இடுகைகள்

குங்குமம் விநோதரச மஞ்சரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விநோத ரச மஞ்சரி!

படம்
சூப்பர்மேன் மாப்பிள்ளை ! கல்யாணத்திற்கு பிறகு ஆண்கள் சூப்பர்மேன் ஆவது வண்டியில் பண்டல் ஆஃபர் போல மனைவி மக்களை சுமந்துசெல்லும் சமயத்தில்தான் . கனடா மாப்பிள்ளை அதற்கு முன்பே தன்னை சூப்பர்மேனாக நிரூபித்து உலகெங்கும் அப்ளாஸ் அள்ளியுள்ளார் . யார் அந்த பாக்கியவான் ? கனடாவைச்சேர்ந்த கிளெய்டன் குக் , அந்த புதிய சூப்பர்மேன் மாப்பிள்ளை . அன்று அவருக்கு திருமணமாகி கல்யாண சந்தோஷத்துடன் ஜாலியாக மனைவி பிரிட்டானியுடன் பார்க்கில் தடபுடல் போட்டோஷூட் நடத்திக்கொண்டிருந்தார் . அப்போது அருகிலிருந்த குளத்தில் சிறுவன் தவறிவிழுந்து முழ்குவதை தற்செயலாக கவனித்த கிளெய்டன் , பதறி பாய்ந்து குளத்தில் குதித்து சிறுவனைக் காப்பாற்றியிருக்கிறார் . போட்டோகிராபர் டேரன் ஹேட் பழக்கதோஷத்தில் இதனையும் இரு போட்டோக்களாக எடுத்தவர் , அதனை இணையத்தில் அப்லோட் செய்ய , உலகெங்கும் கிளெய்டனுக்கு கல்யாண வாழ்த்துக்களோடு எக்கச்சக்க பாராட்டுக்கள் கிடைக்க மனிதர் செம ஹேப்பி .   மில்க்‌ஷேக் மேஜிக் ! நாட்டில் ட்ரெண்டிங்கில் ஓடும் விஷயங்களோடு ஓடினால்தானே உலகம் நம்மை வானத்தைப்போல விஜயகாந்தைப் போல மதிக்கும் என்பதை கப

ஜாலிபிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! குதிரையில் பர்சேஸ் ! மெக்சிகோவின் அகாபுல்கோவிலுள்ள ஆக்‌ஷோ சூப்பர் மார்க்கெட்டில் கஸ்டமர் தனது வாகனத்தில் கடைக்குள்ளே வந்ததுதான் பெரும் சர்ச்சை . தனது குதிரையில் அமர்ந்தபடி கடைக்குள் வந்து பீர் பர்சேஸ் செய்ய முயன்றதுதான் கடைக்காரர்கள் பீதியானதற்கு காரணம் . பீரைக் கொடுத்து குதிரைக்காரரை அனுப்பியுள்ள வீடியோ இணையத்தில் வைல்டு ஹிட் . பொறுமையிழந்த நாய் ! பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நானைமோ பார்க்கில் ஒருவர் , தன் காரை தன் செல்ல நாயுடன் நிறுத்திவிட்டு உலாவச்சென்றார் . நாயும் எவ்வளவு நேரம் வெயிட் செய்யும் ? நாய் அடித்த ஹாரனில் பார்க்கே மிரண்டது . பின் செக் செய்து பார்த்ததில் அப்பாவியாக ஸ்டீரிங்கில் பாதம் வைத்திருந்த நாய்தான் ஓனரை டென்ஷனாகி அலர்ட் செய்திருக்கிறது என தெரிந்திருக்கிறது . ஜிக்ஸா சாதனை ! அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஜாக் ப்ரெய்ட் 6 அடி நீளம் , 22 அடி அகலம் கொண்ட டிஸ்னி ஜிக்ஸாவை மூன்று மாதங்களாக போராடி தீர்த்திருக்கிறார் . ஜெர்மனியின் ஜிக்ஸா நிபுணர் ராவன்பர்க்கரின் டிசைன் இது . 40,230 ஜிக்ஸா துண்டுகளை ஒன்றிணைத்து சாதனை படைத்த முதல் அ

கோமாளிமேடை ஸ்பெஷல்ஸ்!- ரோனி

படம்
இது ஜிஎஸ்டி பேபி !  இன்று ஊரின் வாய்க்கு கிடைத்த கிலோ கணக்கிலான அவல்   ஜிஎஸ்டி மேட்டர்தான் . கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை பின்னாளில் மக்கள் மறந்தாலும் ஜிஎஸ்டி என்ற பெயரை யாரும் மறக்கமுடியாதபடி ராஜஸ்தான் பெண்மணி செய்துவிட்டார் . அப்படி என்ன செய்தார் ? மாநிலத்திலேயே முதல் ஆளாக ஜிஎஸ்டி கட்டிவிட்டாரா ? இல்லை இது அதுக்கும் மேல் வேற லெவல் !   ராஜஸ்தானின் பேவா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஜூலை 1 அன்று நள்ளிரவு 12.02 மணிக்கு மிகச்சரியாக குழந்தை பிறந்தது . அதேசமயம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியும் அதிரடியாக அமலாகி ஊரே அதைப்பற்றி பேசத்தொடங்க , ஜிஎஸ்டியை விட ஃபேமஸாக வேறு பெயர் எதற்கு ? என தன் குழந்தைக்கும் ஜிஎஸ்டி என சிம்பிளாக பெயர் வைத்துவிட்டார் இந்த ராஜஸ்தான் தாய் . தகவல் கசிந்தால் விடுவார்களா காவி பாய்ஸ் ? உடனே ட்விட்டரில் வாழ்த்துகளை குவித்ததோடு , ஜிஎஸ்டியின் சக்திக்கு இதுவே சாட்சி என இக்குழந்தையின் பிறப்பையும் ராஜஸ்தான் மாநிலமே கொண்டாடத் தொடங்கிவிட்டதுதான் மிரட்டல் . தெறி பேபி !    இந்தியன்போலீசின் வீரச்செயல் ! மத்தியப்பிரதேசத

கோமாளிமேடை ஸ்பெஷல் - ரோனி பரௌன்

படம்
டான்ஸ் இந்தியா டான்ஸ் ! இந்தியர்களுக்கும் என்டர்டெயிண்மென்டுக்குமான உறவு ,   இதயமும் அது பம்ப் செய்யும் ரத்தமும் போல . பிராமிஸாக பிரிக்கவேமுடியாது . உ . பியிலும் அப்படித்தான் ஜாலி டான்ஸில் கொலக்குத்து டான்ஸ் போட்டிருக்கிறார்கள் . ஆனால் இந்தியா முழுக்க சர்ச்சையாகியுள்ளது . குத்து டான்ஸில் குழப்பமா ? உத்தரபிரதேசத்தின் மிர்ஸாபூரில் திருவிழா நடந்தது . விழாவுக்காக அங்குள்ள தொடக்கப்பள்ளிக்கு லீவு கொடுக்கப்பட்டு , அதன் சாவியை பஞ்சாயத்து தலைவர் முதல்நாளே சூதானமாக வாங்கிவைத்துவிட்டார் . எதற்கு தன்மகனின் பர்த்டே ட்ரீட்டுக்காகத்தான் . அப்புறம் என்ன ? அடுத்தநாள் ஐட்டம் கேர்ள்ஸ்களை கூட்டிவந்து பஞ்சாயத்து தலைவர் தன் மகனுக்கு பிறந்தநாள் பார்ட்டி டான்ஸ் நடத்தியதில் ஊரே மிரண்டு போனது . பிரச்னை பார்ட்டி அல்ல . நடத்திய இடம் ஸ்கூல் என்பதால் பலரும் ஷாக்காகி மூக்கு விடைக்க , கல்வி அதிகாரிக்கு பெட்டிஷனோடு வீடியோவையும் அட்டாச் செய்து அனுப்பிவிட்டனர் . என்கொய்ரி  ஆன் தி வே . பிள்ளைகளுக்கு டான்ஸ் கிளாஸ் எடுத்தோம்னு சொல்வாங்களோ ?      ரோல்மாடல் போலீஸ் சச்சின் !  இன்றைய வைரல் உலகில் ஒர

கோமாளிமேடை ஸ்பெஷல்ஸ் -ரோனி

படம்
Hotwater சேலஞ்ச் ! ப்ளூவேல் கேமில் இணைந்து பலரும் உயிரை விட்டுக்கொண்டிருக்க அடுத்ததாக புயலாக அமெரிக்காவில் ஹாட்டாக கிளம்பியிருக்கிறது Hotwater சேலஞ்ச் ! ஐஸ்பக்கெட் சேலஞ்ச் உள்ளிட்ட நோய்களுக்கான நிதிபிரசார விளையாட்டுகளைத் தாண்டி இணையத்தில் சுயவதையை தூண்டும் பிரசாரம் செய்யும் ட்ரெண்ட் திகுதிகுவென பரவி வருகிறது . ஹாட்வாட்டர் சேலஞ்சும் அப்படித்தான் . வெந்நீரை நன்கு காய்ச்சி , நண்பர்கள் மீது ஊற்றுவதுதான் கேம் பிளான் . அப்போது கைகால் வெந்துவிடுமே ? யெஸ் . அப்படி கதறி துடித்தால்தானே கேமில் அடுத்த லெவல் . அடுத்த லெவலில் வெந்நீரை இன்னும் பல நூறு செல்சியசில் கொதிக்கவைக்கவேண்டும் . அமெரிக்காவின் அர்கனாசில் வீட்டில் தூங்கிய சிறுவனின் முகத்தில் ஓவனில் கொதிக்க வைத்த வெந்நீரை கொட்டி ஊரையே பதறவைத்துள்ளான் அச்சிறுவனின் சக நண்பன் . இரண்டாவது சம்பவத்தில் 11 வயதான ஜாமோனிஷா ஹாட்வாட்டர் சேலஞ்சால் பாதிக்கப்பட்டு முகம் , தோள் எல்லாம் வெந்து ஆஸ்பிட்டலில் சேர்ந்துள்ளது உலகெங்கும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது . சூசைட் டூ சுமங்கலி பவ ! சினிமாவில்தான் இது சாத்தியம் . ஒருவரின் லைஃபில்

கோமாளிமேடை ஸ்பெஷல்! தொகுப்பு: ரோனி

படம்
ஃபேக்டரியை எரித்த அணில் ! வெற்றிக்கு அணிலாக உதவினேன் என்று சிலர் வெட்டிப் பெருமை பேசுவார்கள் . நிஜமாகவே அணில் உதவியா , உபத்திரமா என கீழேவரும் சீஸ் ஃபேக்டரி ஓனர்தான் சொல்லவேண்டும் . ஏன் ? அவருக்கு அணில் செய்த செய்வினை அப்படி . கனடாவின் பர்னபி பகுதியிலுள்ள ஸ்கார்டில்லோ சீஸ் ஃபேக்டரிதான் சம்பவம் நடந்த ஸ்பாட் .   காலை 9 மணிக்கு அப்பகுதியின் ஃபயர்சர்வீஸ் நிலைய அலாரம் ஒலித்தது . நெருப்புடா என பதறிய வீரர்கள் உடனே மின்னல் வேகத்தில் சீஸ் ஃபேக்டரியில் என்ட்ரியானார்கள் . என்ன ஆச்சு ? அணில்தான் . பல்லை வைத்துக்கொண்டு பழம் , பாதம் என தின்னாமல் முக்கிய பவர்லைனின் வயர்களை கடித்து வைக்க , ஃபேக்டரி முழுக்க தீ ஜம்மென்று பிடித்துவிட்டது . 4 வண்டிகள் , 15 ஃபயர் ஆட்கள் என 12 மணிநேரம் போராடி தீயை அணைத்ததில் சீஸ் செய்ய வைத்திருந்த 20 ஆயிரம் காலன் பாலும் காலி . இப்போ சொல்லுங்க , இதுக்கு மேலயும் அணிலைப் பார்த்தால் உங்களுக்கு பாசம் வருங்களா ஆபீசர் ? என்னை காப்பாத்துங்க அமைச்சரே ! குறைந்தபட்ச அமைச்சரவை அதிகபட்ச நிர்வாகம் என்ற லட்சியத்தில் அணுவளவும் பிறழாமல் மாதம் ஒரு வரி , மாதம்