இடுகைகள்

நச்சு உலோகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மண்ணிலுள்ள நச்சு உலோகங்களை சுத்திகரிக்கும் தாவர இனங்கள்!

படம்
  நச்சு உலோகங்களை உறிஞ்சும் தாவரம்! பெருநகரங்களில் எலெக்ட்ரானிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. ஆனால், கழிவுகளிலிருந்து நிலம், நீரில் தேங்கும் நச்சு உலோகங்களை மறுசுழற்சி செய்வது கடினமானது. இதன் விளைவாக, நிலமும், நீரும் மாசுபடுகிறது. இதற்கு அறிவியலாளர்கள், தனித்துவமான தாவரங்களை வளர்த்து, நச்சு உலோக பாதிப்பை குறைக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.  உலோகங்கள் மாசுபடுத்தியுள்ள மண்ணைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்ட 700க்கும் அதிகமான  தாவரங்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக தாவரவியலாளர் ஆன்டனி வான்டர் என்ட் இதுபற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  அவர், புதிய கடலோனியா தீவிலுள்ள மழைக்காட்டிற்கு சென்றது கூட உலோகத்தை உறிஞ்சுகிற  தாவரங்களைத்  தேடித்தான். அவர் கண்டறிந்த தாவரத்தின் பெயர் பைக்னாண்ட்ரா அக்குமினாட்டா (Pycnandra acuminata).  இதன் தாவர சாற்றில், 25 சதவீத நிக்கலைக் கொண்டிருந்தது.  இப்படி மண்ணிலுள்ள உலோகங்களை உறிஞ்சக்கூடிய தாவர இனங்களுக்கு,  ஹைபர்அக்குமுலேட்டர் (Hyperaccumulator)என்று பெயர்.  எதிர்காலத்தில் உலோகச் சுரங்கங