் பகுதியில் நகரும் விதமாக அணுமின் நிலையம் அமைப்பது சூழலுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜன் ஹேவர்கேம்ப். ரஷ்யா உக்ரைனில் செர்னோபில் விஷயத்தில் பல தகிடுத த்தங்களைச் செய்தது. பாதுகாப்பு வ

உருகும் ஆர்க்டிக் வெளியாகும் நச்சு!

படம்
ஆர்க்டிக் பகுதி, வெப்பமயமாதலால் உருகிவருவதை டிவியிலும் நாளிதழ்களிலும் பார்த்திருப்பீர்கள். இதன் விளைவாக, அணுக்கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிலிருந்து நச்சுகள் வெளியாகி நீர்ப்பரப்பில் கலக்கத் தொடங்கியுள்ளன. 2100 ஆம் ஆண்டுக்குள் கரிம எரிபொருட்கள் விளைவாக ஆர்க்டிக் பகுதி பனிக்கட்டிகள் முழுவதும் கரையும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, அனைத்து இயற்கை நிகழ்ச்சிகளும் மாறி நிகழும் வாய்ப்புள்ளது. மேலும் பசுமை இல்ல வாயுக்களின் அளவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில்தான் உள்ளது. உலகளாவிய ஆராய்ச்சிக்குழுக்கள் பனி உருகி வரும் வேகத்தை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் வெளியாகும் கார்பன் அளவை கணித்து அதனைக் குறைக்க முடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர் வுட்ஸ் ஹோல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் சூ நடாலி கூறியுள்ளார். நன்றி: ஃப்யூச்சரிசம்