ஜாலிபிட்ஸ்!




பிட்ஸ்!

குதிரையில் பர்சேஸ்!

மெக்சிகோவின் அகாபுல்கோவிலுள்ள ஆக்‌ஷோ சூப்பர் மார்க்கெட்டில் கஸ்டமர் தனது வாகனத்தில் கடைக்குள்ளே வந்ததுதான் பெரும் சர்ச்சை. தனது குதிரையில் அமர்ந்தபடி கடைக்குள் வந்து பீர் பர்சேஸ் செய்ய முயன்றதுதான் கடைக்காரர்கள் பீதியானதற்கு காரணம். பீரைக் கொடுத்து குதிரைக்காரரை அனுப்பியுள்ள வீடியோ இணையத்தில் வைல்டு ஹிட்.

பொறுமையிழந்த நாய்!

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நானைமோ பார்க்கில் ஒருவர், தன் காரை தன் செல்ல நாயுடன் நிறுத்திவிட்டு உலாவச்சென்றார். நாயும் எவ்வளவு நேரம் வெயிட் செய்யும்? நாய் அடித்த ஹாரனில் பார்க்கே மிரண்டது. பின் செக் செய்து பார்த்ததில் அப்பாவியாக ஸ்டீரிங்கில் பாதம் வைத்திருந்த நாய்தான் ஓனரை டென்ஷனாகி அலர்ட் செய்திருக்கிறது என தெரிந்திருக்கிறது.

ஜிக்ஸா சாதனை!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஜாக் ப்ரெய்ட் 6 அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட டிஸ்னி ஜிக்ஸாவை மூன்று மாதங்களாக போராடி தீர்த்திருக்கிறார். ஜெர்மனியின் ஜிக்ஸா நிபுணர் ராவன்பர்க்கரின் டிசைன் இது. 40,230 ஜிக்ஸா துண்டுகளை ஒன்றிணைத்து சாதனை படைத்த முதல் அமெரிக்கர் ஜாக்தான்.

குட்டிப்பெண்ணுடன் சேசிங்!


அமெரிக்காவின் இண்டியானாவைச் சேர்ந்தவர் பெண், கிராஸ் கவுண்டி பகுதியில் என் காரைக் காணோம் என ரிப்போர்ட் செய்தார். காரை திருடியது அவரது எட்டு வயது மகள்தான். 40 கி.மீ வேகத்தில் சென்ற காரை நிறுத்தச்சொல்லியும் அடமாக ஆக்சிலேட்டரை மிதித்த சுட்டிப்பெண்ணை காரின் மிரர் உடைத்து மீட்டிருக்கிறது ஆண்டர்சன் காவல்துறை.

தொகுப்பு:ரோனி&கோ